E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பீகாரில் மோடி புகழ்பாடும் போஸ்டர்: பா.ஜ. மீது கடுகாய் வெடித்த நிதீஷ்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மே
2013
02:23
பதிவு செய்த நாள்
மே 10,2013 02:21

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக பா.ஜ.அறிவித்துவிடக்கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு வரும் பீகார் முதல்வர் நிதீஷ்குமாரை வெறுப்பேத்தும் விதமாக பீகார் மாநில பா.ஜ.வில் மோடிக்கென தனியாக ரசிகர் பட்டாளம் , மோடியை வருங்கால பிரதமராக வர்ணித்து, 2014-ல் பிரதமர் மோடி என்ற வாசகத்துடன் போஸ்டர் ,மாநிலம் முழுக்க ஓட்டிவைத்துள்ளது. ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதல்வருமான நிதீஷ் தனது சேவா யாத்திரை துவக்கியுள்ளார். முதலில் கோபால் கன்ஞ்ச் மாவட்டத்திற்கு வந்தார். பின்னர் கயா மாவட்டத்தில் அவரது யாத்திரை வந்தது. அப்போது நிதீஷ் யாத்திரை வரும் பகுதிகளில் எல்லாம் அவரதுகண்ணில் படும்படியாக போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது அவரை எரிச்சலடைய வைத்துள்ளது. ஆத்திரமடைந்த நிதீஷ் தனது ஆதராவளர்களிடம் கொதிக்கும் எண்ணெயில் போட்ட கடுகாய் வெடித்தார். என்னை பா.ஜ.வினர் கோபத்திற்கு ஆளாக்குகிறார்களா ? என ஆவேசப்பட்டார்.

பீகாரில் பா.ஜ.வில், நரேந்திரமோடி விகார் மஞ்ச் என்ற பெயரில் மோடி ரசிகர் படை உள்ளது. இவர்கள் தான் இந்த போஸ்டரை ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களில் ஒட்டி வைத்துள்ளனர். இது குறித்து அம்மாநில பா.ஜ. தலைவர் மங்கள்பாண்டே கூறும் போது, ஜனநாயகத்தில் போஸ்டர் ஒட்டி புகழ்வதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. அதை நான் தடுக்கமுடியாது. மோடி மேல் உள்ள பாசத்தாலும், பிரியத்தாலும் அவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.இதுக்கு போய் அலட்டிக்கலாமா என நிதீஷ் ஆதரவாளர்களிடம் கூலாக கூறியுள்ளார்.


ஏற்கனவே பிரதமர் வேட்பாளரை அறிவிக்க நாங்கள் பா.ஜ. விற்கு கெடுவிதித்துள்ளோம். ஆனால் இவங்க எங்க தலைவரை (நிதீஷ்) கோபபடுத்த இப்படி போஸ்டர் ஒட்டுறாங்களே என ஆதங்கபட்டனர் நிதீஷ் ஆதரவாளர்கள். போஸ்டர் ஒட்டி புகழ்பாடுவது நம்மூரில் மட்டுமா ஒட்டு மொத்த இந்திய அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (59)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
11-மே-201311:10:47 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா?
Rate this:
1 members
0 members
1 members
Cancel
Manidhan - India,இந்தியா
11-மே-201307:34:22 IST Report Abuse
Manidhan மோடி விளம்பர நாயகன் என்பதை மீண்டும் நிருபித்து விட்டார்.
Rate this:
1 members
0 members
1 members
Cancel
karthikeyan - karur,இந்தியா
10-மே-201320:23:45 IST Report Abuse
karthikeyan நிதீஷ் சார் நீங்களும் மோடி மாதிரி மாநிலத்த முன் மாதிரி கொண்டு வாங்க. அப்ப எல்லாரும் உங்க புகழ் பாடுவாங்க.... அத விட்டு விட்டு போஸ்டர் பார்த்து பொறமை படறீங்களே .....?
Rate this:
1 members
0 members
2 members
Cancel
Selvaprakash S - Erode,இந்தியா
10-மே-201318:08:17 IST Report Abuse
Selvaprakash S மோடி பிரச்சாரம் எனபது முயற்சியே ..பிஜேபி கர்நாடக வில் தோற்பது முன்கூட்டியே தீர்மானம் செயப்பட்டது ..தவறான நிர்வாகம் ,ஊழல் போன்றவையால் ...மோடி பிஜேபி யால் அங்கீகரிக்கப்பட்டு சிறிது மாதங்களே ஆன நிலையில்,இன்னும் முழு பொறுப்பு கொடுக்கபடாத நிலையில் அவரால் மாநில நிர்வாகத்தை எப்படி சரி செய்ய முடியும் ..இந்த தேர்தல் ஒரு வருடத்திற்கு பிறகு வந்திருந்தால் ஓரளவுக்கு மோடி சரி செய்திருப்பார் ..ஒரு வாரம் வந்து பிரச்சாரம் செய்த உடன் மக்கள் நடந்த அனைத்தையும் மறந்து மோடியை நம்புவது எதார்த்தத்தில் நடக்காத ஒன்று ..மோடி ஒரு உண்மையான தேச தலைவர் ,வருங்கள நம்பிக்கை ,சுயலாபத்திற்காக காலம் காலமாக நமக்கு துரோகத்தையும் ,துன்பத்தையும் கொடுத்து கொண்டிருக்கும் காங்கிரஸ்க்கு அதரவாக பிரச்சாரம் செய்து நாட்டிற்க்கும் வருங்கால தலைமுறைக்கும் கேடு செய்யாதீர்கள் ...
Rate this:
1 members
0 members
11 members
Cancel
Magesh kumar - Madurai,இந்தியா
10-மே-201317:06:27 IST Report Abuse
Magesh kumar நாங்கள் ,அத செய்வோம் ,இதை செய்வோம் என்று வாய் பேசி பேசி வரும் வெட்டி அரசியல் வாதிகளின் மத்தியில் என்னால் முடிந்ததை செஞ்சுருகிறேன் , மேலும் வாய்ப்பு குடுத்தால் இன்னும் நன்றாக செய்வேன் என்று சொல்பவரிடன் கொடுத்துதான் பார்போமே ஜெய்ஹிந்த்
Rate this:
7 members
0 members
68 members
Cancel
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201315:46:26 IST Report Abuse
Mujib Rahman அபரிவிதமான ஆதரவு அழிவில் முடியும் ,,,, மோடியின் ஆதரவு ,,,பி ஜே பி மண்ணைக்கவ்வியது கர்நாடகாவில் ,,,,,,, இன்னுமா பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் மோடியைப்பற்றி,,,பி ஜே பி யின் உல் நாட்டுக் கொள்கையில் மாற்றம் இல்லாத வரை எந்த வித மாற்றமும் நிகழப்போவது இல்லை ,,,,,,,,
Rate this:
137 members
0 members
13 members
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201315:00:16 IST Report Abuse
Swaminathan Nath மோடி வரகூடாது என நீங்கள் சொல்ல உரிமை உள்ளது போல் நாடு நன்றாக இருக்க அவர் வரவேண்டும் என சொல்ல இந்தியர்களுக்கு உரிமை உண்டு.,,,,,,
Rate this:
7 members
0 members
78 members
Cancel
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
10-மே-201314:57:08 IST Report Abuse
Swaminathan Nath திறமை உள்ளவர்கள் வருவது சிலருக்கு பிடிக்காது, ஊழல் காங்கிரஸ் ஒழிய வேண்டும்....
Rate this:
5 members
0 members
57 members
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-201313:11:24 IST Report Abuse
Pugazh V கர்நாடக தேர்தலுக்குப் பின், பல்வலி என்று சொல்லி மோடி பத்திரிகையாளர் சந்திப்பைத் தவிர்த்துவிட்டதாக டைம்ஸ் ஆப் இந்தியாவில் போட்டிருக்கிறார்கள். பீகாரிலும் பி ஜே பி மண்ணைக் கவ்வப் போவதை இந்த போஸ்ட்டர்கள் உறுதி செய்கின்றன. சீக்கிரம் நம்ம ஊரிலும் இது போல போஸ்ட்டர் ஒட்டுங்கப்பா. மோடியின் ஆதரவாளர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. 4 துறைமுகங்கள் உள்ள ஒரு மாநிலம், வேற்று நிலங்கள் ஏராளம் இருக்கும் மாநிலம், அதிகம் படிப்பறிவு இல்லாததால் குறைந்த சம்பளத்திற்கு ஆட்கள் கிடைப்பதும் இதே குஜராத் மாநிலத்தில் தான். எனவே குஜராத் முன்னேறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இருந்தும் ஏன் தான் இப்படி தெரியவில்லை. கர்நாடகாவில் இளைஞர்கள் தான் அதிகம் பி ஜே பிக்கு எதிராக வாக்களித்துள்ளார்கள். பப்களிலும், சாலைகளிலும், காதலர் தினம், நண்பர்கள் தினம் போன்ற தினக் கொண்டாட்டங்களை எதிர்த்து, இளைஞர்கள், இளம் பெண்களை அடித்து அவமானப்படுத்தியது பி ஜே பி. அதற்க்கான பரிசு இளைஞர்கள் கொடுத்துவிட்டார்கள். பி ஜே பி மத்தியில் ஆட்சிக்கு வந்தால் அவனவன் கல்யாண நாள், பிறந்த நாளைக்கூட கொண்டாட விடமாட்டார்கள். மாநிலங்கள் அவையில் பலான படம் பார்த்த பி ஜே பி, மக்களவையிலும் செய்யும் அழும்புக்கு அளவே இல்லை. இவர்களை நம்பி மத்திய அரசை ஒப்படைப்பதா என்று இந்திய வாக்காளர்கள் யோசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
Rate this:
163 members
0 members
17 members
Pannadai Pandian - wuxi,சீனா
10-மே-201319:49:59 IST Report Abuse
Pannadai Pandianஅட இரத்தின புரி ப்ளேடு......ஒன்ன நல்லா புரிஞ்சிக்கோ. இளைஞர்கள் என்ன நினைக்கிறார்களோ அதுதான் கண்டிப்பாக பிற்காலத்தில் நிரந்தரமாக ஆகப்போவது. இந்த இளைஞர்கள் ஓரளவுக்கு சுயநலம் இல்லாத நாட்டுப்பற்று கொண்டவர்கள். அவர்கள் சிந்தனையில் பிஜேபி நல்ல கட்சி என்று பட்டு பிஜேபிக்கு வாக்களித்திருப்பார்கலேயானால் அது ஒரு மாற்றத்தை கண்டிப்பாக பாராளுமன்ற தேர்தலில் தரும். குஜராத்தின் வளர்ச்சியை நீங்கள் சொல்லி நாங்கள் கேட்பதை விட இந்திய பொருளாதார அறிஞர்கள், திட்டக்கமிஷன், அந்நிய முதலீட்டு அளவு, உற்பத்தி, கட்டமைப்பு ஆகியவற்றை வைத்தே முடிவு செய்ய வேண்டும். மேலே கூறியவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தப்புரமும் கருணாநிதி மாதிரி திருடி திங்கவில்லை மோடி என்பதால் ஏன் இப்படி கோவம் வருகிறது ??? மற்ற வசவுகளுக்கு என்னால் கருத்து கூற முடியாது....அவைகள் ஒரு கடக்கும் மேகம் போல (passing cloud ). பிஜேபி செய்த தவறுகளுக்கு, உள்பூசல்களுக்கு தண்டனை கொடுத்தாகி விட்டது. ஊழல்வாதிகளும் கோஷ்டி பூசல் செய்பவர்களும் விரட்டப்பட்டுள்ளனர். இனி கர்நாடக பிஜேபி வட இந்திய பிஜேபி மாதிரி ஜொலிக்கும்....
Rate this:
1 members
0 members
6 members
Cancel
sairam - muscat,ஓமன்
10-மே-201312:45:46 IST Report Abuse
sairam இந்த கையாலகாத காங்கரஸ் விட மோடி குறைந்தவர் கிடையாது.
Rate this:
5 members
1 members
81 members
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.