E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அனுமதி பெறாத கட்டிடங்களால் அரசுக்கு ரூ.30,000 கோடி இழப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

06 மே
2013
14:08
பதிவு செய்த நாள்
மே 06,2013 00:40

சேலம்:தமிழகத்தில் அரசின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு, ஒரு மாதத்துக்குள் அனுமதி பெற வேண்டும், என நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கோவையில், சில வாரங்களுக்கு முன் நடந்த தீ விபத்தை அடுத்து, அங்கு, 187 அனுமதி பெறாத கட்டிடங்களுக்கு "சீல்' வைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதே போல், தமிழகம் முழுவதும் உள்ளூர் திட்டக்குழுமம், நகர ஊரமைப்பு துறைகளில் அனுமதி பெறாத கட்டிடங்கள் குறித்த கணக்கெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டது.இதில், ஊரக நகரமைப்பு துறையின் சேலம், கோயமுத்தூர், வேலூர், தர்மபுரி, திருச்சி, தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டல அலுவலகங்களின் மூலம் அனுமதி பெறாத கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டது.
உள்ளூர் திட்டக்குழுமத்தின் சார்பிலும், அனுமதி பெறாத கட்டிடங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் துவங்கியது. தமிழகம் முழுவதும் உள்ளூர் திட்டக்குழுமம், நகர ஊரமைப்பு துறைகளின் அனுமதி பெறாமல், பஞ்சாயத்து, டவுன் பஞ்சாயத்து, நகராட்சி, மாநகாரட்சியின் அனுமதி மட்டும் பெற்று, துறை அனுமதியை பெறாமல் பல கட்டிடங்கள் செயல்பாட்டில் இருப்பது தெரிய வந்தது.தமிழகத்தில், 1,800 கல்லூரிகள், 2,140 பள்ளிகள், 825 பாராமெடிக்கல் கல்லூரிகள், 620 மருத்துவக் கல்லூரிகள், 423 தனியார் ஐ.டி.ஐ.,க்கள் உட்பட 3,250 தனியார் கட்டடங்கள் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இந்த கட்டிடங்கள் அரசின் அனுமதி பெற, சதுர மீட்டருக்கு, 188 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும் அந்த வகையில், தமிழகம் முழுவதும் அரசுக்கு தனியார் நிறுவனங்களிடம் இருந்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் மண்டலத்தில் சேலம் நாமக்கல், ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில், 280 கல்லூரிகள், 343 பள்ளிகள், 98 பாரா மெடிக்கல் கல்லூரிகள், 32 தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசு துறைகளின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இந்த கட்டிங்களின் உரிமையாளர்களுக்கு, ஜூன் 30ம் தேதிக்குள் நகரமைப்பு துறையின் அனுமதி பெற கால அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி பெற விண்ணப்பிக்காத கட்டிடங்களுக்கு, ஜூலை முதல் வாரத்தில், "சீல்' வைக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
சேலம் நகர ஊரமைப்பு துறை துணை கமிஷவர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: நகரமைப்பு துறையின் விதி எண், 56, 57 உட்பிரிவின்படி அனுமதி பெறாத கட்டிட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. நோட்டீஸ் பெற்றவர்கள், உரிய கால அவகாசத்துக்குள் அரசு அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாத கட்டிடங்கள் அனைத்தும் சீல் வைக்கப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
07-மே-201307:38:40 IST Report Abuse
R Bala Sundaram இந்த இழப்பின் மூலமாக கணிசமான தொகை ,அதிகாரிகளுக்கும் ,அதிகாரிகளுக்கும் ,போயிருக்கும் ,நன்றாக இருங்கள் ,அதற்காகத்தான் உங்களை தெரிவு செய்தோம் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Victor George - Chennai,இந்தியா
06-மே-201313:23:16 IST Report Abuse
Victor George இதில் எத்தனை கட்டிடங்கள் ஏரி குளங்களை அழித்து கட்டபட்டவையோ, 188 ரூபாய் கொடுத்தால் அதற்கும் உரிமம் கொடுத்து விடுவார்களா ?.....
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
06-மே-201312:33:12 IST Report Abuse
kumaresan.m " இதில் கூறப்பட்டுள்ள கட்டிடங்கள் அனைத்தும் பொது மக்கள் பயன்படுத்துபவை இல்லை என்பது தெளிவாகிறது ....அனைத்தும் அரசியல்வாதிகளுக்கு மற்றும் தொழில் அதிபர்களுக்கும் சொந்தமானவை ....பூனைக்கு மணி கட்டுவது யார் ?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
06-மே-201311:07:28 IST Report Abuse
Hariganesan Sm அரசு என்பது என்ன, பொதுமக்கள் தானே. அரசை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர்வழிகளை இனம் கண்டு சும்மா விடக் கூடாது. நோட்டீஸ் கொடுப்பது இருக்கட்டும், விதி முறை மீறுவோரின் கட்டிடங்களை தயவு தாட்சண்யம் இன்றி இடித்து தள்ளுவது தான் சரியான நடவிக்கை. அப்போது தான் அரசின் மீதும் சட்டங்களின் மீதும் உண்மையான பயம் நிலைத்து நிற்கும். நினைத்துப் பார்க்க இயலாத அபராதங்களை விதிக்கலாம், அப்போது தான் இது மாதிரி தவறுகள் மீண்டும் நிகழாது. ஹரி, உ. பாளையம்,
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
06-மே-201310:05:30 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் ஆளும் கட்சியின் ஆதரவு இல்லாமல் இப்படி கட்டடங்களை கட்ட முடியாது.. இதில் பாதி அரசியல்வாதிகளின் பினாமிகளின் பெயரில் கூட இருக்கலாம்.. இருக்கும்.. // கட்டடம் அல்லது கல்லூரி தொடங்கும் முன் அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.. ஆனால் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் குறிப்பிட்ட % / % கொடுத்தால் போதும்.. எளிமையாக அனுமதி வாங்கி விடலாம்.. கட்டடங்கள் எவர் ஆட்சியில் எழுப்பப்பட்டது , அப்போது நிர்வாகதிகத்தில் இருந்த அதிகாரிகள் , அரசியல்வாதிகள் யார் என்பதை ஒரு பட்டியலிட்டு வெளியிடுங்கள்.. அவர்கள் தான் உண்மையான , தனது கடமையை சரியாக செய்யாத கொள்ளைகாரார்கள்... அவர்களை முதலில் தண்டியுங்கள்..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
06-மே-201308:50:41 IST Report Abuse
Srinivasan Kannaiya 30000 கோடி இழப்பு என்றால். அதிகாரிகள் ,அரசியல் வாதிகள், எப்படியும் கட்டிட உரிமையளர்களிடம் இருந்து 3000 கோடி ஆட்டயம் போட்டிருப்பார்கள் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
06-மே-201307:36:53 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி அரசு ஊழியர்களுக்கு (நகர் நிர்வாகம்) போனஸ் காலம்.
Rate this:
23 members
0 members
5 members
Share this comment
Cancel
Panneer - chennai,இந்தியா
06-மே-201306:40:15 IST Report Abuse
Panneer It is enough that the State Government am the Act by doubling the Property tax in respect of the un approved buildings, If the tax is not paid, than the Corporation should be empowered to cut the water supply/drainageas well as the Current connection. Corporations may take over Electricity connections as it was in Madurai two decades before. Even today Mumbai Corporation has full control in giving elctrity connections in respect of Corporation areas.. Municipal Corporations are supposed to be self financing with out expecting grnts from State Governments.. Rpealing the Corporaton Act, prticularly Chennai,Act,1919 has to be taken up soon as the old act has no word like car parking,(only cart stand/)mals, CMDA , etc in any place of the text act. Constitution of India provides taxing/levy of fines only to the elected body, ie, Central/State& Local self Government.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
06-மே-201306:09:26 IST Report Abuse
g.s,rajan இந்த பணத்தை வசூல் பண்ணுங்க ,தமிழக அரசு டாஸ்மாக் கடையை நிச்சயம் மூடிடலாம் ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
24 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
06-மே-201304:06:21 IST Report Abuse
Baskaran Kasimani இதுவல்லவோ நிர்வாகம். சபாஷ்.
Rate this:
0 members
0 members
41 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.