20 rupees rice sales : Stagnation the bags in salem | 20 ரூபாய் அரிசி விற்பனை "டல்' சேலத்தில் மூட்டைகள் தேக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20 ரூபாய் அரிசி விற்பனை "டல்' சேலத்தில் மூட்டைகள் தேக்கம்

Updated : மே 08, 2013 | Added : மே 07, 2013 | கருத்துகள் (24)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 20 ரூபாய் அரிசி விற்பனை "டல்' சேலத்தில் மூட்டைகள் தேக்கம்

சேலம்: தரமான அரிசி, 20 ரூபாய் என்ற வகையில் துவங்கப்பட்ட திட்டத்துக்கு, மக்களிடையே வரவேற்பு இல்லை. சேலம் கூட்டுறவு அங்காடிகளில் விற்பனை இல்லாததால், அரிசி மூட்டைகள் தேக்கமடைந்துள்ளன.
தமிழகத்தில், அரிசி விலை அதிகரித்து வந்ததால், ஒரு கிலோ, 20 ரூபாய்க்கு தரமான அரிசி வழங்கும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும், 174 கூட்டுறவு அங்காடிகளில் இந்த அரிசி விற்கப்பட்டது. ஆரம்பத்தில், இந்த அரிசியை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டினர்.காலப்போக்கில், ரேஷனில் வழங்கப்படும் விலையில்லா அரிசியும், 20 ரூபாய் அரிசியும் ஒரே மாதிரியாக இருந்ததால், பொதுமக்கள் அவற்றை வாங்குவதை தவிர்த்தனர். பச்சரிசியை மட்டும் வாங்கிச் சென்றனர். தற்போது, 20 ரூபாய் அரிசி விற்பனை, மிகவும், "டல்' அடித்துள்ளது. சேலத்தில், அரிசி வழங்க ஒதுக்கப்பட்ட, மூன்று கூட்டுறவு அங்காடிகளிலும் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கிறது.இது குறித்து, கூட்டுறவு அதிகாரிகள் கூறியதாவது:கிலோ, 20 ரூபாய் அரிசி திட்டத்தில், சிவில் சப்ளை மூலம் எங்களுக்கு ஒதுக்கீடு வரும். திட்டம் ஆரம்பித்தபோது, நாள் ஒன்றுக்கு, 70 மூட்டை அரிசி விற்பனையானது. 10 கிலோ, 20 கிலோ என, மக்கள் கேட்கும் அளவுக்கு கொடுத்தோம். தற்போது, 20 மூட்டை அரிசி விற்பதே சிரமமாக இருக்கிறது. பிரமாதம் என்று சொல்லும் வகையில், அரிசி இல்லை. இதனால், அரிசி மூட்டைகள் தேங்கிக் கிடக்கின்றன.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
gmk1959 - chennai,இந்தியா
08-மே-201317:43:55 IST Report Abuse
gmk1959 அரிசி தரமானதாக இல்லை
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
08-மே-201317:28:16 IST Report Abuse
Pannadai Pandian ஒரு ரூபாய் அரிசி மேல மக்கள் ரொம்ப சந்தோசமா இருக்காங்க. ராமலிங்க அடிகள் போல உணவு இல்லா தவிக்கும் மக்களுக்கு பல விதங்களில் உதவுகிறார். பசியில் வாடும் ஜீவன்களுக்கு தான் பசியின் கொடுமை தீரும். அவர்களுக்கு ஜெயா கடவுள்.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
08-மே-201313:12:30 IST Report Abuse
PRAKASH 20 ரூபா குடுத்து எதுக்கு வாங்கணும்.. இன்னும் ஒரு மாசத்துல அம்மா உணவகம் சேலத்துலயும் வரபோகுது .. அதன் மக்கள் உஷராயிட்டங்க
Rate this:
Share this comment
Cancel
Mohi - Chennai,இந்தியா
08-மே-201311:17:02 IST Report Abuse
Mohi விரைவில் வெளி வர இருக்கிறது: அம்மா இட்லி கடை டல், வியாபாரம் இல்லாமல் இட்லிகள் தேக்கம்.
Rate this:
Share this comment
Cancel
makkaliloruvan - Erode,இந்தியா
08-மே-201310:46:17 IST Report Abuse
makkaliloruvan அரசின் தரம் அப்படி ..
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
08-மே-201310:38:50 IST Report Abuse
mirudan இலவச அரிசியை வாங்கி ரோட்டு ஒர தள்ளு வண்டி விற்கும் இட்லி கூட ஐந்து ரூபா குறைந்த பட்ச விலையாக இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
08-மே-201310:35:39 IST Report Abuse
mirudan அரசு தனக்கு இருக்கும் அதிகாரத்தை கொண்டு விலைவாசி உயர்வை கட்டு படுத்தலாம், அரிசி விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசி ஆலைகள் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி பகல் கொள்ளை அடிக்கிறார்கள். முதலில் கணக்கில் எத்தனை மூட்டை நெல் வைத்து இருக்கிறார்கள் எத்தனை மூட்டை கணக்கு இல்லாமல் விற்கிறார்கள் என கண்காணிக்க வேண்டும். தங்கம் போன்று நாள் தோறும் விலையை ஏற்றி கொண்டே போகிறார்கள். அரிசியை அரசே விற்பனை செய்வது அரசு ஊழியர்ககுக்கு தான் ஆதாயமாக இருக்கு. மக்கள் 50, 60 என்று விலை கொடுத்து வாங்கி கொண்டுதான் இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
08-மே-201310:31:05 IST Report Abuse
kumaresan.m " இலவசமாகவே சாப்பிட்டு பழக்க பட்ட நாக்காச்சே அவ்வளவு எளிதில் மாறிவிடுமா என்ன ?
Rate this:
Share this comment
Chenduraan - kayalpattanam,இந்தியா
08-மே-201316:12:00 IST Report Abuse
Chenduraanகொஞ்சம் டீசெண்டாக பேச பழகுங்கள்... அது இலவசம் இல்லை... விலையில்லா.......
Rate this:
Share this comment
Cancel
P.Kamarajapandian - Bodinayakanur,இந்தியா
08-மே-201310:21:26 IST Report Abuse
P.Kamarajapandian 20 ரூபாய்க்கு அரிசி திட்டம் அருமையான திட்டம் தான் ஆனால் ரேசன் கடையில் இலவசமாக போடும் அரிசியை போட்டால் எப்படி மக்கள் வாங்கு வார்கள், நானும் போன வாரம் கூட்டுறவு கடையில் 5 கிலோ அரிசி 100 ரூபாய்கு வாங்கி வந்தேன் அந்த அரிசி ரேசன் கடையில் இலவசமாக போடும் அரிசியை விட மோசமாக இருந்தது, அதில் கருப்பு அரிசி நிறைய இருந்தது அந்த கருப்பு அரிசியை பிரித்து எடுப்பதற்கே 4 மணி நேரம் ஆகி விட்டது, பின்பு அதை சாம்பிள்கு சமைத்து பார்த்தார்கள் சாப்பாடு கொச கொச என்று இருந்தது. என்னை வீட்டில் வாய்க்கு வந்த படி எல்லோரும் எந்த முட்டாளாவது ரேசன் கடையில் இலவசமாக போடும் அரிசியை 100 ரூபாய்கு வாங்குவானா என்று திட்டி தீர்த்து விட்டார்கள். நல்ல திட்டம் ஆனால் அரிசி தரம் இல்லை
Rate this:
Share this comment
சாமி - மதுரை,இந்தியா
08-மே-201316:17:18 IST Report Abuse
சாமிஇளிச்ச வாயன் இளிச்ச வாயன் நாம்இளிச்ச வாயன் ...
Rate this:
Share this comment
Cancel
godwin kingsly - tamilnadu,இந்தியா
08-மே-201309:45:15 IST Report Abuse
godwin kingsly முதலில் அமோக வரவேற்பு,இடையில் அதிருப்தி.தற்போது டல். அடுத்து?
Rate this:
Share this comment
vijayan - Colombo,இலங்கை
08-மே-201315:17:09 IST Report Abuse
vijayanகோவிந்தா கோவிந்தா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை