E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
டெடா' மெத்தனம்: மானியத்தை நிறுத்தியது மத்திய அரசு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மே
2013
01:46
பதிவு செய்த நாள்
மே 08,2013 23:16

வீடுகளில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான தளவாடங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு, கடந்த ஓராண்டாக மத்திய அரசின் மானியம் கிடைக்கவில்லை. இதனால், தமிழகத்தில் இந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் முடங்கும் நிலையில் உள்ளன.இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம், "டெடா - தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் ஏஜென்சி' எனப்படும், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமையின், மெத்தன செயல்பாடு தான் என, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
மானியம்
நாடு முழுவதும் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிக்க, சூரிய சக்தி மூலமான மின் உற்பத்திக்கு,தேசிய சூரிய சக்தி கொள்கையின் அடிப்படையில், மத்திய அரசு மானியம் வழங்குகிறது.அதில் ஒரு பகுதியாக, வீடுகளில்சூரிய மின் உற்பத்தி செய்ய விரும்பு@வாருக்கு, தளவாட செலவில், 30 சதவீதத்தை, மத்திய அரசு மானியமாக வழங்குகிறது. இது, நேரடியாக வழங்கப்படாமல், தளவாடங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
உதாரணத்திற்கு, தினமும், 5 யூனிட் வரை உற்பத்தி செய்யக்கூடிய, 1 கிலோவாட் திறனுள்ள சூரிய மின் கட்டமைப்பை, வீட்டு கூரையில் அமைக்க, 2.50 லட்சம் ரூபாய் செலவாகும். இதில், 75 ஆயிரம் ரூபாயை, மத்திய அரசு மானியமாக, தளவாட விற்பனை நிறுவனத்திற்கு அளிப்பதால், செலவு, 1.75 லட்ச ரூபாயாக குறைகிறது.
இந்த மானியத்தை, நிறுவனங்களுக்கு பெற்றுத் தர வேண்டிய பொறுப்பு, "டெடா'விடம் உள்ளது.
மெத்தனம்
ஆனால், இந்த பணியை, "டெடா' சரியாக செய்யாததால், நிறுவனங்களுக்கு கிடைக்க வேண்டிய மானியம், கடந்த ஒரு ஆண்டாக கிடைக்கவில்லை. இதனால், அந்த நிறுவனங்களுக்கு, பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத மின் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், சூரிய சக்தி மின்சார உற்பத்தி மேம்பாட்டிற்காக, ஆண்டுதோறும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து, தமிழக அரசின், "டெடா' அமைப்பு மத்திய அரசுக்கு, பயன்பாட்டு சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். நிதி பெறப்பட்ட, இரண்டு ஆண்டுகளுக்குள் இதை, "டெடா' செய்ய வேண்டும்' என்றார்.
மேலும், "ஆனால், 2010-2011ல் பெற்ற நிதிக்கான சான்றிதழை, இந்த ஆண்டு மார்ச் மாதம் தான், "டெடா' சமர்ப்பித்து உள்ளது. இதனால், 2012-13ம் ஆண்டிற்கான நிதியை தருவதற்கு மத்திய அரசு மறுத்து விட்டது. தொடர்ந்து, மானியம் பெற, "டெடா' அளித்த எந்தவொரு விண்ணப்பத்தையும், மத்திய அரசு பரிசீலிக்கவில்லை' என்றார்.
முடக்கம்
இதனால், மானியத்தை நம்பி விற்பனை செய்துள்ள சூரிய மின் தளவாட விற்பனை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து, சூரிய சக்தி சாதனங்கள் தயாரிப்பு மற்றும் தளவாட விற்பனையில் ஈடுபட்டுள்ள, சோல்கார் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர், ரகுநாதன் கூறுகையில், ""60க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, கிடைக்க வேண்டிய மத்திய அரசின் மானிய தொகை, ஓராண்டாக கிடைக்கவில்லை. மானிய தொகை குறித்து,"டெடா'வை அணுகினால், மானிய தொகை எப்போது வரும் என்று சொல்ல முடியாது என்கின்றனர்,'' என்றார்.ஓராண்டாக மத்திய அரசின் மானிய தொகை கிடைக்கவில்லை என்பதை, தமிழ்நாடு சோலார் எனர்ஜி டெவலப்பர்ஸ் சங்கமும் உறுதிபடுத்தியது.இதனால், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட, தமிழக சூரிய மின் கொள்கையில், நிர்ணயிக்கப்பட்ட சூரிய சக்தி மின்சார உற்பத்தி இலக்கான, 3,000 மெகாவாட்டை எட்டுவதில், முட்டுக்கட்டை உருவாகி உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால், சூரிய சக்தி மின்சார துறையில் செயல்படும் நிறுவனங்கள், தமிழகத்தில் முடங்கும் நிலை ஏற்படும் என, அந்த துறையினர் தெரிவித்தனர். -நமது நிருபர்-




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (8)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sham - Ct muththur,இந்தியா
09-மே-201313:44:15 IST Report Abuse
Sham இதற்கு எல்லாம் வீணாக கவலைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டியதில்லை... எல்லாத்துறைக்கும், ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக, 110 விதியின் கீழ்., "அம்மாவே".... அறிக்கை படித்தாயிற்று..... எல்லா பிரச்சனையும் அப்போதே தீர்ந்தாயிற்று . ... மாநிலத்தில் எந்த குறையுமின்றி மக்கள் மிக சுபிட்ச்சமாக வாழ்ந்து வருகிறார்கள்... லகுட பாண்டிகளா .. இன்னுமென்ன வேண்டும்... இதெல்லாம் எதிர்கட்சிகளின் பொய்பிரச்சாரம்... எதிர்கட்சிகளின் சதிக்கு தினமலரும் ஏமாந்துவிட்டது ... ஹையோ...ஓ.. ஹையோ... போங்கப்பு.... உங்களுக்கு வேற வேலையே இல்லை...
Rate this:
2 members
0 members
34 members
Share this comment
Cancel
Suresh - Marthandam,இந்தியா
09-மே-201311:03:19 IST Report Abuse
Suresh சோலார் எனர்ஜி வீட்டில் அமைக்க எவ்வளவு செலவு, மானியம் எவ்வளவு,,என்னென்ன வகைகள் ..என்றெல்லாம் அரசாங்கம் விளம்பரம் செய்யலாம் ...
Rate this:
0 members
18 members
7 members
Share this comment
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-மே-201310:24:04 IST Report Abuse
Sriram V TEDA officials should be susped for lacklusture attitude. CM is trying to bring the good schemes to public, however these sort of government officials is spoiling the tem. They should be susped and young engineers should be given the job. Hope TEDA is not headed by corrupt politicians
Rate this:
68 members
0 members
5 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மே-201308:39:56 IST Report Abuse
Srinivasan Kannaiya மின்வெட்டு இருக்கும் இந்த நேரத்தில் தமிழக அரசு முழு மூச்சில் இந்த சலுகைகளை மக்களுக்கு பெற்று தந்தால் நல்லது. இந்த திட்டம் குறித்து பெருத்த விளம்பரம் தேவை..
Rate this:
0 members
36 members
19 members
Share this comment
Cancel
Jay - Chennai,இந்தியா
09-மே-201307:54:13 IST Report Abuse
Jay இனி வரும் காலங்களில் சூரிய சக்தி வழியான மின்சாரமே நாட்டின் மின் தேவையை பூர்த்திசெய்யும். இது ஏன் அரசுகளுக்கு புரியவில்லை என்பது வேதனையாய் இருக்கிறது. மானிய விலையில் மக்களுக்கு உபகரணங்களை வழங்கி உதவவேண்டும். இந்த ஒரு எளிய வழியை விட்டு விட்டு வேறு வழிகளை சிந்திப்பது இப்பொழுது தேவையற்றது. அரசே சூரிய சக்தி தான் நம் எதிர்காலம் இயற்கையை காப்போம், இயற்க்கை முறையையே கையாளுவோம்
Rate this:
0 members
0 members
81 members
Share this comment
Cancel
Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா
09-மே-201306:40:57 IST Report Abuse
Prabhakaran Shenoy நான் எனது வீட்டில் போட்ட சோலார் water heater subsidy கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் வந்து சேரவில்லை. எல்லாமே மோசடி கம்பனிகள்.
Rate this:
1 members
58 members
17 members
Share this comment
Cancel
Anban - TirunelVeli,இந்தியா
09-மே-201303:05:01 IST Report Abuse
Anban 110 விதியின் கீழ் இன்று ஒரு அறிவிப்பு வரும். "எனது தலைமையிலான இந்த அரசு, கடந்த வருடம்[TN Govt Solar Policy-2012] , 3000 MW சூரிய மின்சார தயாரிப்புக்கு திட்டம் தீட்டியிருந்தது. ஆனால், எனது தலைமையிலான இந்த அரசின் மீது, மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பாங்குடன் நடக்கிறது. அதனால் , சூரிய மின் உற்பத்தி தளவாடங்கள் தயாரிக்க, தமிழகமெங்கும் தொழில் நுட்ப பூங்காக்கள் திறக்க படும். இதன் மூலம், தமிழகம் அடுத்த வருடத்திலே 'மின் மிகை' மாநிலமாக மாறும்."
Rate this:
7 members
0 members
184 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
09-மே-201302:31:33 IST Report Abuse
NavaMayam இதிலும் அதிக ஊழல் நடக்கிறது ... சோழர் பேணல் போடாமலேயே போட்டது போல் கணக்கு காட்டி இந்த நிறுவனங்கள் உதவித்தொகையை மட்டும் வாங்கிகொல்கின்றன ... நோகாமல் நொங்கு தின்கிறார்கள்....
Rate this:
10 members
1 members
86 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.