india-china border issue | இந்தியா - சீனா உடன்பாடு எல்லையில் முந்தைய நிலையே தொடரும்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியா - சீனா உடன்பாடு எல்லையில் முந்தைய நிலையே தொடரும்

Updated : மே 07, 2013 | Added : மே 06, 2013 | கருத்துகள் (39)
Advertisement
 இந்தியா - சீனா உடன்பாடு எல்லையில் முந்தைய நிலையே தொடரும்

புதுடில்லி: "ஏப்ரல், 15ம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர்வது' என, இந்தியா - சீனா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, வெளியுறவுத் துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 கி.மீ., அத்துமீறல்
ஜம்மு - காஷ்மீரின், லடாக் பகுதியில், இந்தியா - சீனா இடையேயான, தற்காலிக எல்லைக் கோடான, நடைமுறை எல்லை கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது. கடந்த மாதம், 15ம் தேதி, அந்த கோட்டை தாண்டி, இந்திய எல்லைக்குள், 19 கி.மீ., அத்துமீறி நுழைந்த சீன ராணுவத்தினர், கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்தனர்.
வேட்டை நாய்கள், வாகனங்களுடன், 50 சீன வீரர்கள், அந்தப் பகுதியில் முகாமிட்டிருந்தனர். "இது, இந்தியாவின் பகுதி; இங்கிருந்து வெளியேற வேண்டும்' என, சீன ராணுவத்திடம் பல முறை வலியுறுத்தியும், அவர்கள் வெளியேறவில்லை.
இது குறித்து, நான்கு முறை, ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் நடந்த, நான்காவது பேச்சுவார்த்தையில், முன்னேறிய பகுதியிலிருந்து பின்வாங்க, சீன ராணுவம் ஒப்புக் கொண்டது.
அதே போல், சீன ராணுவம் முகாமிட்டிருந்த பகுதியிலிருந்து, 300 மீட்டர் தூரத்தில், எதற்கும் தயாராக இருந்த, இந்தோ - சீனா எல்லை பாதுகாப்பு போலீஸ் படை வீரர்களையும், பின் வாங்க செய்ய வேண்டும் என, சீன தரப்பில் வலியுறுத்தப்பட்டது. பரஸ்பரம் இருதரப்பினரும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, படைகள் வாபஸ் துவங்கி, இரவு, 7:30க்கு நிறைவடைந்தது.
பரஸ்பரம் முடிவு
இந்த விவகாரங்கள் குறித்து, மத்திய அரசின் வெளியுறவுத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "நடைமுறை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், ஏப்ரல், 15ம் தேதிக்கு முந்தைய நிலையை தொடர்ந்து பராமரிப்பது என, இரு தரப்பிலும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என, நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, முன்னரே திட்டமிட்டபடி, வரும், 9ம் தேதி, வெளியுறவு அமைச்சர், சல்மான் குர்ஷித் சீனா செல்கிறார்.
அந்நாட்டின் புதிய பிரதமர், லி கேகியாங்கின் இந்திய சுற்றுப் பயணம், இம்மாதம், 20ம் தேதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்காக, குர்ஷித்தின் பீஜிங் பயணம் அமையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், ""சீனாவை நம்ப வேண்டாம்; அவர்கள் துரோகிகள்,'' என, சமாஜ்வாதி தலைவரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான, முலாயம் சிங் யாதவ் நேற்று கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது:
கடந்த, 1962ல், நம் நாட்டின் மீது போர் தொடுத்து, ஏராளமான இந்திய பகுதிகளை கைப்பற்றினர்; இப்போது, போர் இல்லாமல், சாதாரண அத்துமீறல் மூலம், இந்திய பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். அந்த துரோகிகளை நம்பக் கூடாது என, பிரதமர், மன்மோகன் சிங்கையும் அரசையும் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு, முலாயம் சிங் கூறினார்."மற்ற எந்தக் கட்சித் தலைவரும், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில், முலாயம் மட்டும், அவ்வப்போது கருத்து தெரிவிப்பது ஏன் எனத் தெரியவில்லை' என, அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - Srirangam, Trichy,இந்தியா
07-மே-201320:13:02 IST Report Abuse
raghavan கொஞ்ச நாளைக்கு பழைய பல்லவியே பாடுவோம் ( பாகிஸ்தானை தூண்டி விடுவது ) என்று போய்ட்டான் போல
Rate this:
Share this comment
Cancel
R.M.VEL - cuddaloer,இந்தியா
07-மே-201319:03:45 IST Report Abuse
R.M.VEL இந்தியா எப்போதும் அமைதியாக இருப்பதோடு, பலமாகவும் இருக்க வேண்டும். பலமற்ற அமைதி அர்த்த மற்றதாகி விடும். பலமே வாழ்வு, பலமின்மையே மரணம். சுவாமி விவேகனந்தர் வார்த்தைகள் நினைக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
07-மே-201314:46:08 IST Report Abuse
K Sanckar முலாயம் யாதவ் சொல்வது சரி. சீனாவை நம்பக்கூடாது. நமது நாட்டு வெளி உறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் சீனாவுக்கு இரு நாடுகளின் எல்லை பற்றி பேச போகவில்லை. மாறாக, சீன பிரதமர் நமது நாட்டுக்கு விஜயம் செய்வது பற்றி விவாதிக்க சிகப்பு கம்பளத்துடன் போகிறார். வெட்க கேடு
Rate this:
Share this comment
Cancel
AnandaRajan - Singapore,சிங்கப்பூர்
07-மே-201312:32:37 IST Report Abuse
AnandaRajan நம்ம வடிவேலு 23ம் புலிகேசி மாதிரி மண்ணு மோகன் டான்ஸ் ஆடிகிட்டே பொய் காலுல விழுந்து கெஞ்சிருப்பர். அவனும் இவரு மூஞ்சில துப்பிட்டு அப்றோம வரேன்னு சொல்லிருப்பான். வீரத்தில் புகல் பெற்ற இந்தியன் நிலைமை பார்த்தா பரத தாயே இப்படி பட்ட அந்நிய சோனியா சக்தியின் கையில் எம் பாரதத்தின் பெருமை பிறர் முன் மண்டியிட்டு கிடப்பதை என்று தணியும் இந்த அடிமையின் மோஹம்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
07-மே-201311:12:35 IST Report Abuse
villupuram jeevithan சிறிலங்காவுக்கு தாரை வார்த்து விட்ட மாதிரி சீனாவுக்கும் கொடுத்து விடுங்கள். அண்டை நாடுகளுடன் நல்லுறவு நிலவுமே?
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-மே-201318:15:32 IST Report Abuse
சு கனகராஜ் விட்டு கொடுத்து எமாருவதே இந்தியனின் வேலை...
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
07-மே-201311:10:51 IST Report Abuse
villupuram jeevithan முந்திய நிலை என்றால்? சுதந்திரம் பெற்று எத்தனை ஆண்டுகள் ஆனாலும் எல்லை இன்னமும் வரையறுக்காமல் இப்படியே இருந்தால் எப்படி?
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
07-மே-201318:11:17 IST Report Abuse
சு கனகராஜ் சீனாவை விரட்டி அடியுங்கள் உள்ளே நுழைய முடியாதபடி...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-மே-201318:23:01 IST Report Abuse
Nallavan Nallavan"முந்தைய குழப்பமான நிலையே இருக்கணும்" என்பது மீண்டும் சீனாவுக்கே அனுகூலமானது .... நேரு பரம்பரையும் சரி ..... பாஜக -வும் சரி இந்த விஷயத்தில் வேஸ்ட். நடுவுல மூன்றாம் அணி ஆண்டதையே நான் கணக்கில் எடுக்கலை .... அது ஒரு விபத்து .... கெட்ட நேரம் .......
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
07-மே-201310:56:52 IST Report Abuse
Kumar இவங்க பொய் சொல்லுறாங்க. சீனா போகவே இல்ல. இந்தியன முட்டாள் ஆக்குரங்க. கமிஷன் வாங்கிட்டு வித்துட்டாங்க.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-மே-201317:46:54 IST Report Abuse
Nallavan Nallavanஅப்படிப்பட்ட அரசியல்வாதிகள் தான் நம்ம ஆட்கள் .... ஆனால் இதை முதலில் கண்டுபிடித்த, வெளிப்படுத்திய வடக்கத்திய மீடியாக்களே சொல்லும் விஷயம் இது .......
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
07-மே-201310:33:05 IST Report Abuse
amukkusaamy எங்கப்பன் குதிருக்குள் இல்ல.
Rate this:
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
07-மே-201310:33:00 IST Report Abuse
amukkusaamy ."மற்ற எந்தக் கட்சித் தலைவரும், இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்காத நிலையில், முலாயம் மட்டும், அவ்வப்போது கருத்து தெரிவிப்பது ஏன் எனத் தெரியவில்லை' என, அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர்" எல்லாமே ஒரு நாடகம் தான்.
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
07-மே-201309:49:57 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி சீன ஊடுருவல் விஷயத்தில் நமது நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் தோழர்களின் நிலைப்பாடு பற்றி செய்திகள் எதுவும் படித்ததாக ஞாபகம் இல்லை. அப்படி ஏதாவது செய்திகள் இருந்தால் வெளியிடவும். இப்போது சீன படைகள் வாபஸ் ஆகிவிட்டது - எனவே தோழர்கள் தர்ம ஞாயங்களை பற்றி நிறைய உபதேசம் செய்வார்கள்.
Rate this:
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
07-மே-201315:21:51 IST Report Abuse
சாமிஅவர்கள் கொஞ்ச நஞ்சம் கரண்டு கிடைத்து வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலையும் கொடுக்க போயிருப்பார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை