Sack Law and Railways Ministers: bjp | அமைச்சர்கள் ராஜினாமா செய்வரா? : பதில் அளிக்க மறுக்கும் காங். தலைவர்கள்| Dinamalar

அமைச்சர்கள் ராஜினாமா செய்வரா? : பதில் அளிக்க மறுக்கும் காங். தலைவர்கள்

Updated : மே 08, 2013 | Added : மே 06, 2013 | கருத்துகள் (23)
Advertisement
 அமைச்சர்கள்  ராஜினாமா செய்வரா? : பதில் அளிக்க மறுக்கும் காங்.  தலைவர்கள்

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த, சி.பி.ஐ., விசாரணை வரைவு அறிக்கையை, சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் திருத்தியதாக கூறப்படும் விவகாரம், கோர்ட் விசாரணையில் உள்ளதால், அது குறித்து பதிலளிக்க முடியாது' என, காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள், திட்டவட்டமாக கூறினர்.
நிலக்கரி துறையை, பிரதமர் மன்மோகன் சிங், சிறிது காலம் கவனித்த போது, சுரங்கங்களுக்கு அனுமதி வழங்கியதில், முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
"பசையுள்ள' பதவிக்கு
இது குறித்த, சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை, சட்ட அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் திருத்தியதாக கூறப்படுகிறது.அதுபோல், ரயில்வே வாரியத்தில், "பசையுள்ள' பதவியை வழங்க, ரயில்வே அமைச்சர், பன்சாலின் உறவினர், லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
ஏன் இந்த அவசரம்?
எனவே, பன்சாலும், அஸ்வனி குமாரும், பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என, பாரதிய ஜனதா வலியுறுத்தி வருகிறது.
இது குறித்து, பார்லிமென்ட் விவகார அமைச்சர், கமல்நாத் நேற்று கூறும் போது, ""விசாரணை, கோர்ட்டில் உள்ளது. முடிவில், உண்மை வெளிவரத் தான் போகிறது. அதற்குள் ஏன், ராஜினாமா செய்ய வேண்டும்? பா.ஜ., தலைவர், நிதின் கட்காரி மீது புகார் கூறப்பட்டதும், அவரை, பதவியில்இருந்து அந்தக் கட்சிஅகற்றியதா?'' என்றார்.
வெளியுறவுத்துறை அமைச்சர், சல்மான் குர்ஷித் கூறுகையில், ""சட்டம், நீதி சம்பந்தப்பட்ட விவகாரங்களை, சட்ட அமைச்சர் தானே பார்க்க வேண்டும்? அவர் துறை சார்ந்த கோப்புகளை, அவர் பார்த்ததில், என்ன தவறு இருக்கிறது. எனினும், கோர்ட்டில் வழக்கு, விசாரணையில் உள்ளதால், நான் கருத்து எதையும் கூற மாட்டேன்,'' என்றார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும், மத்திய அமைச்சருமான, மணீஷ் திவாரி, ""கோர்ட் விசாரணையில் உள்ள விவகாரங்கள் குறித்து, நான் பதிலளிப்பதில்லை. சொல்ல வேண்டிய விஷயங்களை, சட்டத் துறையினர், கோர்ட்டில் சொல்வர்,'' என்றார்.
மாயாவதியும் ஆதரவு
மத்திய அரசுக்கு சிக்கலான நேரங்களில், ஆதரவு அளித்து காப்பாற்றி வரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி, நேற்று இது குறித்து கூறும் போது, ""பன்சால் விவகாரத்தை, சி.பி.ஐ., விசாரிக்கிறது; அதற்கு முன்பே, அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என கூறுவதில், நியாயமில்லை. இதில், அவசரமே தேவை இல்லை,'' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ayubkhan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-மே-201320:24:25 IST Report Abuse
ayubkhan ஏதோடவோ சேந்த கன்னுக்குட்டியும் எதையோ தின்னும்பாங்க தி மு க வோட சேந்த காங்கிரசு அதுக்கு சரியாக ஊழல் செய்யிது.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-மே-201318:10:48 IST Report Abuse
Nallavan Nallavan திரும்ப காங்கிரஸ் கூட்டணிக்கே ஓட்டுப் போடுங்கடா .... வெளங்கிடும் ......
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-மே-201317:21:13 IST Report Abuse
Nallavan Nallavan காங்கிரஸ் காரனுங்கோ அவ்வளவு யோக்கியனுங்களா? கோர்ட்டுல ஒரு விஷயம் விசாரிப்பில் இருந்தா அதைப்பத்தி வாய் தொறக்காத யோக்கியனுங்களா? கூடங்குளம் பிரச்னை கோர்ட்டில் இருக்கும்போது தான் காமெடி நடிகர் வடிவேலுவின் ஜாடையில் இருக்கும் அந்த அரசியல்வாதி "இன்னும் ஒரு மாதத்தில் செயல்படத் துவங்கும்" என்றும் "இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து விட்டன ..... இன்னும் பதினைந்து நாட்களில் செயல்படத்துவங்கும்" என்றும் சொல்லி வந்தார் .....
Rate this:
Share this comment
Cancel
jawaharrazik - chenai,இந்தியா
07-மே-201315:48:29 IST Report Abuse
jawaharrazik ஹய்யோ ஹய்யோ . கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரசார கூட்டத்தில் இவர்களின் “தலைவி”தி சொக்கத்தங்கம் சோனியா அம்மையார் காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் ஊழலுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறது என்று பொய்மூட்டையை அவிழ்த்து விட்டாரே. ஒருவேளை காங்கிரஸின் ஊழல் வெளியே தெரியாமல் இருக்க போராடிக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் அப்படி சொன்னாரோ. அவரோடு சேர்ந்து அனவரும் ஊழல்பேர்வழிகளாகி விட்டர்கள். இன்னும் ஓராண்டு காலத்தில் எத்தனை பூதங்கள் கிளம்பப்போகிறதோ ?
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
07-மே-201313:59:51 IST Report Abuse
பொன்மலை ராஜா விசாரணை கோர்ட்டில் உள்ளது ... தீர்ப்பு வரும் வரை அவகாசம் உள்ளது ... இதுவரை அகப்பட்டதை சுருட்டிய திருடன் மிச்சமுள்ளவற்றையும் முடிந்த வரை சுருட்டிக் கொள்ளட்டும் ... கடைசியில் வசமாக சிக்கிக் கொண்டால் பின்னர் கூச்சல் போட்டு ஊரைக் கூட்டும் வேலையையும் நாங்களே பார்த்துக் கொள்வோம் ...
Rate this:
Share this comment
Cancel
Barakathulla - Singapore,சிங்கப்பூர்
07-மே-201312:16:54 IST Report Abuse
Barakathulla யார் அங்கே ??? இந்த சுப்ரீம் கோர்ட்லே ஏன் காங்கிரஸ் சப்போர்ட் பண்ணும் நீதிபதி இல்லை என்ன பண்ணுறீங்க எல்லாரும் .............சோனியாவின் குரல்
Rate this:
Share this comment
Cancel
Indian - Chennai,இந்தியா
07-மே-201310:53:43 IST Report Abuse
Indian பன்சால் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறேன், பன்சால் ஊழல் செய்திருந்தால் பதவி விலக வேண்டுமென்பது சரியான வாதம், உதாரனத்திற்க்கு ஒரு போலீஸ் லஞ்சம் வாங்கினால் அவருடைய மனைவியையும் கைது செய்வது எப்படி சரியாக இருக்க முடியும்? அல்லது ஒரு போலீஸ் அதிகாரியின் மகன் திருடினால் எப்படி போலீஸ்சுக்கு தண்டனை தரமுடியும் ? ஒவ்வொரு வாழ்கையும் தனித்துவம் வாய்ந்தது தனித்தன்மை வாய்த்தது .
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-மே-201321:20:00 IST Report Abuse
சு கனகராஜ் ஊழல்வாதிகள் நிறைந்த காங்கிரஸ் அரசு கூட்டணி கட்சிகாரர்களை மட்டும் மாட்டி விடுகிறது...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-மே-201310:14:38 IST Report Abuse
Baskaran Kasimani வெட்கமில்லாதவர்கள் எப்படி இராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்க்கமுடியும்?
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-மே-201321:18:47 IST Report Abuse
சு கனகராஜ் கோர்ட் சொல்லும் வரை இப்படித்தான் அடம் பிடிப்பார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
07-மே-201309:12:17 IST Report Abuse
Srinivasan Kannaiya குண்டக்கா மண்டக்கா என்று இது குறித்து கேள்வி எல்லாம் கேட்க கூடாது இல்லே.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
07-மே-201309:05:05 IST Report Abuse
Lion Drsekar இவர் ராஜினாமா செய்து விட்டால்? அடுத்தவர் ....... இது ஒரு ஆக்டோபஸ் போன்றது, எது கை, எது வாய், எது எங்கு இருக்கிறது என்று அதற்கு மட்டுமே தெரியும்? நாம் லாவகமாக கையும் களவுமாக பிடித்தால் மற்றொன்று நம்மையே விழுங்கி விடும்??? வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை