Advertisement
தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் :தமிழக அரசுக்கு அவகாசம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

09 மே
2013
00:36
பதிவு செய்த நாள்
மே 07,2013 23:12

புதுடில்லி: தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள, "டாஸ்மாக்' கடைகளை, ஆகஸ்ட், 14ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள, "டாஸ்மாக்' மதுபான கடைகளை, மார்ச், 31ம் தேதிக்குள் வேறு இடத்திற்கு மாற்றும்படி, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. மொத்தம், 504 மதுபான கடைகளை மாற்றும்படி, ஐகோர்ட் உத்தரவில் குறிப்பிடப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு சார்பில், அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கூறப்பட்டிருந்ததாவது:
தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள, டாஸ்மாக் மதுபான கடைகளை, வேறு இடங்களுக்கு மாற்றும் பணியை முற்றிலும் முடிப்பதற்கு, ஐந்து மாதம் அவகாசம் தேவைப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைளை ஒட்டி அமைந்திருந்த டாஸ்மாக் கடைகளில், 291 கடைகள், ஏற்கனவே வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு விட்டன.
மீதமுள்ள கடைகளை அகற்றுவதற்கு, கால அவகாசம் வேண்டும். மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள கடைகளை அகற்றுவதில் சில சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக வணிக வளாகங்கள் அருகே இருப்பதால், அவற்றை அகற்றுவதில், சிக்கல், இடையூறுகள் உள்ளன. இப்போதுள்ள கடைகள் அருகே, கல்வி நிறுவனங்களோ, வழிபாட்டுதலங்களோ இல்லை. மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி, அமைந்துள்ள கடைகள் பெரும்பாலும் மார்க்கெட் பகுதியில் தான் உள்ளன. இந்த கடைகளை, மக்கள் குடியிருப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிக்கு மாற்ற முடியாது. அதே போல் தொழிற்சாலைகள் உள்ள பகுதிக்கும் மாற்ற முடியாது. எனவே, இதற்கான இடங்களை தேர்வு செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறதுஇவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள், ஆர்.எம்.லோத்தா மற்றும் சரத் ஏ.போப்டே பிறப்பித்த உத்தரவு:நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூடும்படி சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள, டாஸ்மாக் கடைகளை, ஆகஸ்ட், 14ம் தேதிக்குள் அகற்றுவதற்கு, தமிழக அரசுக்கு கால அவகாசம் வழங்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (19)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankara Narayanan - Bangalore,இந்தியா
08-மே-201322:12:19 IST Report Abuse
Sankara Narayanan மாண்பு மிகு அம்மா அவர்களே குடும்பப் பெண்கள் மற்றும் அப்பாவி ஜனங்களின் அல்லல் உங்களுக்குப் புரியுமா.பணம் ஒன்றுதான் பிரதானம் என்று உள்ளீர்கள்.. மக்கள் எப்படி வேண்டுமானாலும் குடித்து சாகட்டும் அல்லவா.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
james arul rayan - chennai ,இந்தியா
08-மே-201320:51:07 IST Report Abuse
james arul rayan குடி குடியை கெடுக்கும் என்பது போய் வாழ்க வளமுடன் என்றல்லவா இருக்கிறது. குடித்தால் வளமுடன் வாழலாமா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
T.C.MAHENDRAN - YELAGIRI / JAVVAADHU HILLS,இந்தியா
08-மே-201313:09:20 IST Report Abuse
T.C.MAHENDRAN இந்த 504 மதுபான கடைகளும் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளிகள் நடத்தும் கடைகளாக இருப்பதால்தான் ,இந்த கால அவகாசமோ ?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
HARINARAYANAN - Chennai,இந்தியா
08-மே-201312:33:17 IST Report Abuse
HARINARAYANAN நெடுஞ்சாலைகளில் இருந்தால் கனரக சரக்கு வாகன ஓட்டிகள் மிக எளிதாக வண்டியை ஓரங்கட்டி விட்டு உள்ளே சரக்கை ஏற்றிக்கொண்டு செல்ல எதுவாக இருக்கிறது என்பதால் தான் உயர்நீதி மன்றம் அவற்றை அங்கிருந்து அகற்ற சொன்னது.... அவற்றை அகற்றுவதில் அப்படி என்னய்யா பிரச்சினை..... மாற்று இடம் கிடைக்க வில்லை என்றால் மூட வேண்டியதுதானே.... அவை என்ன ரேஷன் கடைகளா?... இல்லை மலிவு விலை உணவகமா? .... இல்லை அரசு மருத்துவமனையா? .... இலை கோயில்களா ?.... தொழிற்கூடங்களா?.....மூடக்கூடாது என்று சொல்வதற்கு? ...... இந்த கேடுகெட்ட அரசின் மக்கள் நல அக்கறை வெட்ட வெளிச்சமாக தெரிகிறதா?..... அ தி மு க அபிமானிகள் நேசி தொட்டு சொல்லட்டும்....
Rate this:
0 members
0 members
9 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
08-மே-201312:24:59 IST Report Abuse
villupuram jeevithan மதுவிலக்கு உள்ள குஜராத்தில் சாலை விபத்துகளே இல்லையாமே?
Rate this:
5 members
0 members
2 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
08-மே-201310:46:55 IST Report Abuse
mirudan கோர்ட் ஆணை மக்களே ஒரு பொருட்டாக எடுத்து கொள்வதில்லை ஒரு அரசு ஏற்று கொள்ளுமா ? ஆகஸ்ட் 14 மறுபடியும் மனு தாக்கல் செய்து அடுத்த ஆகஸ்ட் 31, 2014 வரை கால கெடு கேட்டு அதையும் நீதிமன்றம் ஏற்று கொள்ளலாம் ?
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
08-மே-201310:11:10 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் மக்கள் எப்படி போனால் என்ன ??? நமக்கு வருமானம் வேண்டும் என்று அதிமுக அரசு கீழ்த்தரமாக சிந்திக்கிறது.. நெடுஞ்சாலை மதுக்கடைகளை எதற்கு வேறு இடத்திற்கு மாற்றுகிறீர்கள் ?? அதனை முற்றிலும் மூடி விட்டால் எந்த பிரச்சினையே இல்லை... அவகாசம் கேட்க வேண்டிய அவசியமே இல்லையே... அரசின் நோக்கில் அவர்கள் கருத்துகளை ஆராயும்போது மக்களின் நலனை கருத்தில் கொள்ள வில்லை என்று அழகாக , ஆழமாக , அருமையாக , எளிமையாக தெரிகிறது.. அவர்களுக்கு தேவை வருமானம் மட்டுமே.. பெயருக்கு டாஸ்மாகினை மூடினால் கள்ளசாராயம் பெருகும் என்று புளுகுகிறார்கள்.. அப்படி பெருகினால் அதனை தடுக்க , ஒடுக்க தானே காவல் துறை ??? அப்படியே பெருகினாலும் எத்தனை பேர் கள்ளசாராயம் தேடி போவார்கள் ??? இப்போது நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையினை மூடினால் கள்ளசாராயம் பெருகுமா ??? நெடுஞ்சாலை மது கடைகளை மூடுவதால் எவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்று எளிமையாக பட்டியலிட முடியும், நெடுஞ்சாலை மதுக்கடைகள் மூலம் ஒரே ஒரே நன்மை என்ன என்று அரசு சொல்ல முடியுமா ??? ஏன் ஊருக்கு உள்ளே இருக்கும் கடையால் கூட என்ன நன்மை ??? இப்படி பல வினாக்களை கேட்டு கொள்வதன் மூலம் அரசிற்கு வருமானம் வேண்டும் என்பதால் தன் மக்களையே குடிக்க வைத்து சீரழிக்கிறது அதிமுக அரசு... பிறகு அந்த பணத்தில் பாதியை அந்த மக்களுக்கே செலவு செய்கிறது.. மீதியை இவர்கள் அழுத்தி கொள்கிறார்கள்.. பாவம் வைகோ , இதுவரை 1130 கிலோ மீட்டர் பூரண மதுவிலக்கு வேண்டியும் , மக்களிடம் மதுவை பற்றிய விழிப்புணர்வும் உண்டாக்க நடந்து உள்ளார்.. அவரிடம் மது கடைகளை தயவு செய்து மூட ஏற்பாடு செய்யுங்கள் என்று கெஞ்சிய , அழுத பெண்களின் கண்ணீருக்கு , அவர்கள் சாபத்துக்கு ஜெயா , கருணா கண்டிப்பாக பதில் சொல்லியே ஆகவேண்டும்... தர்மம் தான் வெல்லும்... பொறுத்திருந்து பாருங்கள்...
Rate this:
5 members
0 members
12 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-மே-201309:49:23 IST Report Abuse
kumaresan.m நமது சட்டம் தண்ணி பாம்பு கடிப்பதை போல் உள்ளது. அதனால் தான் இந்த ஆட்டம் கரு நாகம் போன்று கொடிய விஷம் கொத்திய ஒரு மணி நேரத்திற்குள் உயிர் போய் விடும் என்று பயம் வந்தால் ....ஆட்டம் எல்லாம் ஓட்டம் எடுத்துவிடும் என்பதில் யாருக்கும் டௌட்டே இருக்க முடியாது "
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-மே-201309:44:06 IST Report Abuse
kumaresan.m " எதற்கு மாற்ற வேண்டும்? அனைத்து கடைகளும் மூடினால் யார் குடியும் மூழ்கி விடாது ...... குடும்பங்கள் தான் காப்பாற்றப்படும் இது ஒன்றும் நல்ல காரியம் அல்ல அவகாசம் தருவதற்கு .....கணம் நீதிபதி அவர்கள் ஆகஸ்ட்- 14 முடிவடைந்தும் மூட வில்லையென்றால் என்ன தண்டனை என்று கடைசி வரை சொல்லவே இல்லையே ஏன் ?
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
08-மே-201309:09:16 IST Report Abuse
PRAKASH august 15 2013 செய்தி : தேசிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் :தமிழக அரசுக்கு டிசம்பர் 31 வரை அவகாசம்.. போங்கடா நீங்களும் உங்க சட்டமும்
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.