E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : மே 09,2013,23:07 IST
கருத்துகள் (44)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை எட்டு லட்சம் மாணவ, மாணவியர் ஆவலுடன் எதிர்பார்த்த பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று காலை வெளியிடப்பட்டன. 88.1 சதவீத மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்று, சாதனை படைத்தனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 1.4 சதவீதம், தேர்ச்சி அதிகரித்துள்ளது. மாநில அளவிலான இடங்களை பிடிப்பதில், வழக்கம்போல், நாமக்கல் மாவட்டத்தின் ஆதிக்கம், இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து, ஏழு மாணவர்கள், மாநில அளவிலான இடங்களை பிடித்தனர்.

எட்டு லட்சம் மாணவர் : மார்ச், 1ம் தேதி முதல், 27ம் தேதி வரை, பிளஸ் 2 தேர்வுகள் நடந்தன. பள்ளிகள் மூலம், ஏழு லட்சத்து, 99 ஆயிரத்து, 513 மாணவர்கள், இந்த தேர்வை எழுதினர். தனித்தேர்வு மூலம், 50 ஆயிரம் பேர் எழுதினர். 2,020 மையங்களில், தேர்வுகள் நடந்தன.நாடு தழுவிய அளவில், அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், முதலாம் ஆண்டு வகுப்புகள், ஆகஸ்ட், 1ம் தேதி துவங்க வேண்டும் என, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு உத்தரவிட்டதால், அதற்கேற்ப, கலந்தாய்வு பணிகளை, அண்ணா பல்கலை துவக்கியது. பிளஸ் 2 தேர்வு முடிவுகளையும் வெளியிட வேண்டிய கட்டாயம் தேர்வுத்துறைக்கு எழுந்ததால், விடைத்தாள் திருத்தும் பணி உள்ளிட்ட அனைத்து பணிகளையும், முழுவீச்சில் மேற்கொண்டது. வழக்கத்திற்கு மாறாக, இந்த ஆண்டு, ஒரு வாரம் முன்னதாக, நேற்று காலை, 10:00 மணிக்கு, பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, தேர்வுத்துறை வெளியிட்டது. தேர்வெழுதிய, 7.99 லட்சம் மாணவர்களில், 88.1 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். கடந்த ஆண்டு, 86.7 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு, 1.4 சதவீதம் அளவிற்கு, தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

மாணவியர் அபாரம்: தேர்வெழுதிய, 3.14 லட்சம் மாணவர்களில், 84.7 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், 3.89 லட்சம் மாணவியரில், 91

சதவீதம் பேர், தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டிலும், மாணவர்களை விட, மாணவியர் தேர்ச்சி அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல் ஆதிக்கம்:தமிழை முதற்பாடமாக எடுத்து, மாநில அளவில் முதல், மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவ, மாணவியர், உயர்கல்வி படிப்பதற்கான செலவை, தமிழக அரசு ஏற்கிறது. அந்த வகையில், மாநில அளவிலான இடங்களை பிடிப்பதில், பலத்த போட்டி நிலவுகிறது. கடந்த சிலஆண்டுகளாக, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளிகள், மாநில அளவிலான இடங்களை, அதிகளவில் பிடித்து வருகின்றன.
கடந்த ஆண்டு, முதல், மூன்று இடங்களையும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பள்ளிகளே பிடித்தன. இந்த ஆண்டு, 1,189 மதிப்பெண்களை எடுத்து, நாமக்கல்லை சேர்ந்த ஜெயசூர்யா, அபினேஷ் ஆகிய இரு மாணவர் முதலிடத்தையும், 1,188 மதிப்பெண்கள் எடுத்து, நாமக்கல்லை சேர்ந்த பழனிராஜ், ஓசூரை சேர்ந்த மாணவி அகல்யா ஆகியோர் , இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். 1,187 மதிப்பெண்கள் எடுத்து, மேலுர் கல்விமாவட்டம் மதுரையைச் சேர்ந்த ராஜேஸ்வரி, நாமக்கல்லை சேர்ந்த கலைவாணி, விஷ்ணு வர்தன், கண்மணி, மனோதினி, கிருஷ்ணகிரியை சேர்ந்த ரவீணா, சென்னையை சேர்ந்த நிவேதிதா, பூஜா, முத்து மணிகண்டன் ஆகிய ஒன்பது பேர், மூன்றாம் இடம் பிடித்தனர்.இவர்களில், முதலிடம் வந்த இரு மாணவர், இரண்டாம் இடத்தில், ஒரு மாணவர், மூன்றாம் இடத்தில், மூன்று மாணவியர் மற்றும் ஒரு மாணவர் என, ஏழு பேரும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள். அதுவும், ஒவ்வொரு ஆண்டும் மாநில அளவில் இடம் பிடிக்கக் கூடிய வித்யா விகாஸ், கிரீன் பார்க், குறிஞ்சி மெட்ரிகுலேஷன் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களே, சாதனை

Advertisement

படைத்தனர்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் அசத்தல்
: திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த, மூன்று மாணவர்கள், மூன்றாம்இடத்தை பெற்றனர். சீயோன் மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி நிவேதிதா, பொன்னேரி, போரூரில் உள்ள சுவாமி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி பூஜா, ஆவடியில் உள்ள நசரேத் மெட்ரிக் பள்ளி மாணவர் முத்து மணிகண்டன் ஆகியோர், 1,187 மதிப்பெண்களை பெற்றனர்.

"சென்டம்' குறைவு:கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் சிறிது அதிகரித்திருந்தாலும், "சென்டம்' எடுத்த மாணவர் எண்ணிக்கை, கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. பொறியியல், மருத்துவ படிப்புகளுக்கான அறிவியல் மற்றும் கணித பாடங்களில், இந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.இயற்பியலில், வெறும், 36 பேர் மட்டுமே, "சென்டம்' எடுத்துள்ளனர். இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு, 142. கணிதத்தில், கடந்த ஆண்டு, 2,656 பேர், "சென்டம்' எடுத்தனர். இந்த ஆண்டு, 2,352 பேர் மட்டுமே எடுத்துள்ளனர். வேதியியல் பாடத்தில், 1,499 பேர், "சென்டம்' எடுத்தனர். கடந்த ஆண்டை விட, இந்த பாடத்தில், 55 பேர் கூடுதலாக "சென்டம்' எடுத்துள்ளனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (44)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201309:55:16 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆசிரியர்கள் வணிகர்களாக மாறிவிட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Saravanan Velu - paramakudi,இந்தியா
10-மே-201314:17:27 IST Report Abuse
Saravanan Velu வெரி குட்
Rate this:
2 members
0 members
1 members
Share this comment
Cancel
H .Akbar ali - Riyadh,சவுதி அரேபியா
10-மே-201313:22:48 IST Report Abuse
H .Akbar ali   இந்த பள்ளிகளில் எல்லாம் 9ம் வகுப்பும் 11ம் வகுப்பும் அரை ஆண்டு தேர்வோடு நிறுத்திவிட்டு பாஸ் போட்டு விடுகிறார்கள் அரையாண்டு தேர்வுக்கு பிறகு 9ம் வகுப்பிலேயே 10ம் வகுப்புக்கான பாடமும் 11ம் வகுப்பிலேயே 12ம் வகுப்பிற்கான பாடமும் நடத்தப்படுகிறது அதாவது மற்ற பள்ளிகளில் 1 ஆண்டு நடத்தக்கூடிய பாடங்களை இந்த பள்ளிகள் ஒன்றரை ஆண்டுகாலம் நடத்துகின்றன இதனாலேயே இந்த நாமக்கல் மாவட்ட தேர்ச்சி விகிதம் கூடுவது மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறுவது எல்லாம் நடக்கிறது வேறு மாவட்டங்களில் இது மாதிரி செய்வதில்ல தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது
Rate this:
2 members
0 members
24 members
Share this comment
Cancel
MANUSHI - chennai,இந்தியா
10-மே-201313:16:45 IST Report Abuse
MANUSHI படிப்பில் தனியார் பள்ளி, அரசு பள்ளி என்ற பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது. அதையும் தாண்டி நமது மாணவ சமுதாயம் ஜயித்துள்ளது. அவர்களை பாராட்டும் அதே வேளையில், இனி அரசு பள்ளிகளின் மீதும் கவனம் கொள்ளவேண்டும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
cku - tpr,இந்தியா
10-மே-201313:02:36 IST Report Abuse
cku அறிவு புகட்டும் கல்வியாக இல்லாமல் ... அடிமை கல்வியாக மார்க் எடுக்கும் " காபியர்" (xerox ) களிவிமுறை தான் இது . 200 க்கு 200 எடுக்கும் மாணவர்கள் நடைமுறை வாழ்வில் " க்ளார்க் " வாழ்கையே விரும்புகிறார்கள் . தைரியமாக எதையும் செய்ய தயங்குகிறார்கள். ரிசல்ட் காண்பித்து நன்கொடையை அதிகரிப்பது இவர்களின் வேலை . மீண்டும் enterance கொண்டு வருவது நல்லது . தகுதியான தரமான மாணவர்கள் கல்லூரி களில் இடம் கிடைக்கும். மார்க் எடுக்கும் இயந்திர போக்கு மாறுபடும்.. அரசு கவனிக்க வேண்டும் . இல்லாவிட்டால் தமிழக மாணவர்கள் மிக பின்தங்கும் நிலை விரைவில் ஏற்படும் .
Rate this:
0 members
0 members
24 members
Share this comment
Cancel
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
10-மே-201312:26:16 IST Report Abuse
Nagarajan, Panagudi SSLC யில் 425 மார்க் வாங்கிய மாணவ மாணவியருக்கு தான் அட்மிசன் / +1 லும் +2 பாடத்திட்டத்தையே பயிற்ருவித்தல் / பாடத்திட்டத்தை தவிர பொது அறிவற்ற கல்வி இவையெல்லாம் நாமக்கல் மாவட்டத்தின் கல்வியின் பெருமை.நாமக்கல் மாவட்ட பள்ளிகளுக்கு +2 தேர்வில் 25% வினாக்கள் +1 பாடத்திட்டத்தில் இருந்து கேட்டால் தற்போதுள்ள நிலை நீடிக்குமா? இரண்டு வருடங்கள் ஒரே பாடத்திட்டத்தை பயிலும் சாதாரண மாணவனும் இந்த வெற்றியை அடையலாம் .கல்வித்துறை இடற்கெல்லாம் வரை முறை கொண்டு வர வேண்டும். வெற்றியில் பங்கெடுக்கும் கல்வித்துறை / ஆசிரியர்கள் தோல்வியடையும் மாணவ ,மனைவியருக்கும் பொறுப்பேற்கவேண்டும். உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னால் மாணவனை பார்த்து என்னுடைய முன்னால் மாணவன் என்று பெருமை படும் ஆசிரியர் அதே பள்ளியில் அதே ஆசிரியரிடம் படித்த என்கௌண்டரில் இறக்கும் ரவுடிக்கு கல்விதுரையோ போருபேற்பதில்லை.
Rate this:
1 members
0 members
14 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
10-மே-201312:25:07 IST Report Abuse
Baskaran Kasimani மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.
Rate this:
2 members
0 members
3 members
Share this comment
Cancel
Senthil Kumar - Chennai,இந்தியா
10-மே-201311:33:57 IST Report Abuse
Senthil Kumar நாமக்கல் மாவட்டம் தகுதியான மாணவர்களை உருவாக்குவதில்லை. broiler கோழிகளை தான் உருவாக்குகிறார்கள். இதனால் அந்த மாணவர்களுக்கும் கஷ்டம், நம் நாட்டிற்கும் கஷ்டம். பாடத்தை புரிந்து படிகின்ற மாணவர்களே உருவாக்க பட வேண்டும். அப்பொழுது தான் நல்ல பயன் இருக்கும் , பெருமையும் இருக்கும்
Rate this:
6 members
0 members
37 members
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
10-மே-201311:32:19 IST Report Abuse
Kumaresan P வெற்றி பெற்ற மாணாக்கர்களை நினைத்தால் மகிழ்ச்சியாக உள்ளது. ஆனால் நல்ல மதிப்பெண் எடுத்தும் "தற்கொலை " செய்துகொள்ளும் மாணாக்கர்களை நினைத்தால் மிகுந்த கவலை அடைய வைக்கிறது...பெற்றோர்களின் அழுத்தம் இவர்களை பாதிக்கிறது..
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
10-மே-201311:18:19 IST Report Abuse
v.sundaravadivelu கோழிமுட்டையில் முதலிடம் வகிக்கிற நாமக்கல்லில்... எய்ட்ஸ் - இல் முதலிடம் பிடித்த நாமக்கல்.. இதோ, கல்வியிலும் முதலிடம்.. அபார சாதனை..
Rate this:
4 members
1 members
8 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.