E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கர்நாடக சட்டசபை தேர்தல் : 7ஆண்டுக்கு பின் காங்.ஆட்சி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மே
2013
01:49
பதிவு செய்த நாள்
மே 08,2013 23:28

பெங்களூரு: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவு, ஆளும் பாரதிய ஜனதாவுக்கு, நேற்று பேரிடியாக அமைந்தது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்த காங்கிரஸ் கட்சியில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் சிக்கல் துவங்கியுள்ளது. முதல்வராகப் பொறுப்பேற்பது, சித்தராமைய்யாவா அல்லது மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவா என்பது, இன்று தெரியும்.
மாறி மாறி முன்னிலைவட மாநிலங்களில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்த பா. ஜ.,வுக்கு, ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணு என, தென் மாநிலங்களில் ஒன்றான, கர்நாடகாவில் ஆட்சி செய்ய, 2006ம் ஆண்டு வாய்ப்பு கிடைத்தது.

முதல்வராக இருந்த எடியூரப்பா மீது, ஊழல் புகார்கள் கூறப்பட்டதால், அவர் கட்சியிலிருந்து கழற்றி விடப்பட்டார். ஜெகதீஷ் ஷெட்டர், முதல்வராக இருந்தார்.கடந்த, 5ம் தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள், நேற்று எண்ணப்பட்டன. இதற்காக, மாநிலம் முழுவதும், ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஓட்டுகள் எண்ணத் துவங்கிய சில நிமிடங்களில், பா.ஜ.,வும், அடுத்த சில நிமிடங்களில், தேவகவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளமும், மாறி மாறி முன்னிலையில் வந்தன.
அறுதிப் பெரும்பான்மை
காலை, 9:00 மணியளவில் முன்னிலை பெறத் துவங்கிய காங்கிரஸ், ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை, முன்னிலை பெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான, 113 இடங்களுக்கும் மேலாகப் பெற்றது.
மொத்தமுள்ள, 224 தொகுதிகளில், ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்து விட்டதால், தேர்தல் நடைபெறவில்லை. ஓட்டுகள் பதிவான தொகுதிகளுக்கு நடைபெற்ற ஓட்டு எண்ணிக்கையில், அறுதிப் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை பெற்ற காங்கிரஸ், ஆட்சியைக் கைப்பற்றியது.
இந்த தேர்தல் முடிவு, சில பெரிய தலைவர்களுக்கு, தோல்வியை அளித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநிலத் தலைவர், குமாரசாமியின் மனைவி அனிதா, மாநில காங்கிரஸ் தலைவர், பரமேஸ்வரா, மாநில, பா.ஜ., தலைவர், ஈஸ்வரப்பா, காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் இப்ராகிம், தொழில்துறை அமைச்சராக இருந்த, நிரானி போன்றோர், தோல்வி அடைந்துள்ளனர்.
முன்னாள் துணை முதல்வர் சித்தராமைய்யா, பா.ஜ.,விலிருந்து பிரிந்து, தனிக்கட்சி துவக்கி, ஓட்டுகளைப் பிரித்து, பா.ஜ.,வுக்கு சிக்கலை ஏற்படுத்திய எடியூரப்பா, முடிவுகளைப் பார்த்த உடன், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த, ஜெகதீஷ் ஷெட்டர், முதல்வர் கனவில் மிதந்த, முன்னாள் முதல்வர் குமாரசாமி என, பலரும் வெற்றி பெற்றுள்ளனர்.
பா.ஜ.,வின் ஆதிக்கம் மிகுந்த, தக்ஷிண கன்னடா, உடுப்பி, பெல்லாரி போன்ற பகுதிகளிலும், அந்தக் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், முந்தைய தேர்தலை விட, இந்த தேர்தலில், காங்கிரஸ் வளர்ச்சி அமோகமாக இருந்ததை, முடிவுகளில் காண முடிந்தது.
சித்தராமைய்யாவுக்கு சிக்கல்
முடிவுகள் வெளியானதும் எழுந்த கேள்வி, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தான். ஏனெனில், தேர்தலின் போது, முதல்வர் வேட்பாளர் யார் என, காங்கிரஸ் அறிவிக்கவில்லை. முன்னாள் துணை முதல்வர் சித்தராமைய்யா, தனக்குத் தான் அந்தப் பதவி என கூறி வந்தார்.இந்நிலையில், நேற்று திடீரென, மத்திய அமைச்சர், மல்லிகார்ஜுன கார்கே, "நானும் போட்டியில் உள்ளேன்' என அறிவித்து, சித்தராமைய்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார்.
வெற்றி பெற்றால், முதல்வர் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தோல்வி அடைந்துள்ளதால், இப்போதைக்கு போட்டி, சித்தராமைய்யாவுக்கும், கார்கேவுக்கும் தான்.
கார்கே தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்; சித்தராமையா, சிறுபான்மை குறும்பர் இனத்தை சேர்ந்தவர். மாநிலத்தின் பெரும்பான்மை சமுதாயங்களான, ஒக்காலிகா, லிங்காயத்தை சேர்ந்த யாரும், முதல்வர் வேட்பாளர் பட்டியலில், நேற்று இரவு வரை இல்லை.கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் புது முதல்வர் யார் என்பது, இன்று தெரிய வரும். அது போல், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெறப் போவது, பா.ஜ.,வா அல்லது மதச்சார்பற்ற ஜனதா தளமா என்பதும் தெளிவாகிவிடும்.


ஜெகதீஷ் ஷெட்டர் ராஜினாமா
சட்டசபை தேர்தல் தோல்வியை அடுத்து, கவர்னர் பரத்வாஜை சந்தித்த, முதல்வர், ஜெகதீஷ் ஷெட்டர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.நேற்று மதியம், கவர்னர் பரத்வாஜை சந்தித்த, முதல்வர், ஜெதீஷ் ஷெட்டர் ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அப்போது, கவர்னர் பரத்வாஜ், புதிய அரசு அமையும் வரை, தற்காலிக முதல்வராக தொடரும்படி கேட்டுக் கொண்டார்.

சமாஜ்வாதி வெற்றி
உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி, கர்நாடக மாநிலத்தில், முதல் முறையாக வெற்றி பெற்று, கணக்கை துவக்கியுள்ளது.
சென்னபட்னா தொகுதியில் போட்டியிட்ட, சமாஜ்வாதியின், சி.பி.யோகேஸ்வரா, மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான, குமாரசாமியின் மனைவி, அனிதாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
யோகேஸ்வராவுக்கு ஆதரவாக, உ.பி., முதல்வர், அகிலேஷ் யாதவ் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் பதவிக்கு கார்கே போட்டி
""கட்சி மேலிடம் அனுமதித்தால், முதல்வர் பதவிக்கு போட்டியிட தயார்,'' என, கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான, மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:கடந்த, 2009ம் ஆண்டு, லோக்சபா தேர்தலில் போட்டியிடுமாறு, கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டது. அதன் படி போட்டியிட்டு, வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளேன். அது போல், கர்நாடக முதல்வராக வேண்டும் என, கட்சி கேட்டுக் கொண்டால், அந்த உத்தரவை பணிந்து செயல்பட தயாராக உள்ளேன்.
எனினும், நான் தலித் சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால், மாநில முதல்வர் பதவியை வகிக்க விரும்பவில்லை. அந்தப் பதவிக்கு நான் தகுதியானவன் என கட்சி மேலிடம் தெரிவித்தால், ஏற்கத் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., கடும் அதிர்ச்சி
கர்நாடகாவில், பாரதிய ஜனதா, ஆட்சியைஇழந்துள்ளதால், அதன் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கட்சியின் செய்தித் தொடர்பாளர், ராஜிவ்பிரதாப் ரூடி கூறும் போது,""எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. தோல்வி எங்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தோல்விக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லாமும் சேர்ந்து, எங்களை பாதித்து விட்டது,'' என்றார்.


நடிகை பூஜா காந்தி படுதோல்வி

டூ ராமநகரம் தொகுதியில் போட்டியிட்ட, மதச்சார்பற்ற ஜனதா தளம், கர்நாடக மாநில தலைவர், எச்.டி.குமாரசாமி, வெற்றி பெற்றார். அவரை அடுத்து வந்த, காங்கிரஸ் வேட்பாளர், மாரித்தேவரை விட, 25 ஆயிரம் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.மாநில காங்கிரஸ் தலைவர், ஜி.பரமேஸ்வரா தோல்வி அடைந்தார். கரடகெரே தொகுதியில் போட்டியிட்ட அவர், 18 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்றிருந்தால், முதல்வர் வேட்பாளர்கள் பட்டியலில் அவரும் இடம்பெற்றிருப்பார்.டியூரப்பா கட்சி சார்பில், ராய்ச்சூர் தொகுதியில் போட்டியிட்ட, கன்னட நடிகை பூஜா காந்தி, வெறும், 1,815 ஓட்டுகள் பெற்று, படுதோல்வி அடைந்தார்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட, முன்னாள், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர், சி.எம்.இப்ராகிம், பத்ராவதி தொகுதியில் தோல்வி அடைந்தார்.ஜெகதீஷ் ஷெட்டர் அரசில், அமைச்சர்களாக இருந்தவர்களில், 12 பேர் படுதோல்வி அடைந்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
10-மே-201316:12:19 IST Report Abuse
ganapati sb பரமஹம்சருக்கு எதிரான பொய்வழக்குகள் 100ல் 99 தள்ளுபடி ஆனது. இன்னும் ஒரே ஒரு பொய் கற்பழிப்பு வழக்கு வேண்டுமென்றே கர்நாடக போலிசால் இழுத்தடிக்கப்படுகிறது. இதற்கு துணை போன பாஜக அரசு வீழ்ந்தது. இந்த பழியை சரி செய்யும் வகையில் பாஜகவின் lotus டிவி யில் பரமஹம்சரின் சத்சங்கம் தினமும் வருவதால் பாராளுமன்ற தேர்தலில் அது வெற்றி பெரும்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
Venkatesan Jayaraman - Dubai,இந்தியா
09-மே-201315:32:41 IST Report Abuse
Venkatesan Jayaraman அனைய போகும் விளக்கு பிரகாசமாக தான் எரியும்
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
09-மே-201309:26:14 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் பெரும் வாய் சவடால் விட்டு களம் கண்ட எடியூரப்பா கட்சி வேட்பாளர்கள் பல தொகுதிகளில் 1000 க்கும் குறைவான வாக்குகளை பெற்று தேபோசிட் இழந்துள்ளார்கள் ..
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
09-மே-201309:01:42 IST Report Abuse
s.maria alphonse pandian 10% வாக்குகளை பெற்ற எடியுரப்பாவுக்கு 6 இடங்கள்...20% பெற்ற மதசார்பற்ற ஜனதா தளம் மற்று பிஜேபிக்கு தலா 40 இடங்கள்...காங்கிரஸ் 37% வாக்குகள் பெற்றுள்ளது....எடியுரப்பா+ பிஜேபி வாக்குகள் 30% மட்டுமே...மற்ற வாக்குகள் காங்கிரஸ் பக்கம் சாய காரணம் என்ன? பிஜேபி சிந்திக்க வேண்டும்...10 கோடி ரூபாய் பணத்துடன் பிடிபட்ட ..அதனால் ஆணையத்தால் கைது செய்யப்பட அண்ணாதிமுக வேட்பாளர் முனுசாமியின் கதி என்ன?
Rate this:
2 members
1 members
2 members
Share this comment
S.Govindarajan. - chennai ,இந்தியா
10-மே-201310:37:13 IST Report Abuse
S.Govindarajan.திருச்சியில் பேரூந்தில் ஐந்து கோடி ரூபாய் பிடிபட்டதே. அந்த தி.மு.க வேட்பாளரின் கதி என்ன?...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
09-மே-201302:07:12 IST Report Abuse
NavaMayam கர்நாடக நம்மை விட பின்தங்கிய நிலையில் இருந்தது...அதை தொழில் துறையில் , குறிப்பாக சாப்ட்வேர் துறையில் முன்னேற்றியது முந்தைய காங்கிரஸ் அருசுதான் ... நாம் கோட்டை விட்டதை அப்போதைய காங்கிரஸ் முதல் அமைச்சர் கிருஷ்ணா கெட்டியாக பிடித்து கொண்டு , இன்போசிஸ் , விப்ரோ முதலிய கம்பெனிகளை ஊக்குவித்து , கர்நாடக தொழில் புரட்சிக்கு வித்திட்டவர் ... அதை மக்கள் மறக்க வில்லை , தமிழ்நாடு காமராஜர் காலத்தில் வளர்த்ததை மறந்தது போல ....பிஜேபியின் ஊழலை விட , இளைஞர்களின் மீது , குறிப்பாக இளம் பெண் கல் மீது தாக்குதல் நடத்தி அது பல ஊடகங்களில் வெளி வந்தும் அவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்காதது , அவர்களின் தோல்விக்கு ஒரு காரணமாக இருக்காலாம் .. ஊழலையாவது மக்கள் பொறுத்து கொள்வார்கள் , வன்முறையை தூண்டும் எந்த அமைப்பையும் மக்கள் ஏற்றுகொள்ள மாட்டார்கள் என்பதுதான் உண்மை.....
Rate this:
51 members
1 members
82 members
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
09-மே-201301:49:04 IST Report Abuse
மதுரை விருமாண்டி பாஜாகவும் தண்ணீர் தரவில்லை.. காங்கிரசும் தண்ணீர் தராது... கர்நாடகாவை ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் நமக்கு சொட்டு தண்ணி இல்லை.. இது தற்போதைய தமிழக அரசின் சாதுரியமா, இல்லை சாதனையா ??
Rate this:
3 members
2 members
105 members
Share this comment
Cancel
PRAKASH - CHENNAI,இந்தியா
09-மே-201301:15:01 IST Report Abuse
PRAKASH பி ஜே பி ஊழல் .. காங்கிரஸ் ஊழல் ... நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் யாருக்கு வாக்களிக்க போகிறார்கள் .. ஒன்னு ....... மாறி.... அடுத்தது ........
Rate this:
0 members
25 members
31 members
Share this comment
Cancel
Karthi - Kerala,இந்தியா
09-மே-201300:48:59 IST Report Abuse
Karthi "வேலில போன ஒனான வேட்டிக்குள்ள விட்ட கர்நாடகாவுக்கு வாழ்த்துக்கள்"
Rate this:
135 members
0 members
49 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
09-மே-201300:45:25 IST Report Abuse
Vettri கர்நாடக சட்ட சபை தேர்தல் இரண்டு உண்மைகளை உணர்த்துகின்றன. 1. பா.ஜ.க. நிர்வாக திறமையின்மை மற்றும் அதன் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் இவைகளால் ஆட்சியை இழந்துள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகத்தில் வெற்றியை தந்தாலும் மத்திய அரசின் மீதுள்ள அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் மூலமாக 2014 நாடாளுமன்ற தேர்தலில் கண்டிப்பாக வீழ்ச்சியை காணும். 2. மாநில முதல்வராக இருந்து விட்டு ஊழல் குற்ற சாட்டுகளால் வெளியேறி தான் சார்ந்த கட்சிக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் நிலைமை என்ன ஆனது என்பதற்கு எடுத்துக்காட்டு மறைந்த முன்னாள் கர்நாடக காங்கிரஸ் முதல்வர் "பங்கரப்பா". உ.பி.யில் பா.ஜ.க.வின் கல்யான் சிங். அதே வரிசையில் தற்போது சேர்ந்திருப்பவர் "எடியுரப்பா". இவரும் அரசியலில் திக்கற்று போவார் என்பதில் ஐயமில்லை.
Rate this:
13 members
21 members
45 members
Share this comment
Cancel
Ambaiyaar@raja - Nellai to chennai ,இந்தியா
09-மே-201300:36:25 IST Report Abuse
Ambaiyaar@raja பிஜேபி அங்கு உழல மட்டும் அல்ல ஒற்றுமையும் இல்லாததால் தான் இந்த படு தோல்வியை சந்தித்து உள்ளது. அந்த அல்ல கை காங் கட்சியை சேர்ந்தவர்கள் எல்லோரும் பல அணியாதான் இருப்பார்கள் சண்டை போடுவார்கள் சட்டை, வெட்டி, எல்லாம் கிழியும் ஆனால் அந்த நேரு குடும்பம் ஒரு வார்த்தை சொன்னால் போதும் எல்லோரும் விழுந்து கும்பிடுவார்கள். சோனியாவின் பேரன் சொன்னால் கூட போதும் அதை எல்லா காங் கட்சி காரரும் கேட்பார்கள். இது கேவலமான விசயம் தான் என்றாலும் அது ஒரு ஒழுங்காக ஆகிவிடுகின்றது. அதே போல் ஒழுங்கு பிஜேபி ல சுத்தமா இல்ல அதை வாஜ்பாய் அவர்கள் இருக்கும் பொது ஓரளவு இருந்தது இப்போது அது சுத்தமா இல்ல. இன்னும் பிரதமர் வேட்பாளரை சொல்வதில் அவளவு சிக்கல் இருப்பது எல்லாம் அந்த காங் கட்சிக்கு தான் யோகம். அதனால் பிஜேபி காரர்கள் எல்லோரும் ஒன்று பட்டு மோடியை பிரதமரா அறிவித்து உடனே செயல் பட்டால் வெற்றி நிச்சயம். ஆளுபவர்களுக்கு எதிரா தான் மக்கள் வாக்கு போட்டு இருகின்றார்கள் அதே நிலை தான் பாராளுமன்ற தேர்தலிலும் தொடரும் அது உண்மை அதை செய்து இந்த காங் கட்சியை ஒழித்து கட்டவேண்டும்.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.