Advertisement
குண்டூசி முதல் "கோச் பிரேம்' வரை ரயில்வே டெண்டரில் பங்கேற்கலாம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

மதுரை:""குண்டூசி முதல் ரயில் "கோச் பிரேம்' வரை, ரயில்வேக்கு தேவையான பொருட்களை தயாரிக்கும் உற்பத்தியாளர்கள், மின்னணு முறை டெண்டரில் பங்கேற்கலாம்,'' என, தெற்கு ரயில்வே உதவி மெட்டீரியல்ஸ் மேலாளர் வீரராகவன் கூறினார்.மதுரை மடீட்சியாவில் நடந்த வாங்குவோர் விற்போர் சந்திப்பு கண்காட்சியில்,"அரசுத் துறைகளில் டெண்டர் கோருவது' குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது:இந்திய ரயில்வேயில் 2008 முதல் "இ டெண்டர்' முறையில் பொருட்கள் வாங்கப்படுகின்றன. குண்டூசி முதல் ரயிலின் "கோச் பிரேம்' வரை, நிறைய பொருட்கள் தேவைப்படுகின்றன. இவற்றை உற்பத்தி செய்பவர்கள், "கிளாஸ் 3' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தகுதி உடையோர் "ஆன்லைன்' மூலம் டெண்டரில் பங்கேற்கலாம்.வெளிப்படை தன்மையான "டெண்டர்' முறையில், பொருட்கள் கொள்முதல் செய்வதால், அனைத்து தகவல்களும் உடனடியாக, பதிவு செய்யப்படும். தெற்கு ரயில்வேயை பொறுத்தவரை, 8000 பொருட்களை வாங்குகிறோம். அவற்றின் விபரங்கள் இணையதளத்தில் இருக்கின்றன. அதைப் பார்த்து, உற்பத்தியாளர்கள் "டெண்டரை' பதிவு செய்யலாம், என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ponnurangan s - bangalore  ( Posted via: Dinamalar Android App )
12-மே-201306:03:11 IST Report Abuse
ponnurangan s நம்ம நாட்டு நலன கருத்துல வச்சுட்டு டெண்டர வாங்குங்க மக்களே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
ராமசாமி TNEB - உடுமலைப்பேட்டை  ( Posted via: Dinamalar Android App )
10-மே-201308:41:29 IST Report Abuse
ராமசாமி TNEB நல்ல பொருள்களா குடுங்க மக்கா
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.