ரோட்டில் உலா வந்த காட்டு யானை: மூணாறில் பயணிகள் ஓட்டம்| Dinamalar

ரோட்டில் உலா வந்த காட்டு யானை: மூணாறில் பயணிகள் ஓட்டம்

Added : மே 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 ரோட்டில் உலா வந்த காட்டு யானை: மூணாறில் பயணிகள் ஓட்டம்

மூணாறு: மூணாறு அருகே ஐந்தாம் மைல் பகுதியில், காட்டு யானை ஒன்று, ரோட்டில் உலா வந்தது. ராஜமலைக்குச் செல்ல காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஓட்டம் பிடித்தனர்.
மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவிற்கு உட்பட்ட ராஜமலையில், அபூர்வ இன வரையாடுகள் உள்ளன. நேற்று, ராஜமலைக்கு செல்ல, காலை 8 மணிக்கு, பயணிகள் காத்திருந்தனர். அப்போது, காட்டிற்குள் இருந்து வெளியே வந்த யானை ஒன்று, ரோட்டில் வந்தது.
ரோடு ஓர கடைக்காரர்கள் தப்பி ஓடினர். கடைகளில் இருந்த அன்னாசி, மாம்பழங்களை எடுத்து யானை சாப்பிட்டது. டிக்கெட் கவுன்டர் அருகே யானை வந்ததால், வரிசையில் காத்திருந்த பயணிகள் அலறி ஓடினர். வனத்துறை ஊழியர்கள், யானையை காட்டிற்குள் துரத்தினர்.
மீண்டும் வந்தது: காலையில் கடைகளில் பழங்களை ருசித்த யானை, மதியம் 12 மணிக்கு மீண்டும் ரோட்டிற்கு வந்தது; கடைகளை சேதப்படுத்தவில்லை. யானையை, சுற்றுலாப் பயணிகள், போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை