Advertisement
முதல்வர் மம்தாவை தாக்கிய மாணவ அமைப்பினர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியை, டில்லியில் தாக்கிய, இந்திய மாணவர் கூட்டமைப்பான - எஸ்.எப்.ஐ., நிர்வாகிகள், ஆறு பேர், டில்லியில் நேற்று, கைது செய்யப்பட்டனர்.கோல்கட்டா பல்கலைக் கழகத்தின் மாணவர் பேரவை தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதைக் கண்டித்து, அந்நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது, சுதிப்தோ என்ற மாணவர் இறந்தார். அவர், போலீசாரால் அடித்து கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.அந்தச் சம்பவம் நடந்து, சில நாட்களுக்குப் பின், இம்மாதம், 9ம் தேதி, டில்லி, யோஜனா பவனில், திட்டக் கமிஷன் துணைத் தலைவர், மான்டேக் சிங் அலுவாலியாவை சந்திக்க, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியும், அவரது அமைச்சரவையின், நிதியமைச்சர், அமித் மிஸ்ராவும் சென்றனர். அவர்களை, எஸ்.எப்.ஐ., அமைப்பினர் முற்றுகையிட்டனர்; அப்போது, தான் தாக்கப்பட்டதாக, மம்தா கூறினார்.

அமித் மிஸ்ராவை, மாணவர்கள் தாக்கியது, "டிவி' காட்சிகளில் வெளியானது.இந்த சம்பவம் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில்குமார் ஷிண்டே, கடந்த வாரம் விசாரணைக்கு உத்தரவிட்டார். மம்தா மற்றும் அமித் மிஸ்ராவை தாக்கியதாக, "டிவி' காட்சி ஆதாரங்களின் அடிப்படையில், எஸ்.எப்.ஐ., நிர்வாகிகள், ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர்.அவர்களில், அந்த அமைப்பின், பொதுச் செயலர், ரிதாபரதா பண்டோபாத்யாயா மற்றும் இரண்டு பெண்கள் அடங்குவர். கைது செய்யப்பட்டவர்கள், பெருநகர மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்; அவர்களை, 5,000 ரொக்க ஜாமினில் மாஜிஸ்திரேட், ஆகாஷ் ஜெயின் விடுவித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundararaman - tiruchi,இந்தியா
23-ஏப்-201313:20:55 IST Report Abuse
r.sundararaman இவர்கள் கைது செய்தது கண்துடைப்புபோல் உள்ளது. ஒரு மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்களை தாக்குவது சாதாரண செயல் அல்ல. கொலைமுயற்சி வழக்குபோட்டு குண்டர் சட்டத்தில் ஓராண்டு ஜாமீனில் வெளிவராமல் செய்ய வேண்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-ஏப்-201310:07:03 IST Report Abuse
Lion Drsekar இதற்குப் பெயர்தான் வளர்த்த கடா மார்பில் பாயும் என்பது? வந்தே மாதரம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.