நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன? | நாமக்கல் மாவட்டத்தின் சாதனை பின்னணி என்ன?| Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (60)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

நன்றாக படிக்கக் கூடிய மாணவ, மாணவியருக்கு, "சீட்' கொடுத்து, அவர்களை, தூங்கும் நேரம் தவிர்த்து, இதர நேரம் முழுவதும், படிக்க வைப்பதும், தேர்வு எழுத வைப்பதும் போன்ற செயல்களில், தொடர்ந்து ஈடுபட வைப்பது தான், நாமக்கல் மாவட்ட பள்ளிகளின் சாதனைக்கு காரணம் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து, கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது:
நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் படித்து, மாநில அளவில், "ரேங்க்' எடுத்த மாணவ, மாணவியரின், சொந்த மாவட்டத்தை விசாரித்தால், பெரும்பாலும், அவர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் மேற்கு மாவட்டங்கள், தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களாகத் தான் இருப்பர்.
நன்றாக படிக்கக் கூடிய புத்திசாலி மாணவ, மாணவியருக்குத் தான், அங்கே, "சீட்' கொடுக்கின்றனர். திறமையான மாணவர்களை, மேலும் "பட்டை' தீட்டுவது, பெரிய சாதனை கிடையாது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், சாதாரண மாணவ, மாணவியர்

சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். "சராசரி' மாணவர்களுக்கு, நாமக்கல் பள்ளிகளில் "சீட்' கிடையாது.
நன்றாக படிக்கும் மாணவர்களை சேர்த்துக் கொண்டு, முக்கிய பண்டிகை நாட்கள் தவிர, மற்ற அனைத்து நாட்களும், பள்ளி வேலை நாட்களாக வைத்துக் கொள்கின்றனர். மாணவர்கள் தூங்கும் நேரம் தவிர, மற்ற அனைத்து நேரங்களிலும், படிக்க வைப்பது, படித்ததை, தேர்வெழுத வைப்பது என்ற வேலையை, பிரதானமாக செய்கின்றனர். இதையே, திரும்ப திரும்ப செய்கின்றனர்.
பிறகென்ன, தேர்வில், 200க்கு 200 மதிப்பெண்களை எடுத்து விடுகின்றனர். பள்ளி வேலை இயங்கும் நாட்கள், தேர்வுகள் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில், நடைமுறை ரீதியாக, அரசு பள்ளிகளுக்கு, சில சிக்கல்கள் இருக்கின்றன.குறிப்பாக, அரசு பள்ளி ஆசிரியர்கள், பல்வேறு இதர பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால், அவர்களின், கற்பித்தல் பணி பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பு, தனியார் பள்ளிகளில் இல்லை. தனியார் பள்ளிகளில், சரியாக வேலை பார்க்கவில்லை எனில், வேலை போய்விடும். இது போன்ற எச்சரிக்கை, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இல்லை.

Advertisement

மேலும், ஆண்டுக்கு, 2.5 லட்சம் முதல், 3 லட்சம் ரூபாய் வரை, நாமக்கல் மாவட்ட பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இவ்வளவு பணம் வசூலிப்பதால், நன்றாக கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு, பள்ளி நிர்வாகங்களுக்கு ஏற்படுகிறது. இது போன்ற பல்வேறு காரணங்களால், அந்த மாவட்ட பள்ளிகள், மாநில அளவில் சாதிக்கின்றன.இவ்வாறு கல்வித் துறை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.

கோடிகளில் புரளும் நிர்வாகிகள்!

தனியார் பள்ளிகளில், இயக்குனர்களாக இருப்பவர்கள் அல்லது அவர்களின் மனைவியர் அல்லது கணவர்கள், அரசு பள்ளிகளில் ஆசிரியர்களாக பணிபுரிந்து விட்டு, வி.ஆர்.எஸ்., கொடுத்தவர்களாக உள்ளனர்.

ஐந்து, ஆறு ஆசிரியர்கள் சேர்ந்து, ஒரு பள்ளியை ஆரம்பித்து விடுகின்றனர்.பின், மத்திய அரசு சம்பளத்திற்கு இணையாக சம்பளம் கொடுத்து, திறமையான ஆசிரியர்களை, பள்ளிகளில் நியமிக்கின்றனர். அதிக சம்பளம் காரணமாக, ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்.

இதனால், "ரிசல்ட்', ஆண்டுக்கு ஆண்டு, எகிறியபடி உள்ளது; பள்ளிகளின் நிர்வாகிகள், கோடிகளில் புரள்கின்றனர். - நமது நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (60)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
11-மே-201323:14:58 IST Report Abuse
g.s,rajan நாமக்கல் மாவட்டத்தில் முன்பு கள்ள நோட்டுக்கள் புழங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இப்போது இங்கு கறுப்புப்பணம் பெரும் அளவில் புழங்கி வருவதாக செய்திகள் அடிபடுகிறது..வருமான வரித்துறை என்ன செய்கிறது .கல்வியிலும் கறுப்புப்பணம் புழங்கி கல்வியை நாசப்படுத்தி விட்டது .கல்வி வியாபாரமாக்கப்பட்டு ஊழல்கள் நிறைந்து வருவது வேதனையிலும் வேதனை .இந்த நிலை எப்போது மாறும் ,நுழைவுத் தேர்வு மட்டுமே இந்த கல்விக் கொள்ளையை தடுக்க வழி செய்யும் .என நம்பலாம் .
Rate this:
Share this comment
Cancel
V.Arumugam - karaikal,இந்தியா
11-மே-201306:07:31 IST Report Abuse
V.Arumugam மேல் படிப்புக்கு மார்க் மட்டுமே தகுதி என்பதால் தான் இப்படி பட்ட தொழிற்சாலைகள் வெற்றிகரமாக நடக்கின்றன. வசதி படைத்தவர்கள் வாங்கி கொள்கின்றனர் .
Rate this:
Share this comment
Cancel
Anbil - London,யுனைடெட் கிங்டம்
11-மே-201300:45:28 IST Report Abuse
Anbil எனக்கு ஒன்று புரியவில்லை, எப்படி மற்ற மாவட்ட பிள்ளைகள் நாமக்கல் சென்று படிக்க முடியும்? வேலை நிமித்தமாக பெற்றோர்கள் அங்கு சென்று பிள்ளைகள் படிக்க வேண்டும், இல்லை-என்றால் இது எப்படி முடியும்? சென்னை-யில் இருந்து நாமக்கல் சென்றா படிப்பார்கள்? பேத்தலாக இருக்கே?
Rate this:
Share this comment
ஈரோடுசிவா - erode ,இந்தியா
11-மே-201323:36:03 IST Report Abuse
 ஈரோடுசிவாபாவம் அன்பில் நீங்கள் .. உள்ளூர் நிலவரம் தெரியாமல் இருக்கிறீர்கள் ...எனக்குத் தெரிந்து திருப்பூரை சேர்ந்த ஒரு மாணவரின் தாயார் ஈரோட்டில் ,பள்ளிக்கு அருகில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கிக் கொண்டு மகனை தான் நினைத்த பள்ளியில் படிக்க வைத்தார் .இது போல நிறைய உதாரணங்கள் காட்ட முடியும் .......
Rate this:
Share this comment
Cancel
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
11-மே-201300:25:17 IST Report Abuse
Amanullah இந்த நாமக்கல் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளில் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளை விட அரசு ஊழியரிகளின் பிள்ளைகள் தான் குறிப்பாக ஆசிரியர்களின் பிள்ளைகள் தான் அதிக சதவிகிதத்தில் படிப்பதாகக் கேள்வி. ஏன் இந்த வருடம் முதல் மதிப்பெண் பெற்ற மாணவனின் தாய் புதுக்கோட்டையில் ஒரு அரசு பள்ளியில் ஆசிரியையாம். தன் மகனைத் தான் பணிபுரியும் பள்ளியில் சேர்க்காமல் ( தன்னைப்போன்ற அரசு ஆசிரியர்களின் பயிற்றுவிக்கும் திறனில் நம்பிக்கை இல்லாமல் ) 200 கிலோமீட்டர் தாண்டி வந்து தன் மகனை நாமக்கல் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்திருக்கிறார். இந்தக் கொடுமையை என்னவென்று சொல்ல...
Rate this:
Share this comment
Cancel
Bala - Coimbatore,இந்தியா
10-மே-201321:18:12 IST Report Abuse
Bala Students treating to study by forcing/motivating to spent their times to study.? It's a school or what? It's really a big issue. students should not be a mechine. if it is the socity will face a big problem. so oly these mechines are sold to foreign countries. India is a beautiful country. a person getting marks will not decide a person talent. A person getting low marks is not a problem. india needs talent people only. talent students make india in first position not a money or a machine. My support oly for Goverment School teacher those make a student to attain a pass by their mind. Govt teacher always doing hard work. it'll never fail. with in two years govt school student get top marks. let's see.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Iyer - chennai,இந்தியா
10-மே-201321:17:07 IST Report Abuse
Natarajan Iyer அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு இணையாக உழைப்பது இல்லை என்பது உண்மைதான். எனது உறவினர் சுமார் நாற்பது வயதில் பதினைந்து ஆண்டுகளாக தனியார் பள்ளியில் பார்த்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு சென்ற ஆண்டு அரசு பள்ளி ஆசிரியர் வேலை கிடைத்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இனி வருடத்தில் பாதி நாள் லீவுதான் என்று சொன்னார்.
Rate this:
Share this comment
Cancel
vaithilingam - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201320:34:07 IST Report Abuse
vaithilingam ஒரு புத்தகத்தை 2 ஆண்டுகள் படித்தால் யார்வேண்டுமானாலும் எடுக்கலாம் .இதுதான் தனியார் பள்ளிகளின் தனி திறமை .
Rate this:
Share this comment
Cancel
Jaga Dish - Tirupur,இந்தியா
10-மே-201320:16:39 IST Report Abuse
Jaga Dish Congratulation for all students for their success.Well Good job Keep it upYour success should continue in future also.Here many are blaming about government teachers,really can anyone prove that all private schools are teaching +1 subjects ? Never If government allow for government and aided schools to take the +2 subjects after quarterly sure no private school will get state first ranks.First Government should give uniformity not in DRESS also in teaching.Only government school students studying +1 & +2 subjects. +2 students are studying only 9 months and scoring equal to private school results so think 2 years +2 studies or 9 month +2 studies.Can any only tell does private schools teaching +1? No not at all , these persons destroying education need people awareness. Will all private school's take +1 then +2 as government school does? will they give leave for quarterly,half yearly,pooja holidays,Diwali holidays, pongal holidays etc? My kind request to CM please be strict in education tem for better.All DEO's & CEO's don't be servant for private schools be an Indian Don't be an Beggar...... JAI HIND
Rate this:
Share this comment
Cancel
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
10-மே-201319:55:51 IST Report Abuse
Ravi Ramanujam பணம் இருந்தால் மட்டுமே அங்கு படிக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பதை மறுப்பதற்கு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Bennet - Nagercoil,இந்தியா
10-மே-201319:51:58 IST Report Abuse
Bennet மனப்பாடம் செய்து பேப்பரில் துப்ப வைத்து மார்க் வாங்க வைப்பதால் எந்த பயனும் இல்லை. முதல் மார்க் வாங்கியவர்களை ஒரு ஐந்து வருடம் கழித்து பாருங்கள் . ஏதாவது ஒரு வெளிநாட்டு கம்பனியில் அடிமை மாதிரி வேலை செய்து கொண்டிருப்பார்கள்
Rate this:
Share this comment
Narayanan Sundaresan - Chennai,இந்தியா
13-மே-201310:27:27 IST Report Abuse
Narayanan Sundaresan10ம் வகுப்பில் அதிக மார்க் வாங்கியர்வர்கள் எல்லாம் 12ம் வகுப்பில் அதிக மார்க் வாங்குவது இல்லையே ? ஊடகங்கள், 5 வருடத்திற்கு முன் 10ம் மற்றும் 12ம் வகுப்பில் அதிக மார்க் வாங்கிவர்கள், தற்போது எங்கே? எப்படி? என்ன ? செய்துக கொண்டிருக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தால் உண்மையான நிலைமை தெரிய வரும். செய்வார்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.