pakistan prisoner sananullah dead | பாக்.,கைதி சனாவுல்லா மருத்துவமனையில் உயிரிழப்பு| Dinamalar

பாக்.,கைதி சனாவுல்லா மருத்துவமனையில் உயிரிழப்பு

Updated : மே 09, 2013 | Added : மே 09, 2013 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பாக்.,கைதி சனாவுல்லா மருத்துவமனையில் உயிரிழப்பு

புதுடில்லி: ஜம்மு சிறையில் சக கைதி ஒருவரால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் கைதி சனாவுல்லா சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். பாக்.,கைதி சனாவுல்லா கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் சிறுநீரகம் செயலிழந்து விட்டதால் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

பாகிஸ்தானின் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், அங்கிருந்த கைதிகளால் தாக்கப்பட்டதில், கடந்த சில நாட்களுக்கு முன் இறந்தார். அதன் எதிரொலியாக, ஜம்மு சிறையில் அடைக்கப்பட்டிருந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த, கைதிகளில் ஒருவனான, சனாவுல்லா, 52, என்பவனை, ஜம்மு சிறைக் கைதிகள் தாக்கியதில், அவன், "கோமா' நிலையை அடைந்தான். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதற்காக, 1999ல், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சனாவுல்லாவுக்கு, சண்டிகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது குறிப்பிடதக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nirmal - sabha ,மலேஷியா
09-மே-201316:09:54 IST Report Abuse
nirmal This is Given Take Policy .......................
Rate this:
Share this comment
Cancel
Abdhul Rauf - Doha,கத்தார்
09-மே-201316:01:28 IST Report Abuse
Abdhul Rauf சரப்ஜித் சிங் அடித்துக் கொல்லப்பட்டதைக் குறித்துக் கேள்வி கேட்க வெட்கப்படும் அளவுக்கு இந்தியாவின் நிலை ஆகவேண்டும் என்று காஷ்மீர் அரசு கருதியிருக்கலாம் .... சில நண்பர்கள் இங்கே இந்தியாவைக் குறை கூறி கருத்து எழுதியிருப்பதைப் பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது ......
Rate this:
Share this comment
Cancel
rekha - Singapore,சிங்கப்பூர்
09-மே-201315:53:51 IST Report Abuse
rekha சரப்ஜீத் சிங்கின் உயிர்த் தியாகத்திற்கு மதிப்பில்லாமல் செய்துவிட்டார்கள். பாகிஸ்தானும், இந்தியாவும் ஒரே குட்டைதான் என்று மற்ற உலக நாடுகள் என்னும்படி ஆகிவிட்டது. மிகவும் வருத்தமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Natarajan - Muscat  ( Posted via: Dinamalar Blackberry App )
09-மே-201315:38:53 IST Report Abuse
Natarajan Who ever it is whether Indian or Pakistani it is a matter of life. Both are wrong. Will get the punishment on the date of Judgement.
Rate this:
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
09-மே-201315:22:14 IST Report Abuse
Kumaresan P எதார்த்தமாக நடந்திருந்தாலும் இந்த சம்பவம் பாகிஸ்தான் நாட்டவர் இதை "பழிவாங்கும்" நோக்கு என்றுதான் நினைப்பார்கள்.. உண்மையில் சிறையில் என்ன நடந்தது என்று அங்கு உள்ளவர்களை தவிர யாருக்கும் தெரியாது... இருப்பினும் பாகிச்தாநியர்கலைபோல் கல் நெஞ்சக்காரர்கலாக இல்லாமல் இந்தியர்களாய் வருத்தம் கொள்வோம்...
Rate this:
Share this comment
Cancel
nandha - thiruvegampatthur  ( Posted via: Dinamalar Android App )
09-மே-201314:45:21 IST Report Abuse
nandha சரப்சத் சிங் இந்தி்யகைதி் இவன் பாக்கிதான்கைதி் கொன்றவர்கள் அந்தந்த நாட்டு கைதி்கள் இவர்கள் வெறியை தீர்த்துகொள்ள நடந்த வெறியாட்டம் இரண்டுமே கண்டிக்கபடவேண்டியது பெருமைபடகூடியது இல்லை
Rate this:
Share this comment
Cancel
N.K - bangalore,இந்தியா
09-மே-201314:32:52 IST Report Abuse
N.K என்ன கொடும இது? பதிலுக்கு பதிலா? இது மிகவும் தவறல்லவா? அவருக்கும் ஒரு குடும்பம் இருந்தால்? எதையுமே நம்ப ஆளுங்க யோசிகர்த்தே இல்ல....
Rate this:
Share this comment
Cancel
MOHAMED SHAMEER - tamil nadu,இந்தியா
09-மே-201313:51:08 IST Report Abuse
MOHAMED SHAMEER Both country govt bodies should make the immediate meeting to discuss the issue, so that remaining our bros on both country will be get protected ...
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
09-மே-201315:10:34 IST Report Abuse
Pannadai Pandianpakistanis reaction to absal guru's, ajmal kasab's hanging is in bad taste. india fulfilled court order where as pakistan murdered samal singh and sarabjit singh....
Rate this:
Share this comment
Cancel
MOHAMED SHAMEER - tamil nadu,இந்தியா
09-மே-201313:46:43 IST Report Abuse
MOHAMED SHAMEER இப்ப எங்க போனிங்க நடுநிலை வாதிகளா ?????????????????????
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
09-மே-201317:10:46 IST Report Abuse
சு கனகராஜ் தவறுக்கு பொறுப்பேற்க வேண்டும் தப்பை செய்தவர்களை கண்டிக்க வேண்டும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் ...
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
09-மே-201317:11:12 IST Report Abuse
சு கனகராஜ் உயிர் என்பது எல்லாருக்கும் ஒன்றுதான் விலை மதிப்பற்றது ...
Rate this:
Share this comment
Cancel
aboorvan - Madurai,இந்தியா
09-மே-201313:14:23 IST Report Abuse
aboorvan கத்திக்கு கத்தி தீர்வாகாது
Rate this:
Share this comment
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
09-மே-201317:11:58 IST Report Abuse
சு கனகராஜ் பழைய காலத்தை போல கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பதே தீர்வாகாது ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை