central team in nagai | வறட்சி நிவாரண பார்வையாளர் குழுகண்துடைப்பா? : விவசாயிகள் குமுறல்| Dinamalar

வறட்சி நிவாரண பார்வையாளர் குழுகண்துடைப்பா? : விவசாயிகள் குமுறல்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
 வறட்சி நிவாரண  பார்வையாளர் குழுகண்துடைப்பா? : விவசாயிகள் குமுறல்

நாகப்பட்டினம்: வறட்சி குறித்து, நாகை மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்திய குழுவால், எதிர்பார்த்த பலன் கிடைக்குமா, என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.காவிரியின் கடைமடையான நாகை மாவட்டத்தில், கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதிப்புகளை பார்வையிட வந்துள்ள, மத்திய குழு, நாகை மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்தது.நாகை கலெக்டர் முனுசாமி மற்றும் அதிகாரிகளுடன், காலை, 9:30 மணிக்கு ஆய்வு மேற்கொண்ட குழுவினர், வெளிப்பாளையத்தில் தூர்வாரப்பட்ட கிணறு, அடி பைப்புகளை பார்வையிட்டனர். பொதுமக்கள், குடிநீருக்காக படும் அவதிகளை, ஆவேசத்துடன் கூறினர். அவர்களை, கலெக்டர் சமாதானப்படுத்தினார்.அடுத்து, பனங்குடியில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடைகளுக்குத் தேவையான பசும்புல் வளர்ப்பு திட்டம்; கீழையூரில் பண்ணைக் குட்டைகள் அமைக்கும் பணி; மணக்குடி ஊராட்சியில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் வாய்க்கால் தூர்வாரும் பணி ஆகியவற்றை பார்த்து, பதிவேடுகளை ஆய்வு செய்தனர். பின், நீர்முளை கிராமத்தில் வேளாண் கூட்டுறவு சங்கத்தில் ,விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட வறட்சி நிவாரணம், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். ரேஷன் கடையிலும் ஆய்வு செய்து, பகல்,12:30 மணிக்கு ஆய்வை முடித்துக் கொண்டனர்.காவிரியில் தண்ணீர் வராததால், கடும் வறட்சியால் வெடித்துப் போன விவசாய நிலங்களை ஆய்வுக்குழு பார்வையிட வில்லை; ஒரு சொட்டு தண்ணீருக்குக் கூட வழியில்லாமல் கலங்கி நிற்கும் கடைமடை விவசாயிகளிடம் குழு, விசாரிக்கவும் இல்லை.
மணக்குடியில், மத்திய குழுவினரிடம் விவசாயிகள் வைத்த கோரிக்கைகள்:
*காவிரி நீர் மேலாண்மை ஆணையமும், காவிரி நதி நீர் பங்கீட்டு குழுவையும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, உடனடியாக அமைத்து, தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
*ஏக்கர் ஒன்றுக்கு, பயிர் இழப்பீட்டு நிவாரணமாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மாநில அரசு 15 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்து, நிவாரணத் தொகையுடன் காப்பீட்டுத் தொகை, 8400 ரூபாயை இணைத்துக் கொண்டது ஏற்புடையது இல்லை. 8400 ரூபாயை மத்திய அரசு தேசிய பேரிடர் நிவார நிதியில் இருந்து வழங்க வேண்டும். மாநில அரசு, அதை காப்பீட்டுடன் இணைக்காமல் வழங்க வேண்டும்.
*குடிநீருக்கான உதவித் தொகை, கால்நடைக்கான தீவனம்,நோய் சிகிச்சை மருந்துகளை மத்திய அரசு உடனடியாக வழங்கி, வறட்சியை போக்க உதவ வேண்டும்.
*வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, கோரிக்கைகள் வைத்தனர்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MOHAMED GANI - MADURAI,இந்தியா
13-மே-201313:42:27 IST Report Abuse
MOHAMED GANI ஏற்கனவே மாநில அரசு சார்பில் சென்ற அமைச்சர்கள் குழுவும் கண்துடைப்பாக ஆங்காங்கே பார்வையிட்டு வந்ததோடு, என்ன பரிந்துரைகளை அளித்தது என்பதே தெரியாமல், தமிழக முதல்வர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கென இழப்பீட்டுத் தொகையை அறிவித்தார். ஆனால் அறிவிக்கப்பட்டபடி இழப்பீட்டுத் தொகையும் சரியான முறையில் வழங்கப்படவில்லை என்ற குமுறல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் உள்ள நிலையில் மத்திய அரசின் குழுவும் கண்துடைப்பாக வந்து சென்றால், வறட்சி பாதிப்பினால் துவண்டு கிடக்கும் விவசாயிகளை யார் காப்பாற்றுவது???
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
09-மே-201309:36:31 IST Report Abuse
Swaminathan Nath விவசாயம் முக்கியமானது, ஆனால் பல வருடமாக அந்த நிலத்தில் நாம் விவசாயம் செய்து பலன் அடைந்தோம்,ஒரு வருடம் வறட்சி வந்தால் அதை எதிர்கொள்ள கொஞ்சம் முன் எச்சரிக்கை வேண்டும், சேமிப்பு கொஞ்சம் வைத்திருக்க வேண்டும், எல்லாவற்றியும் அரசாங்கம் இலவசமாக கொடுக்கும் எனபது நல்லது இல்லை.
Rate this:
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
09-மே-201308:26:19 IST Report Abuse
kumaresan.m " மத்திய குழு அதிகாரிகள் கட்சி பாகுபாடுகள் கடந்து பணியாற்ற வேண்டுகிறோம் ....இது அரசியல் அல்ல ...விவசாயிகளின் வாழ்க்கை என்று கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம் "
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
09-மே-201302:29:14 IST Report Abuse
NavaMayam ஏற்கனவே மத்திய அரசு , வறட்சி இல்லாமலே , விவசாயிகளின் கடனான 70000 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தது.... அதுவும் இருந்திருந்தால் விவசாயிகள் இன்னும் அதிகம் கஷ்ட பட்டிருப்பார்கள் ... எனவே கண்டிப்பாக மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும்...
Rate this:
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
09-மே-201302:16:52 IST Report Abuse
NavaMayam இந்த மத்திய குழுவினருடன் கலெக்டரும் , அதிகாரிகள் மட்டுமே சென்றுள்ளனர் ... என் அந்த தொகு‌தி எம் எல் எ , எம்பிக்கள் செல்ல வில்லை .... இவர்களை கூட்டிக்கொண்டு மாநிலத்தின் உண்மையான நிலவரத்தை காண்பித்து , இவர்கள் மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பித்தால் தானே நிதி உதவி கிடைக்கும்....அப்படி மத்திய குழு கொடுத்து மத்திய அரசுக்கு பெயர் வந்து விட கூடாது என்ற எண்ணம்தான் உள்ளது... உண்மையில் விவசாயிகள் பயன் அடைய வேண்டும் என்று விரும்ப வில்லையா...ஒரு கல்வி அதிகாரி ஒரு பள்ளிக்கு ஆய்வு செய்ய வந்தால் , அவர்க்கு பள்ளி நிர்வாகள் சகல மரியாதைகளையும் செய்து , பள்ளியை சுற்றி காண்பித்து இன்ன இன்ன வசதிகள் செய்திருக்கிறோம் என்று கூறி அவர்களுக்கு உணவு முதலியன கொடுத்து மரியாதை செய்வார்கள் , ஏனெனில் அவர் தவறாக எழுதிவிட்டால் அரசு பணம் நின்று விடும்... இதில் கூட கௌரவம் பார்பதா ....மாநில ஆளுங்கட்சி செய்யவில்லை சரி , அந்த அந்த தொகுதி காங்கிரஸ் தலைவர்களாவது இவர்களுடன் சென்று , மாதிய உதவி கிடைக்க செய்து , அதன் மூலமாவது கட்சியை வளர்க்கலாமே ... .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.