BJP, senior leader Advani condemned the Two ministers not wayout | அமைச்சரை நீக்காமல் இருப்பதா? : அத்வானி கண்டனம்| Dinamalar

அமைச்சரை நீக்காமல் இருப்பதா? : அத்வானி கண்டனம்

Updated : மே 10, 2013 | Added : மே 09, 2013 | கருத்துகள் (28)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 அமைச்சரை நீக்காமல் இருப்பதா? : அத்வானி கண்டனம்

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான, சி.பி.ஐ., அறிக்கையை திருத்தியதற்கு, சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தும், சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரை, பிரதமர் மன்மோகன் சிங் பதவி நீக்கம் செய்யாதது சரியல்ல' என, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.சமூக வலைதளத்தில் உள்ள, தன் வலைப்பக்கத்தில், அத்வானி கூறியுள்ளதாவது:அவசரநிலை பிரகடனம் அமலில் இருந்த காலத்தில், அப்போதைய ஆட்சியாளர்கள் எப்படி நடந்து கொண்டனரோ, அதுபோலவே, தற்போதைய மத்திய அரசும் செயல்படுகிறது. ரயில்வே அமைச்சர் பவன் குமார் பன்சால், சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்க்கட்சிகள் பெரிய அளவில் குரல் கொடுத்தும், மத்திய அரசு அதை கண்டு கொள்ளவில்லை.நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான, சி.பி.ஐ., அறிக்கையை, மத்திய அரசு திருத்தியது மற்றும் அமைச்சர் பன்சாலின் உறவினர் லஞ்சம் பெற்ற விவகாரத்தை, பெரிய அளவில் எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், பார்லிமென்டின் இரண்டாம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடரில், எந்த அலுவலும் நடைபெறவில்லை."நிலக்கரி சுரங்க பிரச்னையில், சி.பி.ஐ., விசாரணை அறிக்கையின் முக்கிய அம்சமே மாற்றப் பட்டுள்ளது; ஒட்டு மொத்த விசாரணையும் திசை திருப்பப்பட்டு உள்ளது' என, நேற்று முன் தினம், பிரதமர் அலுவலகம், சி.பி.ஐ., சட்ட அமைச்சர் மற்றும் நிலக்கரி துறை அமைச்சகத்தை, சுப்ரீம் கோர்ட் கண்டித்தும், மத்திய அரசு அதை கண்டு கொள்ளாதது கவலை அளிக்கிறது.சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் உட்பட, இரண்டு அமைச்சர்களை, மத்திய அரசு காப்பாற்ற முற்பட்டுள்ளது சரியல்ல.இவ்வாறு அத்வானி கூறிஉள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUDARSAN - houston,யூ.எஸ்.ஏ
15-மே-201302:52:31 IST Report Abuse
SUDARSAN இப்பொழுது என்னா லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்களா பதவியில் இருக்கிறார்கள், தவறு நடந்தால் தார்மீக பொறுப்பு ஏற்று பதவி விலக ? அனைவரும் ஊழல் பெருச்சாளிகள். தெரிந்தே தப்பு செய்பவர்கள் . ஆகையால் இவர்களிடம் தார்மீக பொறுப்பை எதிர்பார்ப்பது முட்டாள் தனம் .
Rate this:
Share this comment
Cancel
INTHIRAN - singapore,சிங்கப்பூர்
10-மே-201315:23:21 IST Report Abuse
INTHIRAN எப்பிடி இருந்தாலும் அதிகபட்சம் இன்னும் ஒரு வருசம் தானே.......அதற்க்கப்புறம் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்காமல் போகலாம்.......
Rate this:
Share this comment
Cancel
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
10-மே-201313:45:43 IST Report Abuse
Ravi Ramanujam வெட்கம் மானம் என்று எல்லாம் வெறும் பேச்சுதான்.எத்தனையோ செய்ததில் இதுவும் ஒன்று. இதுக்கெல்லாம் பதவி விலகினால் பொழைப்புக்கு என்ன பண்றது?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-201313:41:06 IST Report Abuse
Pugazh V ஹலோ, கர்நாடகா தேர்தல் முடிவை ஆராய்ந்து உருப்படற வழி ஏதாவது இருக்கிறதா என்று யோசிப்பதில் கவனம் செலுத்துங்கள். இப்போ மட்டும் ஏத்த இரக்கமா பேசுங்க, மக்களவை நடந்த சமயம் அமளி மாட்டும் செய்து எதுவுமே பேசாமல், தினமும் காலையில் வந்தவுடன், உடனே வீட்டுக்கு ஓடிப் போயிடுவீங்க. இதெல்லாம் வேலைக்காகாது என்று கர்னாடக மக்கள் உணர்த்திவிட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Indian - Chennai,இந்தியா
10-மே-201312:51:00 IST Report Abuse
Indian நிலகரி பிரச்சனையிலும் சரி, பன்சல் விசயத்திலும் சரி சிபிஐ ராகுல் காந்தியின் கைப்பாவையாகவே செயல் படுகிறது, மற்றும் சிபிஐ எந்த ஆதாரமும் கொடுக்க வில்லை, இப்பொழுது ஆதாரத்தை உற்பத்தி செய்ய எதோ ஒரு தொழிற்சாலையை நாடி உள்ளனர். இந்த லட்சணத்தில் அவர்கள் தன்னாட்சி அதிகாரத்தை கேப்பது வியப்பாக உள்ளது, என்ன ஆனது வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம், எவ்வளவு பணம் வெள்ளை யாக்கப்பட்டு இந்தியாவில் முதலீடு செய்ய பட்டது என்பது போன்ற பல விசயத்தில் யாருடைய சொல்லுக்கு கட்டு பட்டு சிபிஐ செயல் படுகிறது, பிரான்ஸ் கொடுத்ததாக சொல்லி ஒரு போலியான 500 HSBC account நம்பர் களை அதுவும் அது போல ஒரு நம்பர் account அந்த branch சில் இல்லவே இல்லை என்று தெரிந்து அது பற்றி என்ன 10 நாட்கள் அரசியல் செய்ய முடிந்தது, தவறான details கொடுத்த பிரான்ஸ் மீது என்ன நடவடிக்கை எடுத்தது சிபிஐ , இதன் பின்னால் பிஜேபி உள்ளது என்பது தெரிந்தும் என்ன செய்ய முடித்து, சிபிஐ உண்மையில் பிஜேபி யின் கூண்டு கிளியே
Rate this:
Share this comment
Cancel
Nagarajan, Panagudi - Muscut,ஓமன்
10-மே-201312:04:17 IST Report Abuse
Nagarajan, Panagudi காங்கிரஸ் கட்சி என்பது முதியோர் கிரிமினல்களின் கூடாரம் என்பதை அக்கட்சி இப்போது நிருபித்து விட்டது. தானும் செய்யமாட்டேன் தள்ளியும் நிற்க மாட்டேன். செய்பவனை ஆட்சியில் அமர விடமாட்டேன் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருக்கிறது என்பதையே கர்நாடக தேர்தல் முடிவில் தெரிகிறது. இவர்கள்தாம் ஊழல் செய்ய வேண்டும் பிற கட்சிகள் இவர்களை விமர்சனம் செய்தலோ / ஆட்சியை பிடித்தாலோ அந்த மாநிலங்களில் உட்கட்சிக்குள் பூசலை ஏற்படுத்தி ஆட்சியில் இருப்பவர்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி , ஆட்சியை கவிழ்ப்பதில் முதியோர் இல்லம் (காங்கிரஸ் கட்சி ) முனைப்பாக செயல்படும் என்பதையும் கர்நாடக தேர்தல் வெளிபடுத்தி உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
samy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201311:16:22 IST Report Abuse
samy காங்கிரஸ் கட்சியின் ஒவ்வெறு ஊழலும் கட்சியின் தலைமை சம்பந்தப்பட்ட ஊழல். இதில் ஏதேனும் ஒருவரை பதவி நீக்கம் செய்தால் அப்போது தெரியும் கட்சியின் தலைமை வண்ட வாளம்
Rate this:
Share this comment
Cancel
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
10-மே-201311:12:30 IST Report Abuse
N.Purushothaman தன் மீது குற்றசாட்டு இருந்தால் உடனே பதவியை துறந்து தான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பது தான் ஒரு யோக்கியமான அரசியல் வாதிக்கு அழகு... ஆனால் யோக்கியர்கள் இல்லை என்பது தான் பெரும் வேதனை.....
Rate this:
Share this comment
Cancel
பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா
10-மே-201310:11:18 IST Report Abuse
பொன்மலை ராஜா மூத்த அரசியல் தலைவர் அல்லவா ... முதலில் பாடம் கற்றுக் கொண்டார் கர்நாடகத் தேர்தல் முடிவுகளில் இருந்து ... ஊழல் புகாரில் சிக்கியவரை நீக்கப் போய் இன்று ஆட்சியையே பறிகொடுத்துள்ள துயரத்தை ... மத்தியில் காங்கிரசை அனுபவிக்க விட ஆசைப்படுகிறார் போலும் ... கர்நாடகத்தில் ஆட்சியை பறிகொடுத்ததற்கு விஸ்வநாத் பிரதாப் சிங்கின் சாபமும் காரணமாக இருக்குமோ ... ஆர்.எஸ்.எஸ்.இல்லாமல் பா.ஜ.க.வினர் மட்டும் கூடி பரிசீலிக்க வேண்டிய விஷயம் இது ...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-மே-201309:29:55 IST Report Abuse
Srinivasan Kannaiya பதவி நீக்கம் மட்டும் பத்தாது.... அவர்க்கு கொடுக்கும் தண்டனை எல்லா அரசியல் வாதிகளுக்கும் ஒரு பாடமாக அமையவேண்டும்...
Rate this:
Share this comment
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-மே-201310:56:42 IST Report Abuse
villupuram jeevithanஓ நீங்கள் இந்தியாவில் இல்லையா? அதானே பார்த்தேன்? அரசியல்வாதிகளுக்கு மக்கள் தான் பாடம் கொடுக்க முடியும் இந்தியாவில்? எல்லா ஓட்டைகள் மூலம் தப்பித்து விடுவார்களே?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை