சிக்னல் கோளாறு:ரயில்கள் தாமதம்| Dinamalar

தமிழ்நாடு

சிக்னல் கோளாறு:ரயில்கள் தாமதம்

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஏற்பட்ட சிக்னல் கோளாறு காரணமாக, ரயில்கள் 2 மணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தன.மதுரை ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் உள்ள சிக்னல், நேற்று மாலை 6.55 மணிக்கு பழுதடைந்தது. இதனால், ரயில்கள் ஸ்டேஷனுக்குள் நுழைய முடியவில்லை. தூத்துக்குடியில் இருந்து மதுரை வந்த (இரவு 7 மணி) மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பரங்குன்றத்தில் நிறுத்தப்பட்டது. இரவு 7.35 மணிக்கு வரும் நாகர்கோவில் - ஜம்முதாவி, 7.50க்கு வரும் ராமேஸ்வரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்களும், ஸ்டேஷனுக்கு முன்பாக நிறுத்தப்பட்டன. இரவு 8.45 மணிக்கு சிக்னல் சரியான பின்னரே, ரயில்கள் ஸ்டேஷனுக்குள் நுழைந்தன. இதனால், மதுரையில் இருந்து 8.45 மணிக்கு கிளம்ப வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில், "யார்டு' பகுதியில் இருந்து வரத்தாமதமானதால், முக்கால் மணி நேரம் தாமதமாக 9.30 மணிக்கு சென்னை கிளம்பியது. அதைத் தொடர்ந்து அனைத்து ரயில்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சென்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை