Advertisement
சுப்ரீம் கோர்ட் எது சொன்னாலும்அது சரிதான்: ரஞ்சித்சின்கா
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மே
2013
01:08
பதிவு செய்த நாள்
மே 09,2013 23:16

புதுடில்லி : சுப்ரீம்கோர்ட் எது சொன்னாலும், அது சரியானதே,'' என, சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்கா கூறினார்.நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை, சி.பி.ஐ., விசாரித்தது. சி.பி.ஐ.,யின் விசாரணை அறிக்கையை மத்திய சட்ட அமைச்சர், அஸ்வனி குமார் திருத்தம் செய்ததாக சர்ச்சை எழுந்தது.இதை தொடர்ந்து, சி.பி.ஐ., இயக்குனர், ரஞ்சித் சின்கா, ஒன்பது பக்க அறிக்கையை, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அதில், விசாரணை அறிக்கையை, சட்ட அமைச்சர் உட்பட, சிலருக்கு காட்டியதையும், அதில், அவர்கள் திருத்தம் செய்ததையும், ஒப்புக் கொண்டார்.பின், நீதிபதிகள் குறிப்பிடுகையில், "கூண்டில் அடைப்பட்ட கிளி போல்,சி.பி.ஐ.,யின் நிலை பரிதாபகரமாக உள்ளது; ஒரு கிளி பல எஜமானர்கள், எஜமானர்களின் குரலில் கிளி பேசுகிறது' என்று சி.பி.ஐ.,யை கடுமையாக கண்டித்து இருந்தனர்.மேலும், மத்திய அரசையும் சாடியிருந்தனர்.இதைத்தொடர்ந்து, சி.பி.ஐ., தரப்பில், நீதிபதிகளிடம், "சுப்ரீம் கோர்ட் அறிவுரைப்படி, விசாரணையை நடத்துவதாக' உறுதியளிக்கப்பட்டது.சுப்ரீம் கோர்ட் கருத்து குறித்து, நேற்று நிருபர்களிடம் சி.பி.ஜ., இயக்குனர் ரஞ்சித் சின்கா கூறுகையில்,""சுப்ரீம் கோர்ட் எது சொன்னாலும், அது சரியானதே,'' என்றார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (16)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழன் - Melanikuzhi(Ariyalur-DT),இந்தியா
10-மே-201313:08:55 IST Report Abuse
தமிழன் தீயா வேலை செய்யணும் பாஸ்
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
Rajasekar - New Delhi,இந்தியா
10-மே-201309:49:28 IST Report Abuse
Rajasekar கிளிக்கு இப்போ எஜமானர் சுப்ரீம் கோர்ட் ?????????? சி.பி.ஜ., இயக்குனர் ஒற்றை வரியில் பதில் தெரிவித்து அந்த அமைப்பின் உண்மையான நிலையை மறைக்க பார்கிறார்...............
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-மே-201309:48:03 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரு நீதிபதி தீர்ப்புக்கும் மற்ற நீதிபதி தீர்ப்புமே வேறுபடும். இந்த நிலையில் சுப்ப்ரீம் கோர்ட் சொன்னால் சரி என்பது விந்தை ஆக உள்ளது
Rate this:
3 members
0 members
2 members
Share this comment
Cancel
DHASARATHAN - queenstown,சிங்கப்பூர்
10-மே-201308:42:55 IST Report Abuse
DHASARATHAN இது ஒன்றும் காங்கிரசுக்கு பெரிய பிரச்சினை இல்லை. காங்கிரஸ் கட்சி இன்னும் நான்கு நீதிபதிகளை துணை நீதிபதிகளாக நியமித்து தங்களுக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும். அதைத்தான் தேர்தல் ஆணையத்தில் பார்த்தோமே. மக்களும் காங்கிரசுக்கு வாக்களித்து தாங்கள் என்றும் அடிமையே என்று பெருமை பட்டுக் கொள்வார்கள்.
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
10-மே-201307:24:36 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி இதோடு நிறுத்தினால் பரவாயில்லை. அரசின் தலைமை சொல்லுவதையும் சரி என்று ஏற்றுக்கொள்வதில் தான் பிரச்சனை.
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-மே-201310:52:12 IST Report Abuse
villupuram jeevithanநல்ல வேளை, அந்த தலைமை நீதிபதி ரிடையர் ஆகிவிட்டார், அவர் இருந்திருந்தால் 2 G யாவது, மண்ணாங்கட்டியாவது?...
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
10-மே-201306:49:34 IST Report Abuse
ஆரூர் ரங சரிதானா? முல்லா நசிருதீன் கதை ஞாபகம் வருகிறது. முட்டாளான முல்லாவை நீதிபதியாக நியமித்தபோது, ஒரு வழக்கு வந்தது. வாதி வக்கீல் வாதாடினார். நீங்கள் சொல்வது சரிதான் என்றார் முல்லா. எதிர்கட்சி வக்கீல் வாதத்தினையும் கேட்கவேண்டும் என்றனர். அது சரிதான் என்றார் முல்லா. அவர் வாதாடிய பின் நீங்கள் சொலவது சரிதான் என்றார் முல்லா. பெஞ்ச் கிளார்க் கூறினார் அதெப்படி இரு கட்சிகள் சொல்வதும் சரியாக இருக்க முடியும்? ஏதாவது ஒன்று தானே நியாயம் ? இதைக் கேட்ட முல்லா ஓஹோ நீங்க சொல்றது சரிதான் என ஒரு போடு போட்டார். நமது அரசும், வக்கீல்களும் இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டனர்
Rate this:
1 members
0 members
19 members
Share this comment
Cancel
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
10-மே-201305:53:42 IST Report Abuse
naagai jagathratchagan சி பி ஐ ..அதிகாரிகளை ...அரசியல் கைதிகள் போல பார்ப்பது முறையா ...நிர்வாகத்தில் அரசியல் நுழைந்தால் சீர்கேடுதான் ...
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel
INTHIRAN - singapore,சிங்கப்பூர்
10-மே-201305:50:38 IST Report Abuse
INTHIRAN சுப்ரீம் கோர்ட் சொல்வது எப்போதும் சரியானவையே........ஆனால் அதனை கேட்டு நடக்கத்தான் இங்கு யாரும் இல்லை......
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-மே-201305:07:18 IST Report Abuse
villupuram jeevithan சுப்ரீம் கோர்ட்டுக்கு விஷயத்தை கொடுத்தால் தானே அதன் முடிவு சரியாக இருக்கும், மறைத்து விட்டால்?
Rate this:
1 members
0 members
11 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
10-மே-201303:57:14 IST Report Abuse
Baskaran Kasimani காங்கிரஸ் காரர்கள் அடுத்து நீதிபதிகளை மடக்க ஏதாவது தொழில் நுணுக்கத்தை கண்டுபிடித்து விட்டார்கள் என்றால் இந்தியாவை தாராளமாக நல்ல விலைக்கு விற்று விடுவார்கள்...
Rate this:
1 members
0 members
21 members
Share this comment
priyadharshan - Chennai,இந்தியா
10-மே-201307:40:17 IST Report Abuse
priyadharshanவிற்று விடுவார்கள்...- மிச்சம் மீதி ஏதாவது இருந்தா...............
Rate this:
0 members
1 members
7 members
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-மே-201310:49:26 IST Report Abuse
villupuram jeevithanசிபிஐ உயர் அதிகாரிகள் தங்களது பதவி காலம் முடிந்த பிறகு எந்தெந்த பதவிகள் அவர்களை தேடி வந்திருக்கின்றன என்பதை பார்த்தால் போதும் அவர்கள் ஆளும் கட்சிக்கு எப்படி ஊழியம் செய்துள்ளனர் என்பது புரியும். ஆங்கில சேனல்களில் ஒரு பெரிய லிஸ்டை வெளியிட்டுள்ளனரே? தமிழில் வருமா?...
Rate this:
0 members
1 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.