E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
வன்முறையால் 500 பஸ்கள் நாசம்: பா.ம.க., விடம் இழப்பீடு பெற திட்டம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

07 மே
2013
02:33
பதிவு செய்த நாள்
மே 06,2013 23:31

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டவர்கள் கைதைத் தொடர்ந்து, நடந்து வரும் வன்முறை சம்பவங்களையடுத்து, ஏற்பட்டுள்ள இழப்புகளை ஈடு செய்வது தொடர்பாக, வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளனர்.
பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், மாமல்லபுரத்தில் நடத்தப்பட்ட, சித்திரை இளைஞர் விழாவைத் தொடர்ந்து, மரக்காணம் பகுதியில் துவங்கிய வன்முறை, தொடர்கிறது. மரக்காணம் வன்முறைக்காக நீதி கேட்டு, விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.எல்.ஏ., திருக்கச்சூர் ஆறுமுகம், வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களையடுத்து, ராமதாசின் மகன் அன்புமணியையும், முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தியையும் கைது செய்தனர்.இதற்கிடையில், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில், ஆங்காங்கே, அரசு, தனியார் பேருந்துகள் மீது தாக்குதல், தீ வைப்பு, சாலையில் இருந்த மரங்கள் வெட்டி சாய்ப்பு, தீ வைத்து எரிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்து வருகின்றன.
13 பஸ்கள் எரிப்பு
நேற்றைய நிலவரப்படி, 555 பேருந்துகள் வரை, தாக்குதலில் சேதமடைந்து உள்ளன. 13 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. "பசுமைத் தாயகம்' எனும் அமைப்பை நடத்தி வரும், பா.ம.க.,வினரால், சாலையில் பசுமையை அளித்த, 160க்கும் மேற்பட்ட புளிய மரங்கள், அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன.
இவற்றில், 45 மரங்கள், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களால், பொதுச் சொத்துகள் அதிகளவில் சேதமடைந்து உள்ளன. பா.ம.க., தலைமையில் இருந்து அவ்வபோது, "அறவழியில் போராடுங்கள்' என்று கூறி வந்தாலும், அக்கட்சியினர் கேட்பதாக தெரியவில்லை என்று கூறப்படுகிறது.இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, வட மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு, இரவு நேரங்களில், பேருந்து போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு உள்ளது. கிராமப் பகுதிகளுக்கு, பகல் நேரங்களிலும் பேருந்துகள் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
அவசர கால ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம் என, எதையும் விட்டு வைக்காத, வன்முறை கும்பலின் நடவடிக்கைகளை ஒடுக்க, சம்பந்தப்பட்ட பகுதிகளில், அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு, அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. போலீசில் சிக்குவோர் மீது, வழக்கு பதியப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
இழப்பீடு பெறும்சட்டம்
அதிகளவில் சேதங்களை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில், சேதங்கள் தொடர்ந்து கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த முறை, தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, இது போன்ற சம்பவங்களில் ஏற்படும், பொதுச் சொத்து சேதங்களுக்கான இழப்பீட்டை, சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து பெறும் சட்டத்தை, கொண்டு வந்தார்.
அதன் பின், அந்த சட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படாத நிலையில், தற்போது, மீண்டும் இந்த சட்டத்திற்கு உயிர் கொடுக்கலாம் என, தெரிகிறது. இச்சட்டத்தின் அடிப்படையில், இழப்பீட்டை ஈடு செய்வதற்கான முயற்சிகளை, வருவாய்த் துறையுடன் இணைந்து, காவல் துறை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.


வட மாவட்டங்களில் தொடரும் வன்முறை சம்பவங்கள்

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, வட மாவட்டங்களில் நேற்று, ஏழாவது நாளாக, மறியல், சிறையில் உண்ணாவிரதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.
* பா.ம.க., நிறுவனர் ராமதாசை விடுவிக்க கோரி, தென் சென்னை மாவட்ட பா.ம.க., சார்பில், நெசப்பாக்கத்தில், மாவட்ட துணை செயலர் மகேந்திரன் தலைமையில், 30 பேர் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் , அவர்களை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
* தொடரும் வன்முறை சம்பவங்களால், கடந்த சில நாட்களாக, சென்னை புறநகர் பகுதிகளில், இரவு, 8:00 மணிக்கு, "டாஸ்மாக்' கடைகள் மூடப்படுகின்றன. படப்பை, செரப்பணஞ்சேரி, ஒரகடம், வல்லக்கோட்டை ஆகிய இடங்களில் கடைகள் மூடப்படுவதால், "குடிமகன்'கள், தாம்பரம், வாலாஜாபாத் ஆகிய இடங்களுக்குச் சென்று, மது வாங்கி குடிக்கின்றனர்.
* சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு, நேற்று முன்தினம் இரவு, அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ், வந்து கொண்டிருந்தது. நாகை அடுத்த பால்பண்ணைச் சேரி என்ற இடத்தில், பஸ் மீது கல் வீசப்பட்டது. இதில், பஸ் மீது கல் வீசிய, பா.ம.க., வைச் சேர்ந்த விஜய்காந்தன், 35, ராஜவேலு, 31, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.
* சேலம் மாவட்டம், இடைப்பாடியில், கடந்த, ஆறு நாட்களாக, இரவு நேரத்தில் பஸ் போக்குவரத்து, முற்றிலும் முடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, இடைப்பாடி அரசு போக்குவரத்து கழக பணிமனை மீது, மூன்று பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடந்தது. வீசும்போதே, பாட்டிலில் நெருப்பு அணைந்து விட்டதால், பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை.
* சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, பா.ம.க.,வினர், 791 பேர், சென்னை புழல் சிறையில் உள்ளனர். இதில், அன்புமணி, காடு வெட்டி குரு, ஏ.கே.மூர்த்தி, திருக்கச்சூர் ஆறுமுகம் உட்பட, 551 பேர் விசாரணை சிறையிலும், மற்ற, 240 பேர் தண்டனை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். ராமதாசை விடுதலை செய்யக் கோரி, தண்டனை சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 240 பேர் நேற்று காலை முதல் மாலை, 5: 00 மணி வரை, ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
* ராமதாஸ் மற்றும் அன்புமணி கைது செய்யப்பட்டதை கண்டித்து, புதுச்சேரியில், நேற்று மதியம், ரயில் மறியலில் ஈடுபட முயன்ற, மாநில பா.ம.க., செயலாளர் அனந்தராமன் உள்ளிட்ட, 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
* விழுப்புரம் மாவட்டத்தில், நகரம் மற்றும் கிராமங்களுக்கு, கடந்த, ஆறு நாட்களாக, மாலை, 6:00 மணிக்குமேல், பஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இரவு, 7:00 மணிக்கு மேல், வாகனங்களுக்கு, பெட்ரோல் சப்ளை நிறுத்தி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை நடந்த கல்வீச்சு சம்பவங்களில், 12 பஸ்கள் சேதமடைந்தன. கீழ்சிவிரி கிராமத்தில், வைக்கோல் போருக்கு, மர்ம நபர்கள் தீ வைத்தனர். செஞ்சி அடுத்த திருவம்பட்டு கிராம சாலையில், நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் மரத்தை வெட்டி போட்டனர்; செல்லியம்மன் கோவில் அருகே புளியமரத்திற்கு தீ வைத்தனர். மாவட்டத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, 65 பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.

ரூ.2 கோடி இழப்பு!

கடந்த மாதம், 30ம் தேதி முதல் இம்மாதம், 5ம் தேதி வரை, விழுப்புரம், அரசு விரைவு போக்குவரத்து கழகம், கும்பகோணம், சேலம் உள்ளிட்ட போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த, 555 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு உள்ளன.
அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் என, மொத்தம், ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள, 13 வாகனங்கள் தீக்கிரையாகின. பேருந்துகளில் கண்ணாடி உடைக்கப்பட்டதில், பேருந்து ஒன்றிற்கு, 10 ஆயிரம் ரூபாய் என, 55.50 லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவங்களில், மொத்தம், 2 கோடி ரூபாய்க்கும் மேல், இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், வன்முறைகளால், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில், பேருந்து சேவையும் முடக்கப்பட்டதால், போக்குவரத்து கழகங்களுக்கு பெரியளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. - நமது நிருபர் -

எரிப்பு, உடைப்பு எவ்வளவு?

கடந்த, 30ம் தேதி முதல், இம்மாதம் 5ம் தேதி வரை, அரசு பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு மற்றும் எரிப்பு விவரங்கள்:
கழகம் கண்ணாடிகள் உடைப்பு எரிப்பு
அரசு விரைவு 52 -
விழுப்புரம் 341 3
கும்பகோணம் 60 -
சேலம் 70 1
கோவை 20 -
எம்.டி.சி., 10 -
மதுரை 1 -
நெல்லை 1 -
தனியார் வாகனங்கள் - 9




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (115)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sraju tiruvarur - tiruvarur,இந்தியா
12-மே-201300:47:21 IST Report Abuse
sraju tiruvarur மரம் வெட்டி ராமதாஸ் எம் ஜீ ஆர் காலத்திலேயே மரத்த வெட்டி போட்டு நிறைய பேரோட வயித்தெரிச்சலை கொட்டிகிட்டான் இப்ப இவன் முதல் மந்திரியா வர ஆசை இவன் மருத்துவன்னு சொல்லிக்கிட்டு மக்களை ஏமாத்துரான் ஒரு ஐந்து வருஷம் ஜெயில்லே அம்மா புடிச்சு போட்டுதுன்னா எல்லாம் சரியாயிடும் ராஜு திருவாரூர்
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
vidiyal virumbi - Thamizhagam,இந்தியா
08-மே-201311:53:12 IST Report Abuse
vidiyal virumbi ராமதாஸ் அவர்களே, சமிபத்தில் ஈழ பிரச்சனைக்கு மாணவர்கள் நடத்திய போராட்டம் பொது சொத்து எதனையும் சேத படுத்தாமல் கண்ணியத்துடன் இருந்தது. ஆனால் தங்களின் கட்சி மற்றும் ஜாதி உறுபினர்கள் நடத்தும் போராட்டம் வன்முறை மற்றும் பொது சொத்தை சேதபடுதுதல், தாங்கள் இன்னும் சமூக சிந்தனை இல்லாதவர் என்பதை அடையாள படுத்துகிறது. உங்கள் மகனை மந்திரி ஆக்க நீங்கள் தேடும் வழிகளில் பிற்போக்கு சிந்தனைகளே மேலோங்கி இருக்கிறது. உங்கள் சிந்தனை சீர் அடையும் வரை நீங்கள் சிறையில் இருப்பதே சிறப்பு.
Rate this:
2 members
0 members
17 members
Share this comment
Cancel
murugesh - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்
08-மே-201300:14:15 IST Report Abuse
murugesh இது நல்ல முடிவு இப்படி ஒரு சட்டம் வந்தால் யாரும் இப்படி ஒரு கூட்டம் நடத்த மாட்டாங்க ப்ளீஸ் இந்த மாதிரி சட்டங்கள் வரைவில் கொண்டு வாருங்கள்
Rate this:
1 members
0 members
15 members
Share this comment
Cancel
venkatesan - dammam,சவுதி அரேபியா
07-மே-201322:03:01 IST Report Abuse
venkatesan ஒரு மரத்தை வளப்பது எவ்வளவு கஷ்டம். அதை ஈசிய வெட்டி தள்ளுரவங்கல சும்மா விடாதீங்க அம்மா. ஒரு மரத்துக்கு பத்து மரம் நட்டு சொந்த செல்லவுள 10 வருஷம் வளக்க சொல்லுன்ங்க.
Rate this:
2 members
0 members
21 members
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
07-மே-201321:37:08 IST Report Abuse
தமிழ்வேல் ஐயாங்க கிட்டே சொத்துங்க 2 கோடி இருக்காது ?
Rate this:
3 members
0 members
9 members
Share this comment
Cancel
nateshkumar007 - Madurai,இந்தியா
07-மே-201320:20:37 IST Report Abuse
nateshkumar007 வரும் நாடாளுமன்ற தேர்தல் ஓட்டு வங்கியை குறிவைத்து நடத்தப்படும் காட்சிகள் அரங்கேறி உள்ளன. ராமதாஸ், திருமா இருவரிடமே பல நல்ல கொள்கைகள் உள்ளன. அதனை முன்னிருத்தலாம். தமிழக எம்பிகள் அனைவரும் கட்சி பாகுபாடு இன்றி இலங்கை தமிழர், முல்லை பெரியார், தமிழக மீனவர்கள் தாக்குதல், கச்ச தீவு, மின் பகிர்வு, சேது சமுத்திரம் ஆகியவற்றிற்காக குரல் கொடுத்தால் ஓட்டுக்கள் தானாக விழும். அதை விடுத்து உணர்வுகளை தூண்டி மூன்றாம் தர அரசியல் நமக்கு வேண்டாமே,
Rate this:
7 members
1 members
7 members
Share this comment
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
08-மே-201315:17:21 IST Report Abuse
பொன்மலை ராஜாநல்ல கொள்கைகள் அவர்களிடம் இல்லை நண்பரே ... அரசியல் ஆதாயம் தேடி அவ்வப்போது நல்ல கொள்கைகளையும் முன் நிறுத்திக் கொண்டு மக்கள் ஆதரவைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றனரே தவிர அக்கொள்கைகளில் அவர்களுக்கு முழுமையான ஈடுபாடெல்லாம் கிடையாது ......
Rate this:
2 members
0 members
12 members
Share this comment
Cancel
sudhapriyan - riyadh,சவுதி அரேபியா
07-மே-201319:00:05 IST Report Abuse
sudhapriyan இதெல்லாம் என்ன .. இவர் மரம் வெட்டி ரோட்டில் போட்ட நேரத்தில் எத்தனை பேர் என்னென்ன அவஸ்தை பட்டிருப்பார்கள் .இவர்களுக்கு இது ஒரு பொழுது போக்கு .ஒரு படித்தவர் குடும்பம் இந்த கேவலமான வேலையை செய்கிறது . செய்ய தூண்டு கிறது .
Rate this:
2 members
0 members
20 members
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
07-மே-201318:52:38 IST Report Abuse
Ambika. K இவர்களின் போராட்டம் நல்ல நோக்கத்துடன் இருந்தாலும் இவர்களின் அணுகு முறையால் வெறுப்பு தான் வருகிறது. மகாத்மா காந்தி அஹிம்சை முறையில் தான் சுதந்திரம் பெற்று தந்தார். காந்திஜியும் இவர்கள் முறையை கடை பிடித்திருந்தால் இன்று வரை நாம் சுதந்திரத்திற்காக போராடி கொண்டிருக்க வேண்டியதுதான். இது ஏன் இவர்களுக்கு புரிய வில்லை.
Rate this:
7 members
0 members
11 members
Share this comment
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
08-மே-201315:18:50 IST Report Abuse
பொன்மலை ராஜாஇவர்களின் போராட்டம் நல்ல நோக்கத்துடன் என ஒரு பேச்சுக்குக் கூட சொல்ல வேண்டாமே ......
Rate this:
3 members
0 members
13 members
Share this comment
Cancel
Manasatchi - Chennai,இந்தியா
07-மே-201318:23:15 IST Report Abuse
Manasatchi மாபெரும் அசம்பாவிதங்கள் நடைபெறும் முன் அரசு துரிதமாய் இயங்க வேண்டும்....
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
07-மே-201316:55:29 IST Report Abuse
Nallavan Nallavan """"ஹி .... ஹி .... ஹி .... இழப்பீடு கொடுக்கணும்-ன்னு நெனச்சா நாங்க பஸ்களை எரிச்சோம்?"""" என்று அவர்கள் கேட்டால் ?
Rate this:
3 members
0 members
16 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.