Strict rules for relegious and caste meetings | ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜாதி, மத கூட்டங்களுக்கு இனி "கெடுபிடி'வரும்: போலீசார் தீவிர ஆலோசனை

Updated : மே 06, 2013 | Added : மே 06, 2013 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
Caste, religious meetings anymore, "Cold 'which collects advice *

பா.ம.க.,வினருக்கு கூட்டம் நடத்த அனுமதியளித்து, கற்றுக் கொண்ட பாடத்தால், தமிழகத்தில், மாநாடு, கூட்டம் நடத்தும் அனைத்து தரப்பினருக்கும், கடுமையான விதிகளை, தமிழக போலீஸ் அமல் படுத்த உள்ளதாக தெரிகிறது. ஜாதி, மத அமைப்புகள் இனி கூட்டம் நடத்தும் முன் உத்தரவாதம் தர வேண்டிய நிலை ஏற்படலாம்.

அரசியல் கட்சிகளோ, அமைப்புகளோ, திருவிழா, கூட்டம், மாநாடு என எதை நடத்துவதாக இருந்தாலும், போலீசில் முறையான அனுமதி பெற வேண்டும். சில நேரங்களில், கலெக்டர் அலுவலகத்திலும் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. அனுமதியளிக்கும் போது, பாதுகாப்பு, வாகன போக்குவரத்து உள்ளிட்டவற்றில் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. நிபந்தனைகள் மீறப்படும் போது, நடவடிக்கை எடுக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்படுகிறது.
மத ரீதியாக, ஜாதி ரீதியாக நடத்தப்படும் கூட்டங்கள், ஊர்வலங்களில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. சமீபத்தில், விடுதலைச் சிறுத்தைகள் நடத்திய மாநாடு மற்றும் ஊர்வலம் தொடர்பாக, போலீசார் அனுமதி மறுத்த போது, கோர்ட் உத்தரவு பெறப்பட்டது. அப்போது, விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டு, அனுமதி வழங்கியது.
தொடர்ந்து, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்திய, சித்திரை விழாவிற்கும், பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பாக, இரவு 10:00 மணிக்கு மேல் கூட்டம் நடத்தக் கூடாது; வன்முறையை தூண்டும்படி பேசக் கூடாது; செல்லும் வழியில் வன்முறை கூடாது போன்றவை வலியுறுத்தப்பட்டு, அனுமதி கேட்டவர்களுக்கு, இது தொடர்பாக உத்தரவும் வழங்கப்பட்டிருந்தது.
இருந்தாலும், விழா நடத்தப்பட்ட போது, விழா ஏற்பாட்டாளர்களும், கலந்து கொண்ட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்களும் இதனை பின்பற்றவில்லை என்பது தான் பிரச்னைக்கு காரணமாக அமைந்துள்ளது. கூட்டம் துவங்கியது முதல், இரவு 10:00 மணிக்குள் முடிக்க வேண்டும் என்பதை, போலீசார், தொடர்ந்து வலியுறுத்தி வந்துள் ளனர். போலீசாரின் நிபந்தனைகளை மீற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் இருந்த,அவர்கள்,போலீசாரின் வேண்டு கோளையும் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள், எல்லை மீறிப் போனதால், இனி, எவருக்கும் தயவு காட்டக் கூடாது என்பதில், தமிழக காவல் துறை உறுதியாக உள்ளது.
இதனால், சாதாரணமாக சிறு நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்புகள், கட்சிகளுக்கு கூட நிபந்தனைகள் கடுமையாக்கப்படும் ‹ழல் உருவாகியுள்ளது. ஜாதி, மத சம்பந்தமான கூட்டங்கள், அது நடைபெறும் இடங்கள், அக்கூட்டங்களில் பேசும் தலைவர்கள், உட்பட எல்லா விஷயங்களிலும், சம்பந்தப்பட்டவர்களிடம் முன்னெச்சரிக்கை உத்தரவாதம் பெற்று, அனுமதி தர, வழிவகைகள் கண்டறிய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மரக்காணத்தில் வன்முறை நடந்ததால், நிகழ்ச்சி முடிந்து திரும்பி செல்லும் போது, மீண்டும் பிரச்னை ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். இதுகுறித்து, அவர்களுக்கு பலமுறை எச்சரித்தும், அவர்கள் கேட்கவே இல்லை. பா.ம.க.,வினர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நடந்து வரும் சம்பவங்களில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், இனி வரும் காலங்களில், இது போன்று பொதுக்கூட்டம், மாநாடு நடத்துவோருக்கு, கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனை இப்போதிருந்தே நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
-நமது நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
michael raj - kanyakumari,இந்தியா
11-மே-201309:40:06 IST Report Abuse
michael raj ஜாதிய வச்சி பிரச்சனை பண்ணுகிற, அரசியல் பண்ணுகிற இவர்கள் எல்லாம் எப்படி தமிழ் இனத்தை காப்பாத்த போறாங்க.
Rate this:
Share this comment
Cancel
Ananth - Thoothukudi,இந்தியா
09-மே-201312:47:36 IST Report Abuse
Ananth முதலில் அரசாங்கம் ஜாதி மற்றும் மத ரீதி யாக உள்ள இட ஒதுகீட்டை ரத்து செய்தால் தான் ஜாதி ஒழியும், அதை விட்டு விட்டு சமத்துவ கவிதைகள், சமத்துவபுரம் mattum பேசினால் ஒழிக்க முடியாது .. மேலும் அரசியல் கட்சி களே ஜாதி யை பார்த்து தான் தேர்தலில் ஒருவருக்கு வாய்பு கொடுகிறது. அதனால் முதலில் அரசியல் கட்சியை தடை செய்தாலே ஜாதி ஒழிந்து விடும் .
Rate this:
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
06-மே-201315:16:15 IST Report Abuse
Ashok ,India ஜாதி,மத கூட்டங்கள் மட்டுமல்ல அரசியல் கட்சிகளின் கூட்டங்களும் இனி நடத்த தடை விதிக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடத்த அரசும்/நீதிமன்றம் ஆணையிட வேண்டும். இன்றைக்கு உள்ள தொலை தொடர்பு சாதனங்கள் மூலம் கட்சிகள் தங்கள் கூட்டத்தை நடத்த வேண்டும். நாடு ரோட்டில் குழி தோண்டி கட்சி கொடி நட்டு, மக்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இன்டர்நெட் மூலம் கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பலாம். அப்படியேகட்டாயமாக கூட்டம் நடத்த வேண்டுமானால் கண்மாய்,குளம்,ஏரிகளில் கூட்டம் நடத்த அனுமதித்தால் நீர் வள ஆதாரங்கள் தூய்மையாக்க படும். இதனால் மக்களுக்கு பயன் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Unmai Vilambi - Ambasamudram,இந்தியா
06-மே-201314:04:15 IST Report Abuse
Unmai Vilambi கடந்த ஏப்ரல் மாதம் 21 ம் தேதி லட்சக் கணக்கான மக்கள் கூடிய சேனைத்தலைவர் மாநில மாநாடு திருநெல்வேலியில் எவ்வித சிறு அசம்பாவித சம்பவங்களும் இன்றி நடந்து முடிந்துள்ளது எனவே எல்லா ஜாதி சங்கங்களுக்கும் தடை என்று சொல்வது சரியல்ல. தங்கள் கருத்துக்களை அமைதி வழியில் சொல்வதற்கு வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
06-மே-201313:38:33 IST Report Abuse
Gopi ஒரு அன்பர் கருத்தை பதிவு செய்தது போல் எந்த ஒரு மாநாடு பேரணிக்கும் ஒருகோடி டெபொசிட்டு செய்துவிட்டு அந்த இயக்கங்கள் தங்கள் நிகழ்சிகளை நடத்தலாம். இதனால் இழப்பு ஏற்படும் பட்சத்தில் அதை பாதிப்போருக்கு கொடுத்துவிடலாம். இந்த முறை வம்பு வழக்கு அரசியல்வாதிகளுக்கும் ஜாதி அமைபிர்க்கும் கிடுக்கு பிடியாய் இருக்கும்
Rate this:
Share this comment
Mohamed Nasrudeen - Ramanathapuram,இந்தியா
09-மே-201310:40:36 IST Report Abuse
Mohamed Nasrudeenகுஞ்சு கௌண்டர் கற்பழிப்பதற்கு முன்னாலேயே ..பஞ்சாயத்துக்கு 1000 ருபாய் அபதாரம் கட்டீடாறுங்ரமாதிரி சொல்றீங்க ......
Rate this:
Share this comment
Cancel
human being - chennai,இந்தியா
06-மே-201313:29:09 IST Report Abuse
human being வணக்கம், எந்த கட்சி தலைவரை கைது செய்தாலும் இம்மாதிரியான சேதங்கள் இருக்கத்தான் செய்யும். இது தமிழகம் அல்லவே இது தெரிந்தும் அரசு தேவையற்ற, பல வருடம் முன் நடந்த நிகழ்வுகளுக்கு இப்பொழுது வழக்கு ஜோடித்து பொது சொத்துக்கு சேதம் விளைவித்து வருகிறது. இந்நிலையில் யார் தவறு செய்தலும் அது பதிக்கப்பட்டவருக்கே பங்கமாக முடிகிறது. படித்தவர்கள் சிந்தியுங்கள் பொதுப்படியாக.
Rate this:
Share this comment
Cancel
Victor George - Chennai,இந்தியா
06-மே-201313:15:49 IST Report Abuse
Victor George முதலில் சாதி கட்சிகளை தடை செய்யுங்கள்... அதை செய்தாலே இங்கே பாதி பிரச்சணைகள் தீர்ந்து விடும்..
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
06-மே-201312:28:34 IST Report Abuse
Thangairaja சாதி மறுப்பு கொள்கைகளுக்கு தமிழக மக்கள் ஆதரவளித்து வந்த போது மனிதம் தழைத்தது........மீண்டும் சாதீய அரசியலுக்கு வெற்றி கிடைத்ததால் பேருந்துகள் நொறுங்குகின்றன.
Rate this:
Share this comment
Cancel
sumugan - bangalore,இந்தியா
06-மே-201312:20:26 IST Report Abuse
sumugan ஜாதி என்ற கொள்கைகள் தமிழ் மக்களுக்கு, வெளியே இருந்து வந்தவர்கள் புகுத்தி, அவர்கள் தமிழ் மக்களை ஆளுவதற்கு செய்யப்பட்ட தந்திரம் ..... நாள்அடைவில் அதுவே (ஜாதி) தமிழ் மக்களுக்கு பிடித்து...இப்போது இப்படி
Rate this:
Share this comment
KUNDRATTHU BAALAA - MARUTHAI,இந்தியா
09-மே-201311:26:07 IST Report Abuse
 KUNDRATTHU BAALAAஉங்க புத்தி எங்க போச்சு.. அல்லது புத்தியே இல்லையா.....
Rate this:
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
06-மே-201312:19:28 IST Report Abuse
Kumaresan P நல்ல விஷயம்... முதலில் செயல் படுதுங்க சார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை