இருப்பு கோவிலில் 3ம் தேதி செடல் உற்சவம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருப்பு கோவிலில் 3ம் தேதி செடல் உற்சவம்

Added : ஏப் 29, 2013

கம்மாபுரம்:இருப்பு பிடாரி அரசியம்மன் கோவிலில், வரும் 3ம் தேதி செடல், தேர் திருவிழா நடக்கிறது. கம்மாபுரம் அடுத்த இருப்பு பிடாரி அரசியம்மன் கோவில் பிரமேற்சவ விழா கடந்த 18ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் அபிஷேக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. 2ம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு மேல் அம்மன் திருக்கல்யாணம், 11:00 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
வரும் 3ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு செடல் உற்சவம், காவடி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணிக்கு அம்மன் திருத்தேர் உற்சவமும் நடக்கிறது. 4ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 5ம் தேதி விடையாற்றி உற்சவம் நடக்கிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X