பைக் மீது மினி லாரி மோதல் : மூன்று பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மீது மினி லாரி மோதல் : மூன்று பேர் படுகாயம்

Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாவூர்சத்திரம்:பாவூர்சத்திரம் அருகே மோட்டார் பைக் மீது மினி லாரி மோதியதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.பாவூர்சத்திரம் ஆதாம்ஜெபமணி மகன் டேனியல்(21) இவர் தனது நண்பர்களான முத்துபாண்டி மகன் மாரிசெல்வன், செல்வராஜ் மகன் ஆலிசாமி ஆகிய மூன்று பேரும் ஒரே மோட்டார் பைக்கில் பாவூர்சத்திரத்திலிருந்து மகிழ்வண்ணநாதபுரத்திலிருந்து பாவூர்சத்திரத்திற்கு வந்துகொண்டிருந்தனர். மருதடியூர் விலக்கு அருகே வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த மினிலாரி மோட்டார் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டேனியல், மாரிசெல்வன், ஆலிசாமி ஆகிய மூவரையும் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுபற்றி தகவல் அறிந்த பாவூர்சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் வழக்கு பதிவு செய்து மினிலாரியை ஓட்டிவந்த கல்லூரணி சின்னதம்பிநாடார்பட்டியை சேர்ந்த ஞானமுத்து மகன் தங்கரத்தினம்குருசாமி(47) என்பவரை கைது செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை