கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி திருக்கல்யாணம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோலாகலமாக நடைபெற்றது மீனாட்சி திருக்கல்யாணம்

Updated : ஏப் 23, 2013 | Added : ஏப் 23, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

மதுரை:மதுரை அருள்மிகு மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கோயில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) காலை நடைபெற்றது.திருக்கல்யாணம் காலை 8.17 மணிக்கு மேல் 8.41 மணிக்குள் திருக்கோயில் வளாகத்தில் உள்ள மேல-வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர்.திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கலந்து கொள்கிறார். திருக்கல்யாணம் காலையில் முடிந்த நிலையில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து நடைபெறுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை