காவிரி விவகாரம்: தமிழக மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு| Dinamalar

காவிரி விவகாரம்: தமிழக மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் கர்நாடகா, கேரள மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட், நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பகிர்வில் பிரச்னைகாவிரி நீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, தமிழகம் - கர்நாடகா அரசுகளுக்கு இடையே, பிரச்னை இருந்து வருகிறது. இதுகுறித்து விசாரித்த, காவிரி நடுவர் மன்றம், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள மாநிலங்களுக்கு, காவிரியிலிருந்து, எவ்வளவு நீர், திறந்து விடப்பட வேண்டும் என்பதை வரையறை செய்து, தன் இறுதித் தீர்ப்பில் தெரிவித்தது.இந்த தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதற்காக, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதிகார அமைப்புஇந்த மனு, நீதிபதிகள், ஆர்.எம்.லோத்தா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதற்காக, தனி அதிகாரம் கொண்ட ஒரு அமைப்பை, தற்காலிகமாக ஏற்படுத்தலாமே' என, நீதிபதிகள், ஆலோசனை தெரிவித்தனர்.இதற்கு, கர்நாடகா அரசு சார்பில் ஆஜரான வக்கீல், கடும் ஆட்சேபம் தெரிவித்தார். மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல், "" சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை செயல்படுத்துவது குறித்து, நீர்வளத் துறை அமைச்சகத்திடம், சில விஷயங்களை கேட்டறிய வேண்டியுள்ளது. எனவே, இதுகுறித்து பதில் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை