Advertisement
சிறையில் தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 மே
2013
10:57
பதிவு செய்த நாள்
மே 06,2013 00:08

திருச்சி: அக்னி நட்சத்திர வெயில் காரணமாக, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தயிர் சாதத்தை விரும்பி சாப்பிடுகிறார்.
மரக்காணம் கலவரம் தொடர்பாக, விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது கட்சியினர், 520 பேர், கைது செய்யப்பட்டு, கடந்த, 1ம் தேதி அதிகாலை, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விழுப்புரம் நீதிமன்றம் ராமதாசுக்கு ஜாமின் வழங்கிய போதும், 2012ம் ஆண்டு மற்றும் தற்போது நடந்த மாமல்லபுரம் சித்திரை திருவிழாவில், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பது போல பேசியதற்காக, ராமதாஸ் மீது மேலும், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இவ்விரு வழக்குகளில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். தொடர்ந்து, மதுரையில், ரஜினி ரசிகர் தாக்கப்பட்ட வழக்கு, கூடங்குளம் இடிந்தகரையில் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்குகளில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பா.ம.க., தலைவர் மணிக்கு, விழுப்புரம் நீதிமன்றம், ஜாமின் வழங்கிய போதும், மாமல்லபுரம் சித்திரை திருவிழா தொடர்பாக, அவர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் தொடர்ந்து அடைக்கப்பட்டுள்ளார்.
* தயிர் சாதம் சாப்பிடும் ராமதாஸ்:திருச்சி மத்திய சிறையில் உள்ள பழைய மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமதாசுக்கு, முதல் வகுப்பு வழங்கப்பட்டுள்ளது. காலையில் எழுந்தவுடன், தினசரி பத்திரிகைள் மற்றும் வாரப் பத்திரிகைகள் படிக்கிறார்.
காலை உணவாக, சப்பாத்தியுடன் குருமா சாப்பிடுகிறார். திருச்சியில் அக்னி நட்சத்திர வெயில் கடுமையாக இருக்கிறது. இதனால், மதிய உணவாக, ரசம் மற்றும் தயிர்சாதம் மட்டுமே விரும்பி சாப்பிடுகிறார். மாலையில் சிறை முன், சற்று நேரம் உலாவுகிறார். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் குறித்து அவரே சோதித்துக் கொள்கிறார். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் அதிகமாக இருந்தால், சிறையில் உள்ள மருத்துவக்குழுவிடம் உரிய சிகிச்சை மேற்கொள்கிறார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சிறையில் உள்ளவர்களின் குழந்தைகள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், பார்வையாளர்கள் யாரும் ராமதாசை சந்திக்கவில்லை.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (177)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vijayasarathi - arakkonam,இந்தியா
07-மே-201301:58:53 IST Report Abuse
vijayasarathi டியர் PAMAKA FRIS PLEASE வன்முறையை கை விட்டு விட்டு ,அர வழிEல் PORATTAM நடத்துங்கள் COMPARE TO GANDHIGI,அரசு போதுசொதுக்களையும்,மரங்களையும் வெட்டாதீர்கள்,இதனால் பதிக்க படுபவர்கள் பொது மக்கள் மட்டுமே இதனால் பலர் VELAIKKU PAYANDU SELGINDRANAR ,ரேகர்ட்ஸ் VIJAYASARATHI
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Venkat Ram - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-மே-201316:40:15 IST Report Abuse
Venkat Ram எனக்கு தெரிந்தவரை உண்மை பேசி நல்லதை சொல்லும் நல்ல மனிதர் , மற்ற தலைவர்களை விட மேலானவர்
Rate this:
120 members
3 members
37 members
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
07-மே-201309:52:17 IST Report Abuse
Narayan Arunachalamஅவரது நடவடிக்கைகளை பார்த்தல் உண்மை பேசுபவராக தெரியவில்லை... அவர் பேசிய முதல் பொய்..." என் குடும்பத்தினர் யாரவது முக்கிய பதவி ஏற்றால் என்னை முச்சந்தியில் நிற்க வைத்து.... அடியுங்கள் என்று சொன்னவர்... நல்லதை சொன்னாலும் ( மது விலக்கு) அவரது மரம் வெட்டி தொண்டர்களை அடக்காமல் இருப்பது...கேள்விக்குரியது...
Rate this:
2 members
0 members
14 members
Share this comment
Arumugam - Paris,பிரான்ஸ்
10-மே-201302:17:24 IST Report Abuse
Arumugamமதுவிலக்கு கோரிக்கை தவறானது. இதனால் கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பலனடைவர். அதை குடிப்பவர் இறப்பர். காய்ச்சுபவர் போலிசுக்கு லஞ்சம் கொடுப்பார். நிதி பற்றா குறையினால் அரசு பல நல்ல காரியங்களை செய்ய முடியாமல் ஆகிவிடும். ஐரோப்பிய நாடுகளில் மது விலக்கு இல்லை. ஆனால் அவர்கள் குடித்து நாசமாவது இல்லை. அங்கு எல்லோரும் குடிப்பதும் இல்லை. மனக்கட்டுப்பாடு உள்ள மனிதன் தவறு செய்வதில்லை. குடிப்பதும், குடிக்காமல் இருப்பதும் அவரவர் இஷ்டம். மது விலக்கு கோரிக்கையை எல்லோரும் ஒப்பு கொள்ள மாட்டார்கள். ஆகவேதான் தமிழக அரசு இவர்களுடைய இந்த கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை. இவர்கள் மது கடையை மூட போராட்டம் செய்தது வீண். அதற்கு பதிலாக சாதி இல்லா கொள்கை, சாதி சான்றிதழை புறக்கணித்தல், சாதி அடிப்படையில் முன்னுரிமை கேட்பதை தவிர்த்து, தமிழர்களுடைய ஒற்றுமைக்கு பாடுபட்டிருந்தால் பலரும் பாராட்டியிருப்பர்....
Rate this:
2 members
0 members
4 members
Share this comment
Cancel
Vinod K - London,யுனைடெட் கிங்டம்
06-மே-201316:03:49 IST Report Abuse
Vinod K இவர் மட்டுமாங்க சாப்பிடறார், சிறையில் அனைவரும் உண்கின்றனர். ஏன் இதை எல்லாம் முக்கிய செய்தியாக போட்டு சுமார் 120 பேர் கருத்து கூறும் நேரத்தை செலவழிகிரீர்கள் ஆசிரியர் அவர்களே? இதுவும் செய்தின்னு எழுதாதிங்க. ஆக்கபூர்வமானவற்றையே மலர் எப்போதும் எழுதும் என்று நம்பும் வாசகன்
Rate this:
15 members
1 members
70 members
Share this comment
Cancel
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
06-மே-201315:58:02 IST Report Abuse
Ravi Ramanujam மறக்கானத்தை ஒட்டிய பகுதிகளில் பெரும்பாலான மக்கள் ஒரு வேளை சோற்றுக்கே திண்டாடும்போது இவருக்கு தயிர் சாதமே பெருசு தான்
Rate this:
12 members
0 members
68 members
Share this comment
Cancel
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
06-மே-201315:33:38 IST Report Abuse
Silambarasan இங்கே பலர் தயிர் சாதம் கூட தரகூடாது பட்டினி போடுங்கள் என்று தங்களுடிய சாதி எதிர்ப்பை வெளிபடுத்துகிறார்கள். ஆனால் ராமதசுவின் கைதை தாங்காமல் திருவண்ணாமலை சேர்ந்த ஒரு இளைஞன் தீக்குளித்து உயிர் விட்டுள்ளார். ஆக ராமதாசுக்கு எதிர்ப்பு தினமலர் மூலம் ஏறிக்கொண்டே போகிறது. ஆதரவு எப்படியோ கூடி வருவதும் நம்ப முடியவில்லை.
Rate this:
26 members
4 members
24 members
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
07-மே-201301:55:53 IST Report Abuse
சாமிதிருவண்ணாமலை சேர்ந்த ஒரு இளைஞன் தீக்குளித்து உயிர் விட்டுள்ளார்.அவனை விலைக்கு வாங்கி கொளுத்தியிருப்பார்கள் ராமதாஸ்க்காக ஒருவன் உன்மையிலையே சாகமாட்டான்...
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
Narayan Arunachalam - DELHI,இந்தியா
07-மே-201309:53:50 IST Report Abuse
Narayan Arunachalamஅப்படியே தீகுளிதாலும் அது பரிதாபத்துக்குரிய விஷயம் அல்ல... அவரது அறிவின்மை... கொள்கை இல்லாத எந்த ஒரு கட்சிக்காகவும் ஒருவன் தீக்குளிப்பது முட்டாள்தனமான செயல்...
Rate this:
1 members
0 members
10 members
Share this comment
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
07-மே-201311:56:23 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்ததைப்போல் முட்டாள் தனமான விஷயம்....
Rate this:
1 members
0 members
9 members
Share this comment
Cancel
Sam - Chennai,இந்தியா
06-மே-201315:20:44 IST Report Abuse
Sam ஜாதி என்கிற ஒன்னு இருக்குற வர தமிழ்நாடு ஒன்னு சேராது. காவேரி பிரச்சனை இல்ல, ஒரு சின்ன கக்கூஸ் பிரச்சனைய கூட சரி பண்ண முடியாது. என்னோட கல்லூரி நண்பர்கள் சிலர், நாங்கள் படித்து கொண்டிருக்கும் போது அவங்க என்ன ஜாதி னுலாம் எனக்கு தெரியாது. அவங்க ஒரு பொழுதும் அதை காட்டி கொண்டதே இல்லை. ஆனா படிச்சு முடிச்சு அஞ்சு வருஷம் கழிச்சு இப்ப facebook ல பாத்தா ஒருத்தன் தலைவர் ராமதாஸ் அய்யா வாழ்க ங்கறான், தலைவா Hats-off ங்கறான், இன்னொருத்தன் சிவசேனா வாழ்க ங்கறான். கல்லூரி படிக்கும் போது ஜாதி உணர்வு இல்லாது இருந்தவர்களை இது போன்ற 'so called' தலைவர்கள் அவங்கள ஜாதி உணர்வ ஊட்டி கெடுக்குறாங்க.
Rate this:
3 members
0 members
66 members
Share this comment
Berlioz Lyautey - paris,பிரான்ஸ்
09-மே-201300:56:45 IST Report Abuse
Berlioz Lyauteyஉங்களுடைய கருத்து முற்றிலும் உண்மையானது படித்த மனிதர்களிடும் ஜாதிவெறி மன்னிக்கமுடியாத ஒன்று ...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
Kannan Karaikudi - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
06-மே-201315:17:42 IST Report Abuse
Kannan Karaikudi எந்த ஜாதிக்காரனுக்கும், இது போல் கூட்டம் போட அனுமதி வழங்கக்கூடாது. தென் தமிழகத்தில் குரு பூஜை என்று இந்த மரவர் கூட்டம் போடுவாங்க.. கூட்டமா போடுறாங்க... அவுங்க போர வழியெல்லாம் செய்யும் கொடுமை இருக்கிறதே தாங்க முடியாதுங்க. அதே போல் பரையர்/பள்ளர் அவர்கள் மற்றவர்களை என்னைப்பற்றி எது சொன்னாலும் கேஸ் போட்டுவிடுவேன் கேஸ்போட்டு விடுவேன் என்ற பயமுறுத்தல். எதையும் தைரியமாக செய்யக்கூடிய நம் முதல்வர் இந்த ஜாதி கூட்டங்களை அடியோடு நிறுத்த ஒரு சட்டம் போட வேண்டும். அப்போது தான் இந்த ஜாதி வெறியர்களின் கொட்டம் அடங்கும்.
Rate this:
4 members
1 members
66 members
Share this comment
Cancel
Srini - New Delhi,இந்தியா
06-மே-201315:05:29 IST Report Abuse
Srini Do not give undue importance to this guy. He should be kicked on his rear for misguiding his community people. I wonder, how people blindly believe this demagog. One poor guy gave up his precious life without understanding the politics. More or less, law and order problem in TN is under control and people are civilized and abide by rules. This guy is creating problem and he cannot respect the co-existence people other race in the state. What ambition he carries ahead of his life. I request people who support this guy, should understand his malicious intention before going berserk. Do not damage public property and do you protest, if you are aggrieved, silently.
Rate this:
1 members
0 members
33 members
Share this comment
Cancel
Anwar ali - havana,கியூபா
06-மே-201314:49:45 IST Report Abuse
Anwar ali அய்யாவுக்கு ஊறுகாயும் குடுங்க , விக்கிக்க போகுது .
Rate this:
4 members
1 members
48 members
Share this comment
Cancel
Ashokkumar - Ariyalur,இந்தியா
06-மே-201314:24:23 IST Report Abuse
Ashokkumar ஜாதி மோதலை உருவாக்கி இரு இன மக்களுக்குமிடையே பூசலை வரவைத்து குளிர் காய்ந்து கொண்டிருப்பவர் ஜெயலலிதாதான். பிணை கொடுக்கப்பட்ட பிறகும் எப்பொழுதோ பேசிய பேச்சுக்காக தற்போது கைது நாடகம் எதற்காக தமிழ்நாட்டில் அமைதியை விரும்பாத முதல்வர் இருப்பது வேதனையாக இருக்கிறது. தற்போது நடந்துவரும் கலவரங்களுக்கு காரணம் முதல்வரின் அரசியல் முதிர்ச்சியின்மையே. மாற்று கட்சியினரை பழிவாங்கும் போக்கை கைவிடவேண்டும். காவல் துறையை ஏவல் அடிமைகளாக பயன்படுத்துவது வெட்கி தலைகுனியவேண்டிய செயல். அதிகார துஷ்பிரயோகத்தின் உச்சகட்டம்.
Rate this:
54 members
2 members
26 members
Share this comment
Pattern Global - Newark,யூ.எஸ்.ஏ
08-மே-201311:11:41 IST Report Abuse
Pattern Globalஜெயலிதா எங்கே ஜாதி பூசலை தூண்டி விட்டார். சொல்லும் போது கொஞ்சமாவது பொருத்தமாக சொல்ல வேண்டும். வன்னிய ஜாதி தலைவர் என்று கூறி கொள்ளும் ராமதாஸ் பத்து கோடி தமிழர்களுக்கு முதல்வர் ஆக துடிப்பது ஏனோ....
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.