Advertisement
கோவை அரசு கலை கல்லூரியில் கண்காணிப்பு கேமரா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

09 மே
2013
03:38
பதிவு செய்த நாள்
மே 08,2013 23:31

கோவை: தமிழகத்தில் செயல்படும் அரசு கல்லூரிகளில் முதன் முறையாக, கோவை அரசு கலை கல்லூரியில் பாதுகாப்பு காரணங்களுக்காக 1.20 லட்சம் ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.கோவை அரசு கலை கல்லூரியில், சுமார் 4000 மாணவ, மாணவிகள் இரு சுழற்சி முறைகளிலும் சேர்ந்து படிக்கின்றனர். இக்கல்லூரிக்கு யார் வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம் என்ற பாதுகாப்பற்ற சூழலே இருந்து வந்தது. இந்த நிலையை மாற்றி, மாணவர்களுக்கும், கல்லூரி உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க கல்லூரி நிர்வாகம் முன்வந்துள்ளது. இதற்காக, கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வசதி படைத்த பெரிய தனியார் கல்வி நிறுவனங்களில் மட்டுமே, பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், முதன்முறையாக, கோவை அரசு கலை கல்லூரியில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, கல்லூரி செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. முதல்கட்டமாக தேர்வு கட்டுப்பாட்டு துறையில் நான்கு @கமராக்களும், நூலகத்தில் ஏழு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இப்பணிகளுக்காக, கல்லூரி நிர்வாகம் 1.20 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது. கல்லூரி முதல்வர் ஜோதிமணி கூறியதாவது: தேர்வுக்கட்டுப்பாட்டு துறையில்தான் கேள்வித்தாள்கள், மாணவர்களின் விடைத்தாள்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் பாதுகாக்கப்படுகிறது. ஆகவே அத்துறைக்கு வருபவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் கட்டாயம் கண்காணிக்க வேண்டியது முக்கியம். கல்லூரி நூலகத்தில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இப்புத்தகங்களை மாணவர்கள் சரியான முறையில் கையாள்வது கிடையாது. புத்தகங்களை எடுப்பதும், கையாள்வதும் இதன் மூலம் கண்காணிக்கப்பட்டு அரிய புத்தகங்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்துள்ளோம். அலுவலக பணியாளர்களின் பணி செயல்பாடுகளும் கண்காணிக்கப்படும். தொடர்ந்து, கல்லூரி நுழைவு பகுதியிலும், மாணவர்கள் கூடும் பகுதிகளிலும் கண்காணிப்பு @கமராக்கள் பொருத்தலாமா என்று ஆலோசித்து வருகிறோம். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும், செயல்பாடுகள் அனைத்தும் கல்லூரி அலுவல கத்தில் உள்ள கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்படும்இவ்வாறு, அவர் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
09-மே-201316:04:00 IST Report Abuse
pattikkaattaan அப்படியே கோவை அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும்(GCT ) காமிரா பொருத்துங்கள் .... நிறைய பேராசிரியர்கள் வகுப்பிற்கே வருவதில்லை ... அரசு கல்லூரி என்பதால் யாரும் கேட்க முடியாது ... மாணவர் ஏதாவது கேட்டால் மார்க் போடாமல் பெயில் ஆக்கிவிடுவேன்(சுயாட்சி கல்லூரி ) என்று மிரட்டுவார்கள் ...
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Sathyamoorthy - Bangalore,இந்தியா
09-மே-201315:00:17 IST Report Abuse
Sathyamoorthy கோவை அரசு கலை கல்லூரி ஒரு காலத்தில் கொலை கல்லூரி. மாணவர்களின் ராக்கிங் அட்டகாசங்கள் மிக அதிகம். இப்போது எப்படி என தெரியவில்லை..
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Ashok ,India - India,இந்தியா
09-மே-201312:59:29 IST Report Abuse
Ashok ,India அப்படியே ஆண்டுக்கு லக்ஷ கணக்கில் சம்பளம் வாங்கும் அரசு ஆசிரியர்கள் என்ன பாடம்,எப்படி,எந்த விதத்தில் படம் நடத்துகிறர்கள் என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும்.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
09-மே-201309:40:57 IST Report Abuse
Lion Drsekar கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள மாநகர போக்குவரத்து நிழற்க்குடைகில் பொருத்துங்கள் பொது மக்கள் கூடும் இடங்களான கடற்க்கரை, மற்றும் சுற்றுலா தளங்களில் பொருத்துங்கள் வந்தே மாதரம்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
09-மே-201306:07:08 IST Report Abuse
சொல்லுங்கண்ணே சொல்லுங்க இந்த காமிரா வாங்கியதில் எத்தனை ஊழல்கள் நடந்திருக்கின்றன என்று கண்காணிப்பு காமிராவில் பதிவாகுமா?
Rate this:
4 members
2 members
3 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.