தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

கோடை வெப்பத்தின் தாக்கத்தால், தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு, 25 கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. இவற்றில், சென்னை மாநகருக்கு மட்டும், தினசரி, 5 கோடி யூனிட்கள் செலவாகிறது.
தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடையின் உச்சகட்டமான, "அக்னி நட்சத்திரம்' (கத்திரி வெயில்) காலம், மே, 4ம் தேதி துவங்கியது. "கத்திரி' துவங்கிய மறுநாளே, சென்னை உட்பட, ஏழு நகரங்களில், 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியது.

மின் நுகர்வு அதிகரிப்பு
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், தினசரி மின் நுகர்வின் அளவு, பன்மடங்கு உயர்ந்து உள்ளது. மின் நுகர்வு அதிகரிப்பால், கூடுதல் நேர மின் வெட்டு, குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன.

அவதியில் மக்கள்
சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், 10 மணி நேரத்திற்கும் மேலாக, அறிவிக்கப்படாத மின்தடை அமலில் உள்ளது. ஆனால், கூடுதல் நேர மின் வெட்டிற்கு ஆளாகாத, சென்னை வாசிகளோ, தற்போது அறிவிக்கப்படாத, இரவு நேர மின் தடை மற்றும் கூடுதல் நேர மின் தடையில் சிக்கித் தவிக்கின்றனர்.
அனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால், தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகா வாட்டை நெருங்கியது. இருப்பினும், அவ்வவ்போது, மொத்த மின் உற்பத்தியில், ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.
கடந்த இரு நாட்களில், மின் நுகர்வு பன்மடங்கு அதிகரித்து உள்ளது. கூடுதல் மின் நுகர்வால், மின்வாரியத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், மே, 3ம் தேதி, 25 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்தாண்டு, தினசரி மின் பயன்பாடு, அக்டோபரில், 18 கோடி யூனிட்டாக இருந்தது. இது, இந்தாண்டு, ஜனவரியில், 21 கோடி யூனிட்டாக அதிகரித்தது.
கடந்தாண்டு, ஏப்ரலில் துவங்கிய கோடை வெப்பத்தின் தாக்கம், ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தது. இந்த மாதங்களில், மொத்த மின் தேவையின் அளவு, 3,869 கோடி யூனிட்கள். ஆனால், 937 கோடி யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. தொடர் மின் உற்பத்தி குறைவால், கடந்தாண்டு முழுவதும், மொத்த மின் தேவையான, 9,264 கோடி யூனிட்டில், 6,526 கோடி யூனிட்கள் மட்டுமே உற்பத்தியானது. பற்றாக்குறை, 2,738 கோடி யூனிட்.
பொதுவாக, கோடை அல்லாத நேரங்களில், சென்னை மாநகரின் தினசரி மின் நுகர்வு, 4 கோடி யூனிட்கள். கோடை காலங்களில், இந்த அளவு, 5 கோடி யூனிட்டாக உயரும்.கடந்த இரு மாதங்களில், தமிழகத்தின் மொத்த மின் நுகர்வு, 21 கோடியில் இருந்து, 25 கோடி யூனிட்டாக அதிகரித்து உள்ளது. கடந்த ஒரு மாதத்தில், தினசரி மின் நுகர்வின் அளவு, சராசரியாக, 3 கோடி யூனிட்கள் அதிகரித்து உள்ளது.இதனால், மின்வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எதிர்பார்க்கும் அளவு காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை என்றால், கூடுதல் நேர மின் தடையை, மின்வாரியம் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தாங்க மாட்டீங்குது...!

சென்னை மாநகரில், தற்போது, சுமார், 11 ஆயிரம், "ட்ரான்ஸ்பார்மர்கள்' உள்ளன. இவை, பலதரப்பட்ட திறனில் உள்ளன. குறைந்த திறனுடைய ட்ரான்ஸ்பார்மர்களின் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தரம் உயர்த்தும் பணி, திட்டமிட்டப்படி முடிவடையாததால், மின் பளு தாங்காமல், ட்ரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால், சென்னை மாநகரிலும், அறிவிக்கப்பட்ட, இரண்டு மணி நேர மின் தடை தவிர்த்து, கூடுதலாக, இரவு மற்றும் பகல் நேரங்களிலும், மின் தடை ஏற்படுகிறது என, மின்வாரிய பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
james arul rayan - chennai ,இந்தியா
07-மே-201322:16:52 IST Report Abuse
james arul rayan இவ்வளவு மின்வெட்டு நேரத்திலும் சென்னை நகர மேம்பாலங்களில் எரியும் நூற்றுக் கணக்கான மின் விளக்குகளை பார்க்கும்போது நமது வயிறு எல்லாம் பற்றிக்கொண்டு எரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
aron seka - morgan hill,யூ.எஸ்.ஏ
07-மே-201321:32:28 IST Report Abuse
aron seka 25 கோடி யூனிட் நுகர்வில் தொழில் துறை, தனி நபர் வீடுகள், கேளிக்கைகள், அலுவலகங்கள், என்று தனியாக பட்டியலிட்டு இவர்களின் பங்கு எவ்வளவு என்பதை ஆராய்ந்தால் வீணாகும் மின்சக்தி எவ்வளவு என்று தெரிய வரும். அத்யாவசியம், அனாவசியம் என்று பாகுபாடு செய்து கட்டுப்பாட்டுக்குள் மொத்த நுகர்வை கொண்டுவந்தால் சமூகத்திற்கு நன்மையாக இருக்கும். பொறி இயல் கல்லூரிகள் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். இந்த 25 கோடி யூனிட்டுகளை உற்பத்தி செய்ய ஆகும் செலவு நுகர்வோர்களிடமிருந்து பெறப்படும் கட்டணத்தினால் ஈடு கட்ட முடிகிறதா என்ற வரவு-செலவு ஆராய்ச்சியும் பயனளிக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Sutha - chennai,இந்தியா
07-மே-201320:27:46 IST Report Abuse
Sutha ஒரு காலத்தில் கோடையில் நிறையபேர் பேன்களை வாங்கினார்கள். ஆனால் மக்களின் வசதிகள் பெருகியதும் எல்லோரும் AC வாங்க ஆரம்பித்து விட்டார்கள். பத்து வீடுகளுக்கான மின்சாரம் ஒரு ஏ.சி க்கு செலவாகியது. வீட்டுக்கு வீடு ஏ.சி.களை வாங்கி போட்டால் எந்த அரசாங்கம் வந்தாலும் மின்சாரம் தட்டுபாடகத்தானிருக்கும்.இதனால் கிராமங்களில் உள்ளவர்களுக்கு அதிகமான மின் வெட்டை கொடுக்கிறோம்.வசதி உள்ளவன் குளிர்கைவதர்க்காக மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கிறோம். எனவே 300 யூனிட் க்கு அதிகமாக 500 யூனிட் வரை 15ரூபாய், 500-க்கு மேல் ரூபாய் 25-ம் வசூலிக்கலாம்.அப்போதுதான் மக்கள் மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவார்கள்.மின் வாரியத்தை மட்டுமே நம்பி இராமல் நாமும் மின் சேமிப்பு முறைகளை பின் பற்றவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
07-மே-201317:08:14 IST Report Abuse
Baskaran Kasimani சீக்கிரம் மின்சாரத்தை அருங்காட்சியகத்தில் மட்டுமே பார்க்க வைக்காமல் இருந்தால் சரி...
Rate this:
Share this comment
Cancel
d.karthick - mumbai,இந்தியா
07-மே-201315:09:48 IST Report Abuse
d.karthick இந்த மாதிரி கதை எல்லாம் மின்வாரியம் இதுக்கு சகஜம் அப்பா
Rate this:
Share this comment
Cancel
B.Vigneshkumar - Jeddah,சவுதி அரேபியா
07-மே-201314:34:26 IST Report Abuse
B.Vigneshkumar யோவ் எங்க தல "பவர்" ர வுள்ள வச்சிங்கள்ள அனுபவியுங்க
Rate this:
Share this comment
Cancel
Sembiyan Thamizhvel - THIRUVALLUR,இந்தியா
07-மே-201313:42:57 IST Report Abuse
Sembiyan Thamizhvel அளவுக்கு மீறிய ஏ.சி. க்களின் செயல்பாடு மின் நுகர்வை அதிகப்படுத்துகிறது. தேவையற்ற இடங்களின் ஏ.சி, பயன்படுத்துவது எதற்கு.? சென்னையில் இது மிகவும் கொடுமையான ஒன்று. அதிக எண்ணிக்கையிலான ஏ.சி க்கள் மின்மாற்றிகளை பழுது அடைய செய்கின்றன. ஏ.சி.க்கு அதிகமான மின்கட்டணம் விதிக்கபட வேண்டும். வெட்டி பந்தாவுக்காக ஏ.சி. பயன்படுத்தும் சென்னைக்கு, இரண்டு மணிநேர மின்வெட்டு போதாது. குறைந்தது நான்கு அல்லது ஆறு மணி நேரமாக்க வேண்டும்.......ஷாப்பிங் மால்கள், திரைப்பட கொட்டகைகளுக்கு அரசு மின்சாரம் ஏன்? டீசல் ஜெனரேட்டர்களை உபயோகப்படுத்தட்டுமே....
Rate this:
Share this comment
Cancel
rasarasan - chennai,இந்தியா
07-மே-201313:14:58 IST Report Abuse
rasarasan மின் வாரியத்தை மட்டுமே நம்பி இராமல் பொது மக்களாகிய நாமும் மின் சேமிப்பு முறைகளை பின் பற்றவேண்டும். நகரங்களில் மின் தேவை அதிகரிப்புக்கு AC முக்கிய காரணமாகும். AC பயன்படுத்துவோர் அதன் வெட்ப அளவை 25 அல்லது 27 டிகிரி வைத்தால் AC தொடர்ந்து ஓடாமல் தேவையான குளிர்ச்சியை தந்து மின் சிக்கனத்துக்கும் மின் வாரியத்துக்கும் பலனை தரும்.
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
07-மே-201310:54:40 IST Report Abuse
chinnamanibalan மக்களும் இருளில் வாழ பழகி விட்டனர் அரசும் மின் வெட்டு பிரச்னையை மறந்து விட்டது.
Rate this:
Share this comment
Cancel
Silambarasan - Thiruvannamalai,இந்தியா
07-மே-201310:41:24 IST Report Abuse
Silambarasan இந்த மின்சார பிரச்சனையை மூடிமறைக்க முயலும் முதல்வர் ஜே, ராமதாசு கைது நாடகத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக செய்துகொண்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வரை அவரை சிறையில் வைக்க என்ன இழப்பு, செலவு ஆனாலும் சமாளிக்க ஜே திட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்