தொடர் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது 152 பவுன் நகை, 7 டூவீலர்கள் பறிமுதல்| Dinamalar

தமிழ்நாடு

தொடர் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது 152 பவுன் நகை, 7 டூவீலர்கள் பறிமுதல்

Added : மே 10, 2013 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 தொடர் திருட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கைது 152 பவுன் நகை, 7 டூவீலர்கள் பறிமுதல்

புதூர்:மதுரையில், தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து, 152 பவுன் நகை மற்றும் 7 டூவீலர்களை பறிமுதல் செய்தனர்.மாவட்டத்தில், சில மாதங்களாக வீட்டின் கதவை உடைத்து திருடுவது, ரோட்டில் செல்லும் பெண்களிடம் வழிப்பறி செய்வது என்பது தொடர் கதையாக இருந்தது. இதைத் தடுக்க தனிப்படை அமைத்து பாலகிருஷ்ணன் எஸ்.பி., உத்தரவிட்டார். வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. மே 8ல், கப்பலூர் நான்கு வழிச்சாலையில், சிலைமான் எஸ்.ஐ., ஜோசப்தர்மராஜ் தலைமையில், போலீசார் செந்தில், கார்த்திக் ஆகியோர், சந்தேகத்தின்பேரில், அனுப்பானடி சூர்யா, 19, கார்த்திக், 19, ஆகியோரை விசாரித்தனர். இவர்கள், ஐராவதநல்லூர் கதிரவன், 23, ரவிக்குமார் 34, மற்றொரு கார்த்திக், 23, அனுப்பானடி அசோக்குமார், சிந்தாமணி திலீபன் ஆகியோருடன் சேர்ந்து, பல ஆண்டுகளாக தொடர் திருட்டில் ஈடுபடுவது தெரிந்தது. இவர்கள் மீது வீட்டின் கதவை உடைத்து திருடியது, பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது என 45 வழக்குகளும், நகரில் 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து, 152 பவுன் நகைகளை மீட்டு, 7 டூவீலர்களை பறிமுதல் செய்தனர். திலீபன் எம்.சி.ஏ., இறுதி ஆண்டும், சூர்யா, கார்த்திக், அசோக்குமார் ஆகியோர் பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.கைதால் தவிர்க்கப்பட்ட கொலைகைதான கார்த்திக்கின் மாமாவை, அதே பகுதியை சேர்ந்த "பனியாரம்' சேகர், சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்தார். இவ்வழக்கில் சில மாதங்களுக்கு முன் அவர் விடுதலையானார். மாமாவை கொலை செய்தவரை பழி வாங்க வேண்டும் என கார்த்திக், தன் சகாக்களுடன் திட்டம் தீட்டினார். நேற்று (மே 9) கொலை செய்ய திட்டமிட்டு, அதற்கான நேரம், இடத்தை தேர்வு செய்திருந்தனர். அதற்குள் அவர்கள் கைது செய்யப்பட்டதால் கொலை தவிர்க்கப்பட்டதாக பாலகிருஷ்ணன் எஸ்.பி., தெரிவித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
annamalai - riyadh  ( Posted via: Dinamalar Android App )
11-மே-201314:30:14 IST Report Abuse
annamalai இவர்களுக்கு தண்டனை கொடுக்காதீர்கள். பிறகு கருணாநிதி் சொல்வார் இவர்கள் தமிழர்கள், மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்து அவர்களை படிக்க விடுங்கள் என்று.
Rate this:
Share this comment
Cancel
LOTUS - CHENNAI,இந்தியா
11-மே-201310:00:44 IST Report Abuse
LOTUS வயதோ 19 லிருந்து 22 க்குள்.....ஆனால் திருட்டு தொழிலோ பல வருடங்களாக ..........இவர்களுக்கு சலுகை மேல் சலுகை .............. கடைசியில் லேப்டாப் வரை......இவர்களுக்கெல்லாம் ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் போன்ற எந்த உரிமையும் கொடுக்க கூடாது...........படிக்கிற வயதில் போதை, தவறான பாதை...........மற்றவர்களுக்கு சுமையாக இவர்களை ஏன் விட்டு வைக்க வேண்டும்...................
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-மே-201323:29:59 IST Report Abuse
தமிழ்வேல் // இவர்கள் மீது வீட்டின் கதவை உடைத்து திருடியது, பெண்களிடம் நகைப்பறிப்பில் ஈடுபட்டது என 45 வழக்குகளும், நகரில் 6 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. // இவ்வளவு வழக்கிற்குப் பிறகும் எப்படி வெளியே விட்டு வைக்கின்றனர் ?
Rate this:
Share this comment
Cancel
Nalam Virumbi - Chennai,இந்தியா
10-மே-201316:59:36 IST Report Abuse
Nalam Virumbi அந்த மாணவர்கள் தொழில் நுட்பத்தில் பட்டம் வாங்கினால் அதைத் தவறாகப் பயன் படுத்தலாம். இனி கிரிமினல் ரிகார்ட் இல்லாதவர்கள்தான் கல்வி கற்கலாம் எனச் சட்டம் இயற்ற வேண்டும் போல் உள்ளது."கல்வி கற்கவும் ஒரு தகுதி வேண்டும்" என முன்னோர்கள் சொன்னது சரியே.
Rate this:
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
10-மே-201311:44:27 IST Report Abuse
Skv எதிர்காலம் எப்படியோ போவட்டும் சுட்டுத்தள்ளுங்க
Rate this:
Share this comment
Cancel
A.Santhanaraj. - nagarcoil,இந்தியா
10-மே-201308:11:27 IST Report Abuse
A.Santhanaraj. போதை கலாசாரம் தான் மாணவர்களின் இந்த சீரழிவுக்கு காரணம் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை