சில்லறை தட்டுப்பாடு: தவிக்கும் தமிழகம் | சில்லறை தட்டுப்பாட்டால் தவிக்கும் தமிழகம் : மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா... | Dinamalar
Advertisement
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (12)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

தமிழகத்தில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.மத்திய நிதித் துறையின் கீழ் இயங்கும், "செக்யூரிடி பிரின்டிங் அண்டு மின்டிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா' மூலம், சில்லறை தட்டுப்பாட்டை போக்க, 1,2,5, 10 மற்றும் ஐம்பது பைசா நாணயங்கள் வடிவமைக்கப்பட்டு, அச்சடிக்கப்படுகின்றன. ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள் மூலம், நாணயங்களை புழக்கத்தில் விடும் பணியை, மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில், மும்பை, அலிப்பூர் (கோல்கட்டா), நொய்டா (டில்லி), ஐதராபாத் ஆகிய நான்கு இடங்களில், நாணயங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் உள்ளன. இதில், மும்பை, அலிப்பூர் ஆலைகள், 1948ல் கட்டப்பட்டவை.
கடந்த, 2012-13ம் நிதியாண்டில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 70 கோடி நாணயங்கள் தேவைப்பட்டன. ஆனால், ரிசர்வ் வங்கி, 48 கோடி நாணயங்களையே, வணிக வங்கிகள் மூலம் புழக்கத்திற்கு விட்டது. தற்போது, தமிழகத்தில், சில்லறை தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால்,

ஓட்டல் மற்றும் வணிக நிறுவனங்கள், கண்டக்டர்கள் ஆகியோரிடம், பொது மக்கள், ரூபாய் நோட்டை கொடுத்து, சில்லறை பெறும் போது, வாக்குவாதத்தில் ஈடுபடுவது, தொடர்கதையாக உள்ளது.தமிழகத்தில், கோவை, சேலம், மதுரை போன்ற நகரங்களில், சில்லறை தட்டுப்பாட்டை குறைக்க, ,மாதம் ஒன்றுக்கு, 50 லட்சம் ரூபாய்க்கான, சில்லறை நாணயங்கள் வழங்கப்படுகின்றன.சென்னையில், தி.நகர், புரசைகோயம்பேடு, எழும்பூர், பிராட்வே, வண்ணாரப்பேட்டை உட்பட, 18 வர்த்தக பகுதிகளில், சில்லறை தட்டுப்பாட்டை போக்க, ரிசர்வ் வங்கி, அங்குள்ள வணிக வங்கிகள் மூலம், மாதம்தோறும், 1 கோடி ரூபாய் மதிப்பிற்கு, நாணயங்களை விநியோகித்து வருகிறது. இருப்பினும், சில்லறை தட்டுப்பாடு குறைந்தபாடில்லை.இதுகுறித்து, சென்னை ஓட்டல் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசா ராஜா கூறுகையில், ""அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு, சில்லறை தட்டுப்பாடு, கடும் சவாலாக உள்ளது. முன்பு, 100 ரூபாய் மதிப்புள்ள நாணயங்களுக்கு,

Advertisement

5 ரூபாயை கமிஷனாக வழங்கி வந்தோம். தற்போது, 15 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது,'' என்றார். பாரத ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர் கூறும்போது, "நாணயங்களை கூடுதலாக அச்சடிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதில், இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு' என்றார்.

இறக்குமதியா அல்லது புதிய தொழிற்சாலையா?
கடந்த, 1990 ஆண்டில், 10, 25 பைசா நாணயங்களுக்கு, கடும் தட்டுப்பாடு எழுந்தது. மத்திய அரசு, இந்த நாணயங்களை கொரியாவில் இருந்து, அச்சடித்து இறக்குமதி செய்து, ரிசர்வ் வங்கி, வணிக வங்கிகள் மூலம் விநியோகம் செய்தது. தற்போது, நாணயங்கள் தட்டுப்பாட்டை போக்க, வெளிநாட்டில் இருந்து,
இறக்குமதி செய்யலாமா அல்லது, புதிய நாணய உற்பத்தி தொழிற்சாலையை அமைக்கலாமா என்பதை, மத்திய அரசு விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. - நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
12-மே-201309:14:22 IST Report Abuse
g.s,rajan எங்கும் சில்லறை இல்லை ,ஏன் ?புரியவில்லை ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
V.Sundar - Merkanam,இந்தியா
10-மே-201315:04:02 IST Report Abuse
V.Sundar இக்கால கட்டத்தில் வரும் முன் காப்போம் என்ற திட்டம் அனைத்திற்கும் பொருந்தும். அதை பின்பற்றாவிட்டால் இப்படி தான் எல்லா வற்றிலும் நடக்கும்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
09-மே-201317:21:07 IST Report Abuse
kumaresan.m "இந்தியாவில் மண்ணெண்ணையில் ஆரம்பித்து மின்சாரம் வரை தட்டுப்பாடுதான் .....ஆனால் ஊழல்களுக்கு மட்டும் கட்டுப்பாடும் கிடையாது மற்றும் தட்டுப்பாடு கிடையாது "
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
09-மே-201317:18:45 IST Report Abuse
kumaresan.m " இதற்க்கு கூட வா வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் .....இந்தியாவில் அதுவும் தமிழ் நாட்டில் அமைத்தால் எவ்வவளோ பேரு வெளிவாய்ப்பு பெறுவார்களே ?
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
09-மே-201311:29:15 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar சில்லறை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு ரூபாய்..,இரண்டு ரூபாய் நாணயம்..,ஐந்து ரூபாய் நாணயம்..,அல்லது காகித பணமாக புதியதாக வெளியிட வேண்டும். மேலும் பத்து ரூபாய்..,இருபது ரூபாய்.,ஐம்பது ரூபாய் காகித பணம் பொதுமக்கள் சிக்கல் இன்றி செலவு செய்ய உதவும். இவைகளை பிளாஸ்டிக் காகித பணமாக அச்சிட்டு பொதுமக்கள் நீண்ட கால பயன் ஏற்படுத்த கூடியது. சில்லறை தட்டு பாடு மறைமுக விலை ஏற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு உணரவேண்டும். புதியதாக அச்சிட்டு பொதுமக்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும் - பூபதியார்
Rate this:
0 members
0 members
18 members
Share this comment
Cancel
Balasubramanian - Trichy,இந்தியா
09-மே-201311:23:36 IST Report Abuse
Balasubramanian லிசா என்ற மின்சாதன பொருள் (ஸ்விட்ச் ) தயாரிக்கும் நிறுவனம் தன்னுடைய ஒவ்வொரு பாக்கெட்டிலும் ஒரு நாணயத்தினை வைத்துள்ளது இதன் முலம் லட்சக்கணக்கான நாணயங்கள் முடக்கப்பட்டுள்ளன. இது போல பல நிறுவனங்கள் செயல்படுகின்றன, இதனை தடுத்தாலே சில்லரை தட்டுப்பாடு ஓரளவு கட்டுப்படும்
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
Gopi Nathan - Coimbatore,இந்தியா
09-மே-201310:25:54 IST Report Abuse
Gopi Nathan தமிழகத்தில் மட்டும் இந்த பிரச்சினை பூதகரமாக உள்ளது 90%. மற்ற மாநிலங்கலீல் பரவில்லை20-30%. யங்க போகுது இந்த சிலரை. கடைக்காரன் 10% கமிஷனிக்கு வங்க்வதை தடுக்வும். ..................................
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
pkannan - coimbatore,இந்தியா
09-மே-201309:53:56 IST Report Abuse
pkannan நாம கொடுக்குற சில்லறை எல்லாம் கார்பரேசண் கமிசனுக்கு கொடுத்துக்கிட்டு இருக்கு அப்பறம் எங்கிருந்து நமக்கு சில்லறை கிடைக்கும்
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
T.Sundararaman - chennai,இந்தியா
09-மே-201309:25:16 IST Report Abuse
T.Sundararaman சிலர் கடைக்கு போய்விட்டு வரும் போது,மீதி சில்லறையை மேஜை ட்ராயரிலேயே போட்டு விட்டு , அடுத்ததடவை கடைக்குபோகும்போது,ரூபாய் நோட்டை மட்டும் எடுத்துக்கொண்டு போகின்றனர்.இன்னும் சிலர், சில்லறையை சேமிப்பதை , ஒரு பொழுது போக்காக கொண்டுள்ளனர்.இன்னும் சிலர் கோயில் உண்டியில் சில்லறையை போடுவதால், அவை சேர்ந்து போய்விடுகின்றன.ஒரு சில பேர், ஆறு, குளம், கோயில் கிணறு ஆகியவற்றில் சில்லறையை புண்ணியத்திர்க்காக போடுவதால், அவை யாருக்கும் பயன் படாமல் போய்விடுகின்றன.திருப்பதி கோயில் மதில் சுவற்றின் இடுக்குகளில் , எவ்வளவோ சில்லறைகள் சொருகப்பட்டுள்ளதை, நான் கண் கூடாக பார்த்திருக்கிறேன். இப்பேர்பட்ட பல காரணங்களால், புழக்கத்தில் வரவேண்டிய நாணயங்கள், தங்கி போய்விடுகின்றன.
Rate this:
1 members
0 members
20 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
09-மே-201308:43:01 IST Report Abuse
Srinivasan Kannaiya பல்லி மிட்டாய் கூட பத்து ரூபாவாக இருக்கும்பொழுது சில்லறை எதுக்கு சாமி.........? இலவசம் கேட்பவர்கள் கூட சில்லறையை நம்மூஞ்சியில் எறிந்துவிடுகிறார்கள் .. நோட்டுகளாக கேட்கிறார்கள்..
Rate this:
2 members
1 members
10 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.