Son-in-law only worry about the Federal Government | மருமகன்களை பற்றி மட்டுமே கவலைப்படும் மத்திய அரசு| Dinamalar

மருமகன்களை பற்றி மட்டுமே கவலைப்படும் மத்திய அரசு

Added : மே 06, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 மருமகன்களை பற்றி மட்டுமே கவலைப்படும் மத்திய அரசு

ராஜ்கோட்:""மத்திய அரசு, மருமகன்கள் மற்றும் மாமாக்களை பற்றி மட்டுமே கவலை கொள்கிறது,'' என, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய அரசை கேலி செய்துள்ளார்.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில், சவுராஷ்டிரா ஜலாதார் அறக்கட்டளையின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் பேசிய, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மத்திய அரசை கடுமையாக சாடினார்.

மத்திய ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சாலின் உறவினர் லஞ்சம் பெற்றது பற்றிய விவகாரத்தில், மத்திய அரசை கிண்டல் செய்து பேசினார்.நரேந்திர மோடி பேசியதாவது:நான், அத்வானி போன்றோர், சர்தார் சரோவர் அணையில் கதவு அமைக்க, மத்திய அரசின் அனுமதி கோரி, பிரதமர் மன்மோகன் சிங்கிடம், பல முறை முறையிட்டுள்ளோம். ஆனால், இதுவரை அவர் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை.அணையில் கதவு அமைப்பதின் மூலம், குஜராத் மட்டுமின்றி, காங்., ஆளும் மகாராஷ்டிராவிலும், தண்ணீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணப்படும்.
மத்தியில் ஆளும் காங்., அரசு, மருமகன்கள் மற்றும் மாமாக்கள் பற்றிய பிரச்னைகளில் மட்டுமே அக்கறை கொண்டுள்ளது. கல்பசார் அணைக்கான பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. அப்பணிகள் முடிவடைந்தால், சவுராஷ்டிரா பகுதியில் அடுத்த, 100 ஆண்டுகளுக்கு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
06-மே-201306:58:03 IST Report Abuse
ஆரூர் ரங அப்ஜெக்சன் யுவர் ஆனர் எங்க ஊர்க்காரர் தான் பெற்ற மகளில்லை என வாதாடியபிறகும் அவருக்காக திஹார் வரை போய் கண்ணீர் விட்டார் சொந்த மாமா மருமகன் களைப் பற்றிக் கவலைப்படுவதை விட பெறாத மகளுக்காக வருந்துவது எப்படிப்பட்ட நற்குணம்? என்ன இருந்தாலும் எங்க ஆட்களைப்போல பாசக்காரர்கள் வேறெங்கும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
06-மே-201306:23:33 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இன்றைய தேதியில் அநேகமாக எல்லா கட்சிகளிலும் வாரிசுகளை பற்றி மட்டும்தான் கவலை படுகிறார்கள், காஷ்மீர் அப்துல்லாஹ், முப்டி, ஹரியானா தேவிலால், மகாராஷ்டிரா பவார், கர்நாடக எடியுரப்ப, தேவ கெளட, கேரளா கருணாகர முரளி, தமிழகத்தில் கருணாநிதியின் பெரிய குடும்பம், ஆனால் காங்கிரஸ் இல் இது மிக மிக அதிகம். மக்களுக்கு எல்லாம் பழகிவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
06-மே-201303:14:49 IST Report Abuse
Sekar Sekaran காங்கிரசை போன்று இனி யாரும் ஊழலின் உச்சத்தை தொட்டுவிட முடியாது. அவர்கள் ஈடுபடாத ஊழல் துறை என்று ஏதேனும் உள்ளதா? ஒரு கோடி இரண்டு கோடி என்பதெல்லாம் இப்போது அவர்களுக்கு வெறும் ஜுஜ்ஜுப்பி..பல லட்சம் கோடிகளில்தான் அவர்கள் கவனம் செல்கின்றது. இன்றைக்கு இத்தாலியில் உள்ள சோனியாவின் குடும்பத்தின் நிலையை யாரேனும் சொல்ல முடியுமா? அன்றைக்கு ராஜீவை திருமணம் செய்யும்போது உள்ள நிலைக்கும் இப்போதுள்ள நிலைக்கும்..கணக்கிடவே முடியாத அளவுக்கு பெரும் புள்ளிகளாக உள்ளனர். இது எப்படி சாத்தியமாயிற்று? சோனியாவின் அரசியல் பிரவேசம்..ஊழலின் அளவு என்றைக்கும் இல்லாத அளவுக்கு மிக அதிகமாய் உயர்ந்துவிட்டது. வெள்ளை தோல் காரர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதிலே காங்கிரசார் நம்புவது போல யாருமே நம்பமாட்டார்கள். அன்னிய சக்தி மோகம் அவர்களை ஆட்டுவிக்கின்றது. கொடுமை இது..
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
06-மே-201304:09:33 IST Report Abuse
Baskaran Kasimaniமன்னிக்கவும் விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் பின்னேற்ற கொள்கைகள் உடைய முன்னேற்ற கட்சிகளை மிஞ்ச ஆள் கிடையாது. MIDAS மூலம் அவர்கள் அடிக்கும் தொகை - 100 தலைமுறைக்கு போதும்....
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
06-மே-201301:45:58 IST Report Abuse
Narayan மக்கள் எப்போதுமே பஞ்சம் பட்டினியில் இருந்தால் நாட்டில் மதச்சார்பின்மை என்ற பெயரில் இருக்கும் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு எப்போதுமே வசந்த காலம்தான். 65 வருடங்கள் என்ன பண்ணீங்க அப்படின்னு நம்ம ஏன் யோசிப்பது இல்லை, இன்னமும் இட ஒதிக்கீடு, இலவசம் பின்னாடி மட்டும்தான் போய் வோட்டு போடறோம். நாட்டில் முதல் முறையாக ஆறு வருடங்கள் 99-2004 அதற்கான முதல் கல்லை உண்மையிலே எடுத்து வைத்து "India shining " என்று ஆக்கப்பூர்வமாக, நம்பிக்கையோடு ஒரு கட்சி வந்தாலும் நாம் கண்டு கொள்வதில்லை . மோடிக்கு ஆதரவு குடுப்போம், இதுவே நமக்கு கிடைத்த கடைசி வாய்ப்பு
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
06-மே-201301:14:32 IST Report Abuse
Ambaiyaar@raja உண்மை தானே மோடி அவர்களே அவர்கள் தான் அவர்களுக்கு மாமா வேலை செய்து கட்டிங், கமிசன், எல்லாம் வாங்கி கொடுப்பவர்கள் அதனால் அவர்களை பற்றி மட்டும் தான் அவர்கள் கவலை படுவார்கள். இந்த மக்களுக்கு காசும், குவாட்டரும், கோழி பிரியாணியும், கொடுத்தால் போதும் அவர்கள் காங் கட்சிக்கு மீண்டும் வாக்கு போடுவார்கள் என்ற அபார நம்பிக்கை அவர்களுக்கு. உங்கள் கட்சியும் இன்னும் சண்டை போட்டு யார் பிரதமர் என்று அறிவிக்கவே இல்லை இது எல்லாம் அவர்களுக்கு சாதகம் தான். ஒரு வேலை உங்களை அறிவித்தால் சிலர் எதிர்க்கலாம் உங்கள் கூட்டணி உடையலாம் என்ற நிலை எல்லாம் அவர்களுக்கு ரொம்ப சந்தோசம். அதன்னால் என்ன இன்னும் நல்ல உழல செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை