காமன்வெல்த் மாநாடு: கருணாநிதி வேண்டுகோள் | காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கருணாநிதி வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க கருணாநிதி வேண்டுகோள்

Updated : மே 10, 2013 | Added : மே 10, 2013 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாது என்ற கருத்தை தி.மு.க.,வும் டெசோ அமைப்பும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல கட்சி தலைவர்களும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்களும் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது எனவும், இதற்கு இந்திய அரசு முயற்சிகளை எடுக்க வேண்டுமென்றும் தொடர்ந்து கேட்டுக்கொண்டுள்ளனர். தமிழக மக்கள் மற்றும் உலக தமிழர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்ற அறிவிப்பினை உடனடியாக வெளியிட வேண்டும். காமன்வெல்த் மாநாட்டை இலங்கையிலிருந்து மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
MUTHUKUMAR S - CHENNAI,இந்தியா
10-மே-201321:45:15 IST Report Abuse
MUTHUKUMAR S காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெற்றால், அதன் காரணமாகவே அடுத்த இரண்டாண்டுகளுக்கு காமன்வெல்த் அமைப்பின் அவைத் தலைவராக ராஜபக்சே இருப்பார் என்றும் அதனால் 54 நாடுகளைக் கொண்ட அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவரை நீதி விசாரணைக்கு உட்படுத்துவது பிரச்சினையாக ஆகி விடக்கூடுமென்றும் வலிமையான கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா நட்பு நாடு என்று கூறிக்கொண்டு, அதிலே கலந்து கொள்ளுமேயானால், அங்கே நடைபெற்ற இனப் படுகொலைகளை இந்தியா ஆதரித்தது போலாகி விடும். தமிழக மக்களின் மற்றும் உலகத் தமிழர்களின் இந்த வேண்டுகோளையாவது இந்தியா ஏற்றுக்கொண்டு, இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என்ற அறிவிப்பினை உடனடியாகச் செய்வதோடு காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறாத வகையில் மற்ற உறுப்பினர் நாடுகளின் ஆதரவையும் திரட்டிடும் முயற்சியையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
10-மே-201317:15:27 IST Report Abuse
Mohan Ramachandran இனிமேல் இவர் சொல்வதை யார் கேட்பார்கள் டெல்லியில். COMEDY பீஸ்
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
10-மே-201314:34:12 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி கொஞ்சம் பொறுமையா இருங்க... காமன் வெல்த் மாநாட்டுக்கு இன்னும் நிறைய கால அவகாசம் இருக்கு. ஒருவேளை நீங்கள் மீண்டும் காங்கிரஸ் கூட்டணிக்கு திரும்பிவிட்டால், அன்றைக்கு காங்கிரஸ் கட்சிக்கு நிர்பந்தம் கொடுக்க வேறு புதிய பிரச்சனை தேட வேண்டி இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை