வலிபர் கொலை| Dinamalar

வலிபர் கொலை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஆலங்குளம்:ஆலங்குளம் அருகேயுள்ள சிவலார்குளம் வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் கடற்கரை (எ) செண்டு மகன் குமார் (29). இவர் கடந்த 8 ஆண்டுகளாக அம்பையில் உள்ள தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 4வயதில் ஒரு மகன் உள்ளான். கணவன் - மனைவி இருவரும் சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் குமார் அவரது பெரியப்பா மகள் இந்திரா நேற்று முன்தினம் விஷம் குடித்து சிகிச்சைக்காக கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்துள்ளார். இதனால் துக்க வீட்டிலேயே குமார் இருந்துள்ளார். இரவு 9 மணியளவில் குமாரின் செல்போனுக்கு மர்ம நபர்கள் போன் செய்துள்ளனர். உடனே குமார் பைக்கில் சென்றவர் திரும்ப வரவில்லை. இதுகுறித்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் விசாரித்தும், தேடியும் வந்தும் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை சிவலார்குளத்திற்கு மேற்கே இவர் வெட்டுக்காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டிஎஸ்பி பொறுப்பு (நடராஜன்), இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சார்லஸ் கலைமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று குமார் உடலை கைப்பற்றி நெல்லை பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.பின்னர் விசாரணை நடத்திய போலீசார் நல்லூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் இசக்கிராஜ், முருகேசன் மகன் அலெக்ஸ், ஆறுமுகம் மகன் வசந்த், ஆலங்குளம் ராமர் மகன் ரவி ஆகிய 4பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் கொடுத்த தகவலின் படி ஆலடிப்பட்டியை சேர்ந்த விஜயன் என்பவரை தேடி வருகின்றனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.