Advertisement
கால்நடை உற்பத்தி மேம்பாடு திட்டம் தமிழக அதிகாரிகள் பங்கேற்பு
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

திருநெல்வேலி:கால்நடை உற்பத்தி மேம்பாட்டு திட்டம் தொடர்பாக மலாவி நாட்டில் நடக்கும் கருத்தரங்கில் தமிழக அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், அமெரிக்கா மிக்சிகன் பல்கலைக் கழகம் மற்றும் தென் ஆப்பிரிக்கா மலாவி வேளாண்மை பல்கலைக் கழகம் ஆகியவை இணைந்து மலாவியில் கால்நடை பாதுகாப்பு திட்ட கருத்தரங்கு இன்றும் (23ம் தேதி), நாளையும் (24ம் தேதி) நடக்கிறது.இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக நெல்லை டீன் பிரதாபன், சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் அசோகன், உணவியல் துறை தலைவர் டாக்டர் பாலகிருஷ்ணன், மிக்சிகன் பல்கலைக் கழகம் டாக்டர் பிரவுன் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.மலாவி நாட்டில் கால்நடை உற்பத்தி, சிகிச்சை முறைகளை மேம்படுத்துவது தொடர்பாக உரிய கருத்துக்கள் விவாதிக்கப்படுகிறது. மக்கள் தேவைகளை ஆராய்ந்து அதற்கு ஏற்ற வகையில் தொழில் நுட்ப திட்டங்களை வடிவமைப்பது குறித்தும், இ-லேர்னிங் முறையை அமல்படுத்துவது குறித்தும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.தொடர்ந்து மலாவி நாட்டை சேர்ந்த கால்நடை வல்லுனர்கள், ஆராய்ச்சியாளர்கள், மருத்துவர்கள் இந்தியாவுக்கு வந்து இங்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்ளவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.