E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
காவிரி விவகாரம்: தற்காலிக கண்காணிப்புக்குழு அமைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மே
2013
14:21
பதிவு செய்த நாள்
மே 10,2013 14:14

புதுடில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம்கோர்ட், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, தற்காலிக கண்காணிப்புக்குழுவை அமைத்து காவிரி நடுவர் மன்றக்குழு இறுதி தீர்ப்பை செயல்படுத்த சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில், கர்நாடகா மற்றும் தமிழக அரசுகளுக்கு இடையே, பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது. கடந்த, 2007ல், ஒவ்வொரு மாநிலத்துக்கும், காவிரியிலிருந்து, எவ்வளவு நீர் திறந்து விடப்பட வேண்டும் என்பது பற்றி, காவிரி நடுவர் மன்றம், இறுதித் தீர்ப்பு அளித்தது.

காலம் கடத்தியது : இந்த தீர்ப்பை, அரசிதழில் வெளியிடாமல், மத்திய அரசு காலம் கடத்தியது. தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, "காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பை, உடனடியாக அரசிதழில் வெளியிட வேண்டும்' என, மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.இதையடுத்து, நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு, சமீபத்தில் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதன்பின், தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், தாக்கல் செய்யப்பட்ட மனு,காவிரி நடுவர் மன்றம் இறுதித் தீர்ப்பை அளித்த போது, அந்தத் தீர்ப்பை அமல்படுத்த, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்திருந்தது.

விவசாய பணிகள் : தமிழகத்தில், வரும், ஜூன், 1 முதல், விவசாய பணிகள் துவங்கவுள்ளன. எனவே, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைக்கும்படி, மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, தமிழக அரசின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, "காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை அமைக்கும் பணிகள், துவங்கி விட்டன. கர்நாடகாவில், சட்டசபை தேர்தல் பணிகள் நடப்பதால், இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன' என, தெரிவித்திருந்தது.இந்நிலையில், தமிழக அரசு சார்பில், சுப்ரீம் கோர்ட்டில், 6ம் தேதி , புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கூறப்பட்டுள்ளதாவது: கர்நாடகாவில், சட்டசபை தேர்தல் பணிகள் முடிந்து விட்டன. தமிழகத்தில் விவசாய பணிகள் துவங்கவுள்ளதை அடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவற்றை அமைக்கும்படி, மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, தமிழக அரசின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீதிபதிகள், ஆர்.எம்.லோத்தா, சரத் ஏ.போப்தே ஆகியோர் அடங்கிய, "பெஞ்ச்' முன், தமிழக அரசின் மனு, 8ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டி ஆகியவை, எப்போது அமைக்கப்படும் என்பது குறித்து, மத்திய அரசு, வரும், 10ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை, வரும், 10ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

சிறிது காலம் ஆகும்: இந்த வழக்கு இன்று மீண்டும், சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சிறிது காலம் ஆகும். அதுவரை தற்காலிக குழு அமைக்கலாம் என கூறினார்.

தற்காலிக கண்காணிப்புக்குழு: இதனையடுத்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை, தற்காலிக கண்காணிப்புக்குழுவை சுப்ரீம் கோர்ட் அமைத்துள்ளது. மேலும், இந்த தற்காலிக கண்காணிப்புக் குழுவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் தலைமைச்செயலாளர்கள் இடம்பெறுவார்கள். கண்காணிப்புக்குழுவுக்கு மத்திய நீர்வளத்துறை செயலாளர் தலைமை ஏற்பார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை தற்காலிக கண்காணிப்புக்குழு செயல்படும் வாரியம் அமைக்கப்படும் வரை காவிரியில் நீர் திறப்பது பற்றி தற்காலிக குழு முடிவு செய்யும். அதன் முடிவுகளில் மாநிலங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் சுப்ரீம் கோர்ட்டைஅணுகலாம் என கூறியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karikalan - Manapakkam, CHENNAI-125.,இந்தியா
11-மே-201307:11:10 IST Report Abuse
Karikalan அடுத்து இந்த தற்காலிக குழு விரைவில் கூட்ட படவேண்டும் என்று அடுத்த உச்சநீதி மன்ற ஆணைக்கு மனு செய்ய வேண்டும்.
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-மே-201305:36:16 IST Report Abuse
villupuram jeevithan தற்காலிக குழு முடிவின் மீது ஆட்சேபனை இருந்தால் சுப்ரீம் கோர்ட்டைஅணுகலாம் என்பது தான் உதைக்குது. மறுபடியும் கோர்ட்டா? அதாவது மறுபடியும் முதலிலிருந்து?
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
sundararaman - chennai,இந்தியா
10-மே-201322:21:25 IST Report Abuse
sundararaman ஜெயலலிதாவின் விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி தமிழையும் தமிழக நலனையும் சுயலாபத்திற்காக இத்தாலிய சுரண்டல் கூட்டங்களின் காலடியில் அடகு வைத்த கூட்டமும் அவற்றிற்கு பல்லாண்டு பாடிய கூட்டமும் செய்யத்தவறியதை இப்போது ஜெயலலிதா செய்திருப்பது தமிழர்களின் எதிர்காலம் வழமையாகவே உள்ளது என்பதையே காட்டுகிறது
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-201322:15:30 IST Report Abuse
Pugazh V அரசிதழில் வெளியிடப்பட்டதும் , அ தி மு க வினர் லட்டு கொடுத்து, பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். காவிரி பிரச்னை தீர்ந்தது என்று நினைத்தேன். இப்போ என்னடான்னா, தற்காலிகக் குழு அமைத்து, அது பரிந்துரை செய்து, அதில் ஆட்சேபனை இருந்தால் சுப்ரீம் கோர்ட்டில் மனு கொடுக்கலாமாம். அப்போ, அரசு கெஜட்டில் வெளிவந்ததால் என்னதான் நன்மை? அதுவம் ஆர்ப்பாட்டமாக ஏதோ பெரிய சாதனை போலக் கொண்டாடும் அளவிற்கு?
Rate this:
14 members
0 members
5 members
Share this comment
Cancel
maravan - dublin,அயர்லாந்து
10-மே-201321:39:24 IST Report Abuse
maravan தமிழர்களை பற்றி மத்திய அரசாங்கம் எந்த கவலையும் படுவதில்லை..தமிழர்கள் இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்கள் ...
Rate this:
0 members
1 members
131 members
Share this comment
Cancel
Rajasekar - New Delhi,இந்தியா
10-மே-201318:24:43 IST Report Abuse
Rajasekar தமிழகத்துக்கு எந்தவித உதவியும் செய்யாமல் இருந்ததால் கர்நாடகாவில் காங்கிரஸ் வந்துவிட்டது....... வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு ஒரு தொகுதி கூட கொடுக்காமல் விரட்ட வேண்டும்.... தமிழக கட்சிகளும் நாடாளுமன்றத்திற்கும் புள்ளபூச்சிகளை தேர்வுசெய்யாமல் வாதத்திறமை வாய்ந்த உறுப்பினர்களை கொண்டு சென்று மக்கள் பிரச்சனைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தால் தேர்தலில் திறமையானவர்களை தேர்ந்தெடுக்க முடியும். வெறும் கட்சிசெல்வாக்கை மட்டும் திறமையாக கொண்டிருப்பதால் எந்தபயனும் இல்லை. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை தவிர்த்து எந்த ஒரு தகுதியானவரையும் தேர்ந்தெடுக்கலாம்.........
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
nandha - thiruvai,இந்தியா
10-மே-201316:37:49 IST Report Abuse
nandha ஒரு தலைமுறையா அனுகிட்டுதான் இருக்கு .சரியாய் எந்த முடிவும் வல்லை . ஒவ்வொரு தடவையும் தீர்ப்பு வருது தண்ணீர் வரமாடேங்குது .
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
S.Govindarajan. - chennai ,இந்தியா
10-மே-201316:30:16 IST Report Abuse
S.Govindarajan. இப்போது கர்நாடகாவில் அமையும் காங்கிரஸ் அரசு மட்டும் தண்ணீரைத் திறந்து விடப் போகிறதாக்கும். எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
10-மே-201316:26:12 IST Report Abuse
K Sanckar மத்திய அரசு வேண்டுமென்றே இதை தாமத படுத்துகிறது. இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி வேறு வந்து விட்டதா? இனி மத்திய அரசு வேண்டுமென்றே தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-மே-201315:17:41 IST Report Abuse
Srinivasan Kannaiya முதலில் பாஜக இருந்தது ஏதோ சாதகமான் முடிவு வரும் என எதிபார்த்திருக்கலாம். ஆனால் இப்பொழுது காங்கிரஸ் ஆட்சியாச்சே இனி இழ்த்தடிப்புதான்...
Rate this:
2 members
0 members
5 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.