"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு ஒத்திவைத்தது சிறப்பு கோர்ட்| Dinamalar

"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கு ஒத்திவைத்தது சிறப்பு கோர்ட்

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி:"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கூடுதலாக செய்யப்பட்டது தொடர்பாக, பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குனர், சுனில் பார்தி மிட்டல் மற்றும் எஸ்சார் குரூப் உரிமையாளர், ரவி ருய்யா மீதான வழக்கு விசாரணையை, சிறப்பு கோர்ட், 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
கடந்த, 2002ம் ஆண்டு, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சியில், கூடுதல் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கியதில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், பார்தி ஏர்டெல் நிர்வாக இயக்குனர் சுனில் பார்தி மிட்டல், எஸ்சார் குரூப் உரிமையாளர் ரவி ருய்யா, ஹட்சிசன் மேக்ஸ் டெலிகாம் நிர்வாக இயக்குனர் அசிம் கோஷ் மற்றும் ஷியாமல் கோஷ் உட்பட, ஏழு பேர் மீதான குற்றச்சாட்டுக்கு, அடிப்படை ஆதாரம் உள்ளதாக கூறப்படுகிறது.இதையடுத்து, சுனில் மிட்டல், ரவி ருய்யா ஆகியோர் ஆஜர் ஆக, சிறப்பு கோர்ட் சம்மன் அனுப்பியது. ஆஜர் ஆவதற்கு இருவரும், தங்களுக்கு வழங்கப்பட்ட சம்மனை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இது, விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், சிறப்பு கோர்ட் விசாரணையும், சுப்ரீம் கோர்ட் விசாரணையும் ஒன்றோடு குறுக்கிடும் நிலை ஏற்பட்டது.

இதற்கிடையில், சுப்ரீம் கோர்ட்டில், சுனில் மிட்டல், ரவி ருய்யா மனுவை விசாரித்த நீதிபதிகளில், விக்ரமஜித் சென், வழக்கிலிருந்து விலகினார். பின், கடந்த, 18ம் தேதி விசாரணையின் போது, மற்றொரு நீதிபதி தவே விலகினார். இதனால், தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர், சிறப்பு கோர்ட்டில் நடைபெறும் விசாரணையை, 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கும்படி உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று சிறப்பு கோர்ட் கூடியது. மிட்டல், ருய்யா, ஷியாமல் கோஷ் ஆகியோர் ஆஜராகினர். சிறப்பு நீதிபதி சைனி பிறப்பித்த உத்தரவில், "சுப்ரீம் கோர்ட், 18ம் தேதி பிறப்பித்த உத்தரவுப்படி, இந்த விசாரணை, 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது' என குறிப்பிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை