Karnataka votes amid tight security | கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் அமைதியான ஓட்டுப்பதிவு| Dinamalar

கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் அமைதியான ஓட்டுப்பதிவு

Updated : மே 05, 2013 | Added : மே 05, 2013
Advertisement
கர்நாடகாவில் பலத்த பாதுகாப்புடன் அமைதியான ஓட்டுப்பதிவு

பெங்களூரு: பெங்களூருவில் பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. மாலை 6 மணியுடன் முடிவுற்ற நிலையில் 66.81 சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. ஓட்டு எண்ணிக்கை, வரும், 8ம் தேதி நடக்கிறது.

கர்நாடகாவில், 2008ம் ஆண்டு நடந்த தேர்தலில், பா.ஜ., 110 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று, சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. ஆனால், ஐந்தாண்டுகளை கடந்து வருவதற்குள் படாதபாடுபட்டது.முன்னாள் முதல்வர் எடியூரப்பா, பா.ஜ.,விலிருந்து விலகி, கர்நாடக ஜனதாகட்சியை துவக்கி போட்டியிட்டார். காங்கிரஸ், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதாதளம், பி.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி மற்றும்கம்யூனிஸ்ட் கட்சிகளும் களத்தில் நிற்கின்றன.

கர்நாடகாவில், இதுவரை நடந்த தேர்தல்களை விட, இம்முறை வித்தியாசமாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தமுள்ள, 223 தொகுதிகளில், 2,948 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாநிலம் முழுவதும், 52 ஆயிரத்து, 34 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 2008 தேர்தலை காட்டிலும், 6,000 ஓட்டுச்சாவடிகள் இம்முறை கூடுதலாக அமைக்கப்பட்டிருந்தன. மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 79 ஆயிரத்து 364 பயன்படுத்தப்பட்டன. சமீபத்தில், பெங்களூருவில் குண்டு வெடிப்பு நடந்ததால், தேர்தலை பாதுகாப்பாக நடத்த, முன் எப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.மத்திய பாதுகாப்பு படை போலீசார் உட்பட, மொத்தம், 1.35 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ரூ.200 கோடி:ஓட்டுப்பதிவு இன்று காலை, 7:00 மணியில் இருந்து மாலை, 6:00 மணி வரை நடைபெற்றது.தேர்தல் செலவுகளுக்காக, மாநில அரசு, 200 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில், 175 கோடி ரூபாய் வரை செலவிடப்படலாம். தேர்தல் விதிமுறைகளை மீறி, 2,500 சம்பவங்கள் நடந்துள்ளன. 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.தேர்தல் தினத்தன்று அரசியல் ரீதியான கருத்துகளையோ, பேட்டிகளையோ வெளியிடாமல், வாக்காளர்கள் சுயமாக தீர்மானிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று, மாநில தேர்தல் அதிகாரி அனில்குமார் ஜா உத்தரவிட்டிருந்தார்.வாக்காளர்களுக்கான பூத் சிலிப்களை, தேர்தல் கமிஷனே நேரடியாக வழங்கியது. மேலும் கடுமையான வெயில் காரணமாக தேர்தல் நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது.

ஓட்டுப்பதிவு மந்தம்: இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் ஓட்டுப்பதிவு துவங்கியது. ஆனால் வாக்காளர்கள் அதிகளவில் வரவில்லை. ஓட்டுப்பதிவும் மந்தமாக இருந்தது காலை 10 மணி வரை 10 சதவீத ஒட்டுக்களே பதிவாகியிருந்தன.

4 பேர் கைது: கோலார் தங்க வயல் பகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கும், சுயேட்சை வேட்பாளருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். . ஓட்டுப்பதிவு முடிவின் போது 66.81சதவீத ஓட்டுக்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறினார். தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் வரும் 8ம் தேதி எண்ணப்படுகின்றன.

பா.ஜ., நம்பிக்கை: மீண்டும் கர்நாடகாவில் தனித்து ஆட்சியை பிடிப்போம் என அக்கட்சி மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு கூறினார். யாருடைய ஆதரவின்றி ஆட்சி அமைப்போம் என கூறினார்.

மக்கள் பாதிப்பு: பா.ஜ.,வின் மோசமான ஆட்சி மற்றும் நிர்வாகம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X