"கேக்'கில் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பிய ஊழியர்| Dinamalar

"கேக்'கில் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பிய ஊழியர்

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லண்டன்:பிரிட்டனை சேர்ந்த குடியேற்றத்துறை ஊழியர், "கேக்'கில், ராஜினாமா கடிதத்தை எழுதி அனுப்பி வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.பிரிட்டனின், ஸ்டென்ஷெட் விமான நிலையத்தில், எல்லை பாதுகாப்புப் படையில் பணிபுரிந்தவர் கிரிஸ் ஹோம்ஸ். கடந்த, நான்கு ஆண்டுகளாக, குடியேற்றத்துறையில் வேலை செய்தார்.,சமீபத்தில், கிரிஸ், 31வது பிறந்த நாளைக் கொண்டாடினார். பிறந்த நாளையொட்டி, தன் அலுவலகத்திற்கு ஒரு "கேக்' அடங்கிய பெட்டியை அனுப்பினார்.

அதைத் திறந்து பார்த்த அதிகாரிகள் ஆச்சரியம் அடைந்தனர். அந்த கேக்கில், கிரிஸ், தன் ராஜினாமா கடிதத்தை எழுதியிருந்தார்.குழந்தை மற்றும் குடும்பத்திற்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்க விரும்பி, பதவியை ராஜினாமா செய்வதாக அதில் கிரிஸ் குறிப்பிட்டிருந்தார்.வித்தியாசமான இந்த கேக் குறித்து, "டிவிட்டர்' இணையதளத்தில், படத்துடன் செய்தி வெளியானது. ஒரு சில மணி நேரங்களில், உலகம் முழுவதும், இந்த வித்தியாசமான முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்ததால், கிரிஸ் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை