E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
அன்புமணி ஜாமினில் ரிலீஸ்; ராமதாஸ் நிலை என்ன?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 மே
2013
23:25

சித்திரை இளைஞர் விழா, வன்முறையை துண்டும்படி பேசியது உள்ளிட்ட வழக்குகளில் அன்புமணிக்கு ஜாமின் கிடைத்ததை தொடர்ந்து, புழல் சிறையில் இருந்து நேற்று விடுவிக்கப்பட்டார்.
வன்னியர் சங்கம் மற்றும் பா.ம.க., சார்பில், சித்திரை இளைஞர் விழா, மாமல்லபுரத்தில் கடந்த மாதம், 25ம் தேதி, நடத்தப்பட்டது. இந்த விழாவிற்கு, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தனர். மரக்காணம் பகுதியில் பா.ம.க., வினர் வந்த போது, அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது.
போலீஸ் வாகனம், அரசு பஸ் உள்ளிட்ட வாகனங்கள் கொளுத்தப்பட்டன. இந்த சம்பவத்தை தொடர்ந்து, சித்திரை விழா நடந்து முடிந்தது. மரக்காணம் பகுதியில் நடந்த கலவரத்திற்கு நீதிவிசாரணை கோரி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், விழுப்புரத்தில் ஆர்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.
போலீசார் அனுமதியளிக்காத நிலையில், ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ராமதாசை போலீசார் கைது செய்தனர். மேலும், பா.ம.க., தலைவர் மணி, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மற்றும் அன்புமணி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதை தொடர்ந்து, தமிழகத்தின் வடமாவட்டங்களில் வன்முறை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், ராமதாஸ் மீதும், அன்புமணி மீதும், பல்வேறு வழக்குகள் பதியப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு, நடந்த நிகழ்ச்சிகளின் போது, போடப்பட்ட வழக்குகளிலும்,தற்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சில வழக்குகளில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர், ஜாமின் கேட்டு, கோர்ட்களில் மனு செய்திருந்தனர். அந்த வழக்குகளில் ஜாமினும் வழங்கப்பட்டுள்ளது.
ராமதாஸ்:வழக்கு வழக்கின் நிலை
1. விழுப்புரம் ஆர்பாட்டம் ஜாமின்
2. மாமல்லபுரம் சித்திரை விழா(2013) ஜாமின்
3. கூடங்குளம் அணுமின் நிலையம் முற்றுகை ஜாமின் நிலுவை
4. சித்திரை விழா (2012) ஜாமின்
5. மதுரையில், ரஜினி ரசிகர்கள் மீதுதாக்குதல்(2004) ஜாமின்

அன்புமணி:
வழக்கு வழக்கின் நிலை1. மாமல்லபுரம் சித்திரை விழா (2013) ஜாமின்
2. போலீஸ் உத்தரவுகளை மீறியது(2013)ஜாமின்
3. சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில் வன்முறையை தூண்டும்படி பேசியது(2013)ஜாமின்
சென்னை பத்திரிகையாளர் சந்திப்பில், வன்முறையை தூண்டும்படி பேசியது தொடர்பாக, பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் கொடுத்த புகாரை அடுத்து, வழக்குப் பதியப்பட்டது. இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, அன்புமணி தரப்பில் மனு செய்யப்பட்டிருந்தது.திருக்கழுக்குன்றம் கோர்ட்டில், அன்புமணிக்கு ஜாமின் வழங்கப்பட்டதுடன், சென்னை, தி.நகர் போலீஸ் நிலையத்தில், தினசரி கையெழுத்திடும்படியும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, நேற்று மாலையே, புழல் சிறையில் இருந்து அன்புமணி விடுவிக்கப்பட்டார். ஆனால், ராமதா”க்கு, இன்னும் ஒரு வழக்கில் ஜாமின் கிடைக்கவில்லை . - நமது நிருபர்-




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (115)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthi - Kerala,இந்தியா
11-மே-201312:13:06 IST Report Abuse
Karthi பஸ்சுக்கு பிரேக் ஆயில் கூட போடாத டிரைவர்களை ஹெல்மெட் போடவைத்து வரலாறு படைத்த ஐயா லபக்கு தாஸ்க்கு கோடான கோடி நன்றி.
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
Elumalai Elumalai - tamil nadu hosur,இந்தியா
10-மே-201321:09:30 IST Report Abuse
Elumalai Elumalai ரொம்ப சரி தான்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
10-மே-201319:50:01 IST Report Abuse
Ravi Ramanujam கோடை காலம் முடியும் வரை சிறையில் வைங்க போதும். மற்றொருமுறை வன்முறையை தூண்ட மாட்டார்கள்.
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
Raj - Bangalore,இந்தியா
10-மே-201317:24:16 IST Report Abuse
Raj ராமதாஸ் அய்யா, ஜாதி சண்டை செய்வதெல்லாம் பழைய அரசியல். நிகழ் காலத்துக்கு வாருங்கள் ...வருங்காலத்துக்கு எடுத்து செல்வோம் தமிழகத்தை
Rate this:
4 members
0 members
30 members
Share this comment
Elumalai Elumalai - tamil nadu hosur,இந்தியா
10-மே-201321:16:07 IST Report Abuse
Elumalai Elumalaiசரியாக சொன்னிர்கள்...
Rate this:
0 members
2 members
2 members
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
10-மே-201317:09:35 IST Report Abuse
Mohan Ramachandran ப ம க வும் வி சி யும் தங்கள் vote வங்கிகளை தக்க வைத்துக்கொள்ளும் உத்தியோ ? என்று ஐயம் எழ வில்லையா ?
Rate this:
2 members
0 members
20 members
Share this comment
Cancel
indiantamilan - villupuram,இந்தியா
10-மே-201316:38:54 IST Report Abuse
indiantamilan அவர்கள் ஆட்சியை பிடிப்பது எதற்காக ...........வேறு எங்கயாவது இடம் வங்கி போடலாம் என்று தான் .,...தமிழ் நாட்டில் பாதியை வளைத்து விட்டார்கள் .......... வன்னியர் என்று சொல்லி இளைங்கர்களின் வாழ்கையை அழிக்காதிர் ........
Rate this:
1 members
0 members
31 members
Share this comment
Cancel
Anbazhagan M - Kurumbalur, Perambalur,இந்தியா
10-மே-201316:01:50 IST Report Abuse
Anbazhagan M குட்டி அய்யா மேல எதாவது unbailable கேஸ் போடுங்க சாமி...................
Rate this:
2 members
2 members
31 members
Share this comment
Cancel
varadha rajan - Thirupporur,இந்தியா
10-மே-201314:58:41 IST Report Abuse
varadha rajan முதலில் அனைவரும் மனிதராய் வாழ கற்றுகொள்ளுங்கள்.. பிறகு ஜாதி மதம் என்று ஒவ்வொருவருக்கும் தகுந்த சுயநலத்தோடு விவாதிப்பதை நிறுத்த முயற்சி மேற்கொள்ளுங்கள்... ஏனெனில் வளர்ந்து வரும் சமுதாய மாற்றத்தில் இது போன்ற பிரிவினைகள் வேரோடு பிடுங்கி எறியப்படும்... அனைவருக்கும் அனைத்தும் சமம் என்ற ஒருமித்த கருத்துதான் மிகுதியாக வெளிப்படும்... நன்றி..
Rate this:
5 members
0 members
27 members
Share this comment
N.KALIRAJ - vaniyambadi,இந்தியா
10-மே-201317:12:45 IST Report Abuse
N.KALIRAJஇந்த வாசகத்தை அரசிடம் சொல்லுங்கள்......மேலும் அரசின் சலுகை வேண்டுமென்றால்......நான் இந்த ஜாதி......அந்த ஜாதி...என தெருவிற்கு தெரு முழங்குவீர்கள்.....கடிவாளம் என்றால் வாயை மூடும் குதிரையைப் போன்ற நீங்கள் மனிதரின் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறீர்கள்.........
Rate this:
83 members
3 members
18 members
Share this comment
Cancel
R.Saminathan - mumbai,இந்தியா
10-மே-201314:50:02 IST Report Abuse
R.Saminathan திரு.ராமதாஸ் அவர்கள் கட்சி நடத்துற விதம் சரியில்லை. புரிந்துகொள்ள வேண்டும்,பொது சொத்துக்களை அழித்த திரு.ராமதாஸ் அவர்கள் தமிழகரசிடம் மன்னிப்பு கேட்டு,, கட்சியில் ஜாதிங்கற வார்த்தை பயன் படுத்தக்கூடாது,, பொது சொத்துக்களை சூரையாடியதற்கு அதுக்குண்டான பணத்தை அரசிடம் திரு,.ராமதாஸ் அவர்கள் ஒப்படைக்க வேண்டும்,.ஜாதிய சொல்லி இந்தமாரி வன்முறை தூண்டக்கூடாது,,திரு.அன்புமணி அவர்கள் தன் தந்தையை பார்த்து அவரும் சிறையில் சென்று விட்டார்,,இப்போ ஜாமீனில் வெளியே வந்த அன்புமணி அவர்கள் பொது மக்களிடத்தில் சட்ட சீர் திருத்தத்தோடு பேச வேண்டும்,.,தமிழகத்தில் அரசியல் நடத்துவது மக்களுக்காகத்தான் பா.ம.காவும் மக்களுக்காகத்தான் அதுக்காக திரு.ராமதாஸ் அவர்கள் வன்னியர் .வன்னியர் என்று சொன்னா அது ஜாதியைத்தான் குறிக்கும்,,,இன்னையோட வன்னியர் என்ற வார்த்தைய மறப்பது திரு.ராமதாஸ் அவர்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன்,,.
Rate this:
14 members
0 members
29 members
Share this comment
Kumar - chennai.,இந்தியா
11-மே-201300:35:08 IST Report Abuse
Kumarஅவர் வன்னியர்ந்னு சொன்னா என்னடா இப்படி உங்களுக்கு போறாமைஈஈ ? த்ரில் இருந்தா நீங்க கட்சிய ஆரம்பிச்சு பாருங்கடா?...
Rate this:
9 members
0 members
2 members
Share this comment
Anwar ali - havana,கியூபா
15-மே-201317:50:27 IST Report Abuse
Anwar ali'த்ரில் இருந்தா நீங்க கட்சிய ஆரம்பிச்சு பாருங்கடா?...' சூப்பர் . நான் சொல்லல நம்ப குமாரு நல்லா தமாசா பேசுவாப்பலன்னு...
Rate this:
9 members
0 members
2 members
Share this comment
Cancel
K.Varadharajulu - Chennai,இந்தியா
10-மே-201314:33:54 IST Report Abuse
K.Varadharajulu மேலே குமார் என்று ஒரு அறிவாளி கருது கந்தசாமி ஆக கருத்து சொல்லியிருக்கார். இவனை போன்ற ஆட்கள் இருக்கும் வரை வன்னியர் சமுதாயம் முன்னேறவே முடியாது, போப்பா போய் புள்ளைகளை படிக்கச் வைங்கப்பா
Rate this:
46 members
0 members
50 members
Share this comment
Kumar - chennai.,இந்தியா
11-மே-201300:49:07 IST Report Abuse
Kumarஎன் இந்த ஜாதி வெறியும் பொறாமையும் ?...
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.