கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்கமுற்பட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்கமுற்பட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவிப்பு

Added : மே 10, 2013 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வள்ளியூர்:கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்கமுற்பட்டால் போராட்டம் நடத்தப்போவதாக அணுஉலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒங்கிணைப்பாளர் உதயகுமார் அறிவித்துள்ளார்.கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுஉலை எதிர்பாளர்கள் கடந்த ஓராண்டிற்கு மேலாக இடிந்தகரையில் பல்வேறு போராட்டங்களை நடத்திவருகின்றனர். மேலும் இதற்கு ஆதரவு தெரிவித்து பூவலகின் நண்பர்கள் என்ற அமைப்லை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவர் கூடங்குளம் அணுமின்நிலையத்தினால் கடற்கரை கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவுதாகவும், அதனால் பேராபத்து ஏற்படும் என்றும் இதனால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர் என்று கூடங்குளம் அணுமின்நிலையத்தை இயக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கூடங்குளம் அணுமின்நிலையத்தினால் பொதுமக்களின் வாழ்வாதாரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது, அதனால் அணுமின்நிலையத்திற்கு தடைவிதிக்கமுடியாது என்று தீர்ப்பளித்தனர். இதனால் அணுமின் நிர்வாகம் அணுமின்நிலையத்தை இயக்குவதற்கு தடை விலகியதால் இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவித்திற்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் தீர்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அணுஉலை எதிர்பாளர்கள் இடிந்தகரையில் கடற்கரை மீனவ கிராமங்களை சேர்ந்த ஊர்கமிட்டியினர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவருகளுடன் அணுஉலை எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டம் நடத்தினர். கூட்டத்தில் கன்னியாகுமரி முதல் தூத்துக்குடி வரை உள்ள கடற்கரை கிராமங்களில் அந்தந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் அந்தந்த ஊர்களில் வரும் 14ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானித்தனர்.இதனையும் மீறி அணுமின்நிர்வாகம் அணுஉலையை ஏற்க்கமுற்பட்டால் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானித்தனர். அணுஉலை எதிர்பாளர்களின் போராட்டத்தினால் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் நிலவிவருகிறது. ஏனென்றால் வரும் 20ம் தேதிக்குள் அணுஉலையை இயக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து அணுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்களின் இந்த அறிவிப்பினால் மீண்டும் அப்பகுதியில் பதற்றம் நிலவிவருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-மே-201302:24:10 IST Report Abuse
தமிழ்வேல் இவருக்கெல்லாம் தேனா பானா செல்லுபடியாகாதா ?
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-201322:24:24 IST Report Abuse
Pugazh V இந்த முக்கியமான ஆனால் சின்ன விஷயத்தைக் கூட கையாளத் தெரியாத தமிழக அரசை எப்படித்தான் மக்கள் சகித்துக் கொள்கிறார்களோ? அ தி மு க காரர்களுக்கே என்னவோ போல இருக்கிறது. ஒரு உதயகுமார் ஜெயலலிதாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டுகிறான். முதல்வரும் முழி பிதுங்கித் தவிக்கிறார். மின்சாரம் போதாமல் தவிக்கும் நிலையில் கூடவா இப்படி அரசு செய்வதறியாமல் திகைத்து திணறி நிற்கிறது என்று வியக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Badri - Chennai,இந்தியா
10-மே-201318:44:09 IST Report Abuse
Srinivasan Badri உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஏற்பதே சரியானதாகும் .மக்களின் அச்சத்தை போக்க தகுந்த பிரசாரம் டிவி மூலம் செய்ய வேண்டும் .
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
10-மே-201308:20:08 IST Report Abuse
Thangaraj மின்சாரமே இன்றி, இருளில் நாங்கள் தவித்தாலும் தவிப்போமே தவிர, அணு உலையால் இன்னும் நாங்கள் சாகத் தயாராக இல்லை என்று, ஜப்பான் பிரதமர் அறிவித்து விட்டார். ஜெர்மனியின் அதிபர் ஆங்கெலா மெர்கல் அவர்கள், 2022 ஆம் ஆண்டுக்குள், ஜெர்மனியில் உள்ள அனைத்து அணு உலைகளையும் மூடப் போவதாக அறிவித்து விட்டார். பெல்ஜியம் நாடும், அணு உலைகளை மூட முடிவு செய்து விட்டது. ஃபிரான்ஸ் நாட்டில், அணு உலைகளை மூடுவது குறித்து, பொது வாக்கெடுப்பு நடக்கப் போகிறது. 1977 க்குப் பின், அமெரிக்கா, புதிதாக ஒரு அணு உலையைக் கூட அமைக்கவில்லை. எனவே, கூடங்குளத்தில் அணு உலை கூடாது என்று, அணு உலை எதிர்ப்பு மக்கள் இயக்கம் நடத்தும் போராட்டம், முழுக்க முழுக்க நியாயமான, தேவையான போராட்டம் ஆகும். மின்வெட்டினால் பாதிக்கப்படுகின்ற மக்கள் மத்தியில், கூடங்குளம் அணு உலை அமைந்தால், மின்சாரம் கிடைக்கும் என்ற, மிகத்தவறான கருத்து பரப்பப்படுகிறது. இந்தியாவில், மொத்தம் 21 அணு உலைக்கூடங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம், இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில், 2.6 விழுக்காட்டுக்கும் குறைவு என்பது, அதிர்ச்சி தரும் உண்மை ஆகும்.
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
10-மே-201308:19:07 IST Report Abuse
Thangaraj உள்ளூர் தேவையை காற்று ஆலை மற்றும் சூரியஒளி மின்சாரம் கலந்த ஒரு சேர்வை மூலம் எளிதாக தீர்த்துவிடலாம். அதிகமாக மின்சாரம் தேவைபடும் நகரங்களுக்கும், தொழில் சாலைகளுக்கும் அனல் மின்நிலையங்கள், நீர் மின்நிலையங்கள் மூலம் தீர்த்து விடலாம். இதன் மூலன் கடந்த 40 ஆண்டுகளாக வெறும் வாய் சஉடாள் விட்டுக்கொண்டு,வெறும் 2.6 சதவீத மின்சாரத்தை மட்டும் கொடுத்து, பல லச்சம் கோடிகளை ஏப்பம் விட்டு கொண்டிருக்கும்,மனித குலதிற்கே ஆபத்தாக அமைந்துள்ள அணு உலைகளை நிரந்தரமாக மூடி விடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
10-மே-201308:17:45 IST Report Abuse
Thangaraj கூடங்குளத்தில் போராடுபவர்கள் படித்த அறிவாளிகள் அல்ல.சாதாராண மீனவ மக்கள் .ஆனால் அவரகள் ஒவ்வொருவரும் அணு உலையால் ஏற்படும் பாதிப்புகளை பற்றி முழுவதுமாக அறிந்துள்ளனர் . நன்மையை விட தீமையே அதிகம் என்பதை உணர்ந்ததால் உறுதியாக போராடுகின்றனர் . படித்த அறிவாளிகள் என்று கூறி கொள்கின்ற நகரத்திலும் ,கல்லூரி மாணவர்கள் இடையேயும் இதை பற்றி விழி புணர்வு இல்லாதது வருத்தமளிக்கிறது .
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
10-மே-201308:16:42 IST Report Abuse
Thangaraj கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என்றால் அதை அமைத்துத் தந்த ரசிய நிறுவனம் விபத்து ஏற்பட்டால் இழப்பீடு தரும் பொறுப்பை ஏன் ஏற்க மறுக்க வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
10-மே-201308:14:21 IST Report Abuse
Thangaraj வேறு எந்த தொழிற்சாலையின் மீதும், மக்கள் ஆபத்து காலங்களில் எப்படி பாதுகாத்து கொள்வது என்பது பொன்ற பயிற்சியை தாருங்கள் என கேட்பதில்லை? காரனம் அந்த தொழிற் சாலைகளின் மீது அவர் களுக்கு பயம் இல்லை? அனால் இங்கு 50000 மக்களுக்கு மேல் எங்களுக்கு முறையான குறைந்த பட்ச பயிற்சியை தாருங்கள் என கேட்டும் தர மறுப்பது ஏன்? ஏதேனும் விபத்து ஏர்பட்டால், எந்த திசையை நோக்கி நகர வேண்டும், என்ன என்ன பொருட்களை எடுத்து செல்ல வேன்டும், என்ன என்ன பொருட்களை எடுத்து செல்ல கூடாது வேன்டும், என்ன வகையான மாத்திரையை சாப்பிட வேன்டும்? என்பது போன்ற குறைந்த பட்ச பயிற்சியை கூட தர மறுப்பது ஏன்?
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
10-மே-201308:14:17 IST Report Abuse
Thangaraj அணு உலையில் விபத்து ஏற்பட்டால் மக்கள் எப்படி தப்பித்துச் செல்லவேண்டும் என்பதற்கான பயிற்சி ஒத்திகையை அணு உலையை ஒட்டிய கிராமங்களில் நடத்தாமல் தொலை தூரத்தில் உள்ள ஒரே ஒரு குட் கிராமத்தில் 50 பேர் முன்னால் ஒப்புக்கு நடத்திவிட்டு ,பயிற்சி கொடுத்தாகிவிட்டது என்று சொல்லும் அணு சக்தி துறையை நீதிமன்றம் நம்புகிறது என்றால், இந்த மன்றத்தை நாம் எப்படி நம்புவது ?...
Rate this:
Share this comment
Cancel
Thangaraj - ,இந்தியா
10-மே-201308:12:20 IST Report Abuse
Thangaraj இப்படி உள்ளூர் மக்களின் ஆதரவு கொஞ்சம் கூட இல்லாமல், இந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் வகையில், 18 மாத காலத்திற்கு மேலாக 144 தடை உத்தரவு பிறபித்து, 5000 போலீஸ் துணையோடு, துப்பாக்கி முனையில், இவ்வளு பெரிய திட்டத்தை எத்தனை நாள் தான் ஒட்ட முடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை