Two Suicide attempt in TN Assembly office | தற்கொலை முயற்சி : தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தற்கொலை முயற்சி : தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு

Updated : மே 08, 2013 | Added : மே 07, 2013 | கருத்துகள் (10)
Advertisement
தற்கொலை முயற்சி :  தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்திற்கு உள்ளே, அ.தி.மு.க., பிரமுகரும், தலைமை செயலகத்திற்குவெளியே மாற்றுத் திறனாளியும், தற்கொலைக்கு முயற்சித்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள, முதல்வர் தனிப்பிரிவில், கோரிக்கை மனு கொடுக்க, தினமும் ஏராளமானோர், மாநிலம் முழுவதுமிருந்து வந்து செல்கின்றனர். அவ்வாறு வருவோரில், சிலர் முதல்வரின் கவனத்தை கவருவதற்காக, விபரீத நடவடிக்கையில் ஈடுபடுவது, அதிகரித்து வருகிறது. நேற்று காலை, 11:15 மணிக்கு, விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்குட்பட்ட, திருநாவலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் ராஜா,47, மனு கொடுக்க வந்தார். அவர் திடீரென, கையில் எடுத்து வந்திருந்த, பூச்சி மருந்து பாட்டிலை திறந்து, அதிலிருந்த மருந்தை குடிக்கத் துவங்கினார்.
அதை கண்ட போலீசார், உடனடியாக அவரிடமிருந்த பாட்டிலை பறித்தனர். அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது தம்பியை, சிலர் கொலை செய்து விட்டனர். கொலையாளிகளை கைது செய்ய விடாமல், மாவட்ட அமைச்சர் தடுக்கிறார். முன்பு ஒன்றியச் செயலராக இருந்தேன். அந்தப் பதவி பறிபோனதற்கும், அமைச்சர் தான் காரணம். அதன்பின் முதல்வர், எனது பணியை கவனித்து, எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் பதவியை தந்தார். எனது தம்பி கொலை குறித்து நீதி விசாரணை வேண்டும். கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும்' என, வலியுறுத்தி தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தார்.தொடர் விசாரணைக்காக, அவரை போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

மற்றொரு சம்பவம்

பகல், 12:30 மணிக்கு, தலைமைச் செயலகத்திற்கு வெளியே உள்ள பூங்காவில், வேலூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி பச்சையப்பன்,37, மரத்தில், துண்டின் மூலம், தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார், அவரை மீட்டனர். அவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வறுமை காரணமாக, அவர் தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தார். அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்தடுத்து நடந்த தற்கொலை முயற்சி, தலைமைச் செயலக வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M P LENIN SIVA - chennai,இந்தியா
09-மே-201313:28:45 IST Report Abuse
M P LENIN SIVA மக்களிடம் வாக்குகளைப் பெற்றவர்கள் அவர்களின் வாழ்க்கையையும் பார்க்கவேண்டும் . மக்களின் குறை அறிந்து அதனை தீர்த்து வைப்பதற்கு தான் வார்டு மெம்பெர் முதல் முதல்வர் வரை மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஒருவரால் தீர்த்து வைக்கப்படாவிட்டால் அடுத்த நிலையில் உள்ளவரால் அது செய்து முடிக்கப் பட வேண்டும். இல்லை என்றால் மக்கள், அடுத்த நிலை "மக்கள் பிரதிநிதி" யார் என்று தேடிச்செல்வர். மக்கள் நேரடியாக முதல்வரையே தேடி வருகிறார்கள் என்றால், "அந்தப்பகுதி வார்டு மெம்பெர், கவுன்சிலர், ஊர் தலைவர், M L A , துறை சார்ந்த மந்திரி, M P , மக்கள் தொடர்பு அதிகாரி, தாசில்தார் மற்றும் அவரது அலுவலர்கள் , மக்கள் பொது நல அரசு மற்றும் தனியார் அமைப்புகள், நுகர்வோர் பாதுகாப்பு குழு, அரசு நீதி மற்றும் காவல் துறை" என யாருமே சரியாக செயல் பாடவில்லையா என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பொழுதான் எது போன்ற நிகழ்ச்சிகள் கட்டுப் படுத்தப்படும். யார் காரணம் என கண்டறியப்பட்டால் அந்த குற்றம் மீண்டும் நிகழாதவாறு மக்களிடையே "விழிப்புணர்வு பிரச்சாரம் " செய்ய அந்த நபரை "ஓவர் டைம்" வேலை சம்பளமில்லாமல் ஒரு வாரம் பணிக்க வேண்டும். M P லெனின் சிவா. சென்னை
Rate this:
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
08-மே-201315:41:07 IST Report Abuse
சாமி வேலூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி பச்சையப்பன்,37, மரத்தில், துண்டின் மூலம், தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். // அவருக்காக வருந்துகிரேன்
Rate this:
Share this comment
Cancel
MANUSHI - chennai,இந்தியா
08-மே-201311:04:04 IST Report Abuse
MANUSHI தற்கொலை மட்டுமே அனைத்திற்கும் தீர்வு என்று நினைக்கும் மனோநிலை மாறவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-மே-201310:26:06 IST Report Abuse
kumaresan.m " புகார் செய்வதற்கு தமிழ் நாடு அரசு இணைய தளத்தில் முதல்வர் தனி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு உள்ளது ...ஆனால் பதிவு செய்த பிறகு தொடர்பு கொள்ள முடிவதில்லை ....அரசு அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம் "....இவர்களின் இந்த முடிவுக்கு காரணம் அதிமுக கட்சிக்காரர்களே தவிர மற்ற எவரும் இல்லை என்பது தெளிவாகிறது "
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
08-மே-201310:06:07 IST Report Abuse
Srinivasan Kannaiya இவங்களை பற்றி எல்லோரும் பேசறாங்க இல்ல .. எல்லாம் ஒரு விளம்பரம்தான் ... மறந்து பொய் இருந்தவங்க எல்லாம் இப்போ ஞாபகம் வச்சிப்பாங்கபா.
Rate this:
Share this comment
Cancel
சங்கே முழங்கு - chennai,இந்தியா
08-மே-201307:40:47 IST Report Abuse
சங்கே முழங்கு இது ஒரு தவறான முன்னுதாரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது விபரிததில் முடியலாம். இது போன்ற விஷயத்தை ஆதரிக்காமல், செய்தியாகவும் ஆக்காமல் இருத்தல் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
08-மே-201307:39:19 IST Report Abuse
NavaMayam அதுதான் ஒட்டு போட்டாசுல .... திரும்ப திரும்ப அதற்கே முயற்சி செய்தால் எப்படி ......
Rate this:
Share this comment
Cancel
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
08-மே-201304:53:42 IST Report Abuse
vaaithaa vampan உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்குட்பட்ட, திருநாவலூர் ஒன்றிய எம்.ஜி.ஆர்., மன்ற இணைச் செயலர் ராஜா,47, மனு கொடுக்க வந்தார். அவர் திடீரென, கையில் எடுத்து வந்திருந்த, பூச்சி மருந்து பாட்டிலை திறந்து, அதிலிருந்த மருந்தை குடிக்கத் துவங்கினார்.எனது தம்பி கொலை குறித்து நீதி விசாரணை வேண்டும். கொலையாளிகள் கைது செய்யப்பட வேண்டும்' என, வலியுறுத்தி தற்கொலைக்கு முயற்சித்ததாக தெரிவித்தார்.தொடர் விசாரணைக்காக, அவரை போலீசார், போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். "விஷம் குடித்தவரை ஆஸ்பத்திரிக்கு தானே கூட்டிகிட்டு போவாங்க" விஷம் என்று எழுதிய புட்டியில் மிடாஸ் டானிக் ஊற்றிவைத்து இருந்து குடித்து இருப்பாரோ......... ஏனென்றால் இவர் அய்மாவின் உண்மை தெண்டனல்லவோ......................,
Rate this:
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
08-மே-201301:04:07 IST Report Abuse
Thangairaja போட்டியே இல்லாத கூட்டுறவு சங்க தேர்தலை நடத்துவதிலேயே.....இப்படி அடிதடி தற்கொலை முயற்சிகளுடன் அம்மாவின் அதிரடி பளிச்சிடுகிறது......
Rate this:
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
08-மே-201300:20:36 IST Report Abuse
Ambaiyaar@raja இதுக்கு பெயர் தான் சீன் போடுவது சென்னை பாஷையில் சொன்னால் அது தான். இதனால் ஜெயாவிடம் பெயர் வாங்கலாம் என்பதால் மட்டுமே இது நடகின்றது. இது போல் செய்பவர்களை பிடித்து கடுமையா தண்டிக்கவேண்டும் அப்போது தான் இதன் எண்ணத்துடன் வரும் யாரும் அப்படி இனி செய்யமாட்டான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை