E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பள்ளி மீது தலிபான்கள் விஷ வாயு தாக்குதல் ஆப்கானிஸ்தானில் 74 மாணவியர் பாதிப்பு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

23 ஏப்
2013
01:47

காபூல்:ஆப்கானிஸ்தானில், பெண்கள் பள்ளிக்கூடம் மீது, தலிபான்கள், விஷ வாயு தாக்குதல் நடத்தியதில், 74 மாணவியர் மயக்கமடைந்தனர்.
படிக்க தடைஆப்கானிஸ்தான் நாட்டில், தலிபான்கள் ஆட்சியில் இருந்த போது, பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்தனர். "பர்தா அணியாமல் வீட்டை விட்டு செல்லக் கூடாது. பள்ளிக் கூடங்களுக்கு செல்லக் கூடாது' உள்ளிட்ட தடைகள், அமலில் இருந்தன.அமெரிக்க தாக்குதலுக்கு பின், தலிபான்கள் ஆட்சி ஒழிக்கப்பட்டு, ஹமீத் கர்சாய் தலைமையில், ஜனநாயக ஆட்சி நடக்கிறது.இருப்பினும், தலிபான்களின்
கட்டுப்பாட்டில் உள்ள தகார் உள்ளிட்ட மாகாணங்களில், பெண்கள் பள்ளிக்கூடம் செல்வதற்கு எதிர்ப்பு காணப்படுகிறது. பெண்கள் பள்ளிக்கூடங்கள் மீது, தலிபான்கள் தாக்குதல் நடத்துவதால், 550 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன.

இதனால், மூன்று லட்சம் மாணவியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தகார் மாகாணத்தின், தலுகான் நகரில், தடையை மீறி செயல்பட்ட பள்ளிகளின் குடிநீர் தொட்டியில் கடந்த ஆண்டு, விஷம் கலக்கப்பட்டதில், 700 மாணவியர் பாதிக்கப்பட்டனர். இதே போல ஆண்கள் படிக்கும் பள்ளியிலும், கடந்த ஆண்டு, விஷம் கலக்கப்பட்டதில், 200 மாணவர்யர் பாதிக்கப்பட்டனர்.நச்சு புகைஇதற்கிடையே தலுகான் நகரில், பீவி ஹாவா உயர்நிலை பள்ளியில், கடந்த, 18ம்தேதி, நச்சு புகை பரவியது. இதை சுவாசித்த மாணவியர் பலர் மயக்கமடைந்தனர். 74 மாணவியர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சில மாணவியரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.