With Parliament in deadlock, Sonia Gandhi reaches out to Sushma Swaraj | சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி பேசிய சோனியா: எம்.பி.க்கள் முணுமுணுப்பு| Dinamalar

சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி பேசிய சோனியா: எம்.பி.க்கள் முணுமுணுப்பு

Updated : மே 08, 2013 | Added : மே 07, 2013 | கருத்துகள் (77)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி பேசிய சோனியா: எம்.பி.க்கள் முணுமுணுப்பு

புதுடில்லி: லோக்சபாவில் நேற்று, எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு ஆளான, காங்கிரஸ் தலைவர் சோனியா, எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி, பேசிக் கொண்டு சென்றது பலரின் கவனத்தையும் கவர்ந்தது.லோக்சபாவில் நேற்று அமளியில் ஈடுபட்ட, பா.ஜ., - எம்.பி.,க்கள், காங்கிரஸ் தலைவர் சோனியாவை தாக்கும் விதமாக, கடும் கோஷங்கள் எழுப்பினர். உறுப்பினர்கள் அமளியால், லோக்சபா ஒத்திவைக்கப்பட்டதும், பார்லிமென்டின் மத்திய மண்டபத்தை நோக்கி, பா.ஜ.,வைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், தன் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் அத்வானியுடன், பார்லிமென்ட் மைய மண்டபத்தை நோக்கிச் சென்றார்.அப்போது வேகமாக பின்னால் வந்த சோனியா, சுஷ்மாவின் தோளில் கைவைத்தபடி, சிறிது தூரம் பேசிக் கொண்டே சென்றார். அவர்கள் என்ன பேசினர் என்பது யாருக்கும் தெரியவில்லை. இருந்தாலும், சோனியாவும், சுஷ்மாவும் ஒன்றாக சென்றது பலரையும் வியப்படைய வைத்தது.அரசியல் எதிரிகளாக கருதப்படும் இருவரும் ஒன்றாக பேசிக் கொண்டு சென்றது, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., தலைவர்கள் மத்தியில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற, பா.ஜ.,வின் ஆதரவைப் பெறும் வகையிலேயே, சோனியா இவ்வாறு நடந்து கொண்டதாக சில எம்.பி.,க்கள் மட்டும் முணுமுணுத்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar iyer - chennai,இந்தியா
08-மே-201320:36:25 IST Report Abuse
sundar iyer என்ன தான் நீங்க மேல கை போட்டாலும் சரி, காலை போட்டாலும் சரி, நாங்க உங்க தலைல துண்டை மட்டும் தான் போடுவோம் என்று சொல்லி இருப்பாரோ சோனியா?
Rate this:
Share this comment
Cancel
Gilbert karunagaran - Istres ,பிரான்ஸ்
08-மே-201320:13:44 IST Report Abuse
Gilbert karunagaran எதிர் கட்சிதான், எதிரி அல்லவே
Rate this:
Share this comment
Cancel
ரகு - chennai ,இந்தியா
08-மே-201319:02:02 IST Report Abuse
ரகு தோளில் கைபோட்டு கழுத்தை நெரித்து கொல்லாமல் இருந்தால் சரி
Rate this:
Share this comment
Cancel
Riyas Ahamed - paris,பிரான்ஸ்
08-மே-201318:56:34 IST Report Abuse
Riyas Ahamed இதுதான் மனிதகுலத்துக்கு உள்ள இயல்பான குணம். அரசியல் வேறு மனிதாபிமானம் வேறு. உண்மை அரசியல் ஜெயிக்கட்டும்.
Rate this:
Share this comment
nellai singam - Tenkasi,இந்தியா
08-மே-201321:21:09 IST Report Abuse
nellai singamஅத்வானி மீது போடட வரைக்கும் நல்லது...
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
08-மே-201318:50:49 IST Report Abuse
Ambika. K 1990 ல் நான் நேரில் கண்ட ஒரு காட்சி திருவனந்த புரத்தில் ரயில்வே ஸ்டேஷன் அருகில் ஒரு சின்ன திடல் அங்கு திரு E . K . நாயனார் ஒரு பொது கூட்டத்தில் பேசி கொண்டு இருந்தார். அவர் கேரளாவில் எதிர் கட்சி தலைவர். அப்பொழுது ட்ரைன் பிடிப்பதற்காக திரு கருணாகரன் காரில் வந்து இறங்கினார். இவர் அவரை பார்த்து கை அசைத்ததும் அவரும் சிரித்து கொண்டே கை அசைத்து வழி அனுப்பினார். இதில் காமெடி என்னவென்றால் அப்பொழுதுதான் திரு நாயனார் கருணாகரனை பற்றி கிழி கிழி என்று கிழித்து கொண்டு இருந்தார். நாமும் இப்படி யோசிப்போம் சென்னை சென்ட்ரல் போதுக்கொட்டம் பி தானை ட்ரைன் பிடிக்க அம்மா அங்கு வந்தால் ஆஹா சூப்பர்
Rate this:
Share this comment
Cancel
Arjun Narayanasamy - Theni,இந்தியா
08-மே-201316:24:32 IST Report Abuse
Arjun Narayanasamy அமெரிக்க உள்ளிட்ட மேலை நாடுகளில் அரசியல் தலைவர்கள் பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்து பேசி கொள்வதும், சேர்ந்து பொது நிகழ்சிகளில் கலந்து கொள்வதும் வாடிக்கையான ஒன்றுதான். இந்தியாவில்தான் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது நமக்கெல்லாம் ஆசிரியம் தரும் விஷயமாக இருக்கிறது. எப்படியோ அந்த அரசியல் நாகரிகம் நம் நாட்டிலும் வந்தால் மிக்க மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
KKsamy - Jurong,சிங்கப்பூர்
08-மே-201315:46:08 IST Report Abuse
KKsamy நான் அடிகிறமாதிரி அடிக்கிறேன் நீ அழுவுறமாதிரி அழுவு. இது இன்னைக்கு நேத்து இல்ல எப்போதும் நடக்குறதுதான். என்னைக்காவது ஊழல் நடக்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ பிஜேபி குரல் கொடுத்திருக்கிறதா எதாவது ஒரு கண்டுபிடித்தால் அந்த முறை முழுவதும் சபையை ஸ்தம்பிக்க வைக்கும் வேலையை கனகச்சிதமாக செய்கிறது அதனால் ஒரு புண்ணியமும் இல்லையென்றாலும் ஏன் அதையே செய்கிறது என்பதை எண்ணிபர்கவேண்டும் காங்கிரஸ் செய்யும் ஊழல்களில் பிஜேபி க்கும் கணிசமான பங்கு உண்டு
Rate this:
Share this comment
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
08-மே-201314:25:54 IST Report Abuse
Hariganesan Sm ஆள்பவரும், எதிரணியினரும் பேசவே கூடாதா.. முதிர்ந்த அரசியல் மனப் பக்குவத்தைக் காட்டுகிறது.. நல்ல விஷயம் தானே. இது மாதிரி சுமுக உறவுகள் வளரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
08-மே-201313:01:36 IST Report Abuse
Sham நாட்டிற்கு நல்லது... நடக்கட்டும்..
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
08-மே-201312:42:09 IST Report Abuse
K Sanckar எதிர் கட்சி எதிரிகள் அல்லவே. தோளில் கை போட்டு பேசினால் என்ன தவறு. ? ஜனநாயக அமைப்பில் கருத்துக்கள் எதிர்த்து வரும் ஆனால் தனிப்பட்ட முறை இருவரும் எதிரிகள் போல நடந்து கொள்ள கூடாது. தமிழ்நாட்டில் தான் இந்த பண்பாடு கிடையாது. . ஜெயலலிதாவும் கருணாநிதியும் சந்தித்தது கிடையாது. சட்ட சபைக்கு கூட கருணாநிதி வருவதில்லை. இது கருணாநிதியை பொறுத்த வரையில் தமிழன் பண்பாடு.
Rate this:
Share this comment
james arul rayan - chennai ,இந்தியா
08-மே-201320:01:37 IST Report Abuse
james arul rayanஎதிர்கட்சியாகிவிட்டால் ஜெயலலிதாவும் சட்டசபைக்கு வரமாட்டார்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை