E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மே
2013
17:39
பதிவு செய்த நாள்
மே 10,2013 17:26

பெங்களூரு: கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். பெங்களூருவில் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் சித்தராமையா முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

கர்நாடகாவில், கடந்த, 5ம் தேதி, சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுக்கள், நேற்று முன் தினம் எண்ணப்பட்டன. தேர்தலுக்கு முந்தைய மற்றும் ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை, உண்மை என, நிரூபிக்கும் வகையில், தேர்தல் நடந்த, 223 தொகுதிகளில், 121 தொகுதிகளில், காங்கிரஸ் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடித்துள்ளது.

கார்கே முதலிடம் : ஏழு ஆண்டுகளுக்குப் பின், கர்நாடகாவில் காங்., ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அந்தக் கட்சியினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்தாலும், அடுத்த முதல்வர் யார் என்ற பரபரப்பும் கிளம்பியுள்ளது. அதற்கேற்ற வகையில், மாநில காங்., தலைவர்கள் இடையே, முதல்வர் பதவிக்கான போட்டி கடுமையாக உள்ளது.

முதல்வர் பதவிக்கான போட்டியில், இரண்டாவது இடத்தில் இருந்தவர் சித்தராமையா. கர்நாடக காங்கிரசின் இன்றைய முகம் இவரே. "முதல்வராக வரலாம்' என, முதலில் எதிர்பார்க்கப்பட்ட, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், இந்த தேர்தலில் தோற்று விட்டதால், தனக்கே முதல்வர் பதவி என்ற நம்பிக்கையுடன் இருந்தார் சித்தராமையா.

குருபா இனம் : பழைய மைசூரில், 7 சதவீத ஓட்டு வங்கியை கொண்டிருக்கும், குருபா இனத்தைச் சேர்ந்தவர். ஆனாலும், இவர் ஆரம்பம் முதல் காங்கிரசில் இருக்கவில்லை. ஜனதா கட்சி, ஜனதா தளம், தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளில் இருந்து விட்டு, 2006ல், காங்கிரசுக்கு வந்தவர். கடந்த 1996,2004ம் ஆண்டுகளில் கர்நாடக மாநில துணை முதல்வராகவும் சித்தராமையா இருந்துள்ளார். கடந்த பா.ஜ., ஆட்சியின் போதும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் சித்தராமையா இருந்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் சட்டசபை கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் கூட்டம், இன்று பெங்களூருவில் நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வான, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்று, சட்டசபை கட்சித் தலைவரை தேர்வு செய்தனர்.முதல்வராக யாரை தேர்வு செய்யலாம் என்பது குறித்து கலந்து ஆலோசிக்க, கட்சியின் மேலிடப் பார்வையாளர்களாக, மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உட்பட, நான்கு பேர் இன்று பெங்களூரு வந்தனர்.

காங்கிரஸ் மேலிடம் எப்போதும், இரண்டு விதங்களில் முதல்வரை தேர்வு செய்யும். ஒன்று, முதல்வர் யார் என்பதை மேலிடமே முடிவு செய்து, அந்தப் பெயரை எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் முன்மொழிந்து ஒப்புதல் பெறும்.இரண்டாவதாக, ஒவ்வொரு எம்.எல்.ஏ.,க்களையும் தனித்தனியாக அழைத்துப் பேசி, அவர்கள் யாரை தலைவராக தேர்வு செய்ய விரும்புகின்றனர் என்பதை கண்டறிந்து, அதன் அடிப்படையில் முடிவு எடுக்கும்.

இன்று மதியம் காங்கிரஸ் கட்சி தலைவர் சிவகுமார் என்பவர் கூறுகையில், கர்நாடக முதல்வர், ரகசிய ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறினார்.

இதனையடுத்து இன்று எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் நடந்த ரகசிய ஓட்டெடுப்பில் கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டார். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவரான சித்தராமையா, தெற்கு கர்நாடகாவில் உள்ள வரூணா தொகுதியிலிருந்து 5 முறை எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டவர். ரகசிய ஓட்டெடுப்பில் சித்தராமையாவுக்கு ஆதரவாக 80 ஓட்டுக்களும், கார்கேவுக்கு ஆதரவாக 40 ஓட்டுக்களும் கிடைத்தன.கர்நாடக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தராமையா திங்களன்று முதல்வராக பதவியேற்க உள்ளார்.



தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (36)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
11-மே-201315:45:56 IST Report Abuse
K.Balasubramanian சித்த ராமையா செல்வாக்கு நன்றாக தெரிகிறது .அவரின் ஆட்சி அனைவர்க்கும் ( அண்டை மாநிலங்கள் உட்பட ) நலன் பயக்கட்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மே-201313:20:11 IST Report Abuse
Nallavan Nallavan பாஜக எம்.எல்.ஏ. - க்கள் தங்களது செல்போனில் பார்த்த "மேட்டர்" படத்தை இனி ப்ளூடூத் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. க்களுக்கு டிரான்ஸ்பர் செய்து விடலாம் .... அவர்களுக்கும் பொழுது போகும் .....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Senthilkumar K.p - gobi,இந்தியா
11-மே-201310:03:06 IST Report Abuse
Senthilkumar K.p ராகுலின் புதிய அத்தியாயம் நல்ல தொடக்கம் .சிறப்பான தேர்வு ,அருமையான தேர்வுமுறை, வளர்ச்சிப்பாதையில் கர்நாடகா,காவேரி பிரச்சினை ஒரு தீர்வு ஏற்ப்பட்டு நமது மாநிலத்தோடு சுமூகமான நட்பு தொடர வாழ்த்துக்கள்
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel
11-மே-201306:20:48 IST Report Abuse
அறிவாலயம் c / o போயஸ் எடியூரப்பா கட்சி வாக்குகளோடு பாஜக வாக்குக்களை சேர்த்தல் பாஜக குறைந்தது 108 இடங்களில் வெற்றி பெற்று சுயேச்சை ஆதரவுடன் ஆட்சி அமைத்திருக்கும். ஆகமொத்தம் இது காங்கிரசின் வெற்றியுமல்ல.முக்கியமாக ராகுலின் வெற்றியல்ல. மத்தியில் எப்போது கர்நாடக ஆளும் கட்சிக்கு எதிரானவர்களே வென்றுள்ளனர். சித்தராமையா அடிப்படையில் ஒரு கட்சிமாறி. இவர் என்று வேண்டுமானாலும் கட்சியை உடைக்கவோ , மாறவோ தயங்கமாட்டார் அவர் ஒரு அரசியல் புரோக்கரே இந்த வெற்றியில் காங்கிரஸ் கொண்டாட ஏதுமில்லை
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
11-மே-201304:42:05 IST Report Abuse
Skv சித்தம் நல்லா இருந்தா தமிழகத்துக்கு காவிரிய ஷேர் பண்ணுங்க சாமி
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Skv - Bangalore,இந்தியா
11-மே-201304:40:41 IST Report Abuse
Skv மூஞ்சிய பார்த்தால் சினிமாலே வரும் வில்லன் போலவே இருக்கே
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
11-மே-201300:07:52 IST Report Abuse
S.RAJA தமிழகம் -கர்நாடக- ஆந்தி்ரா -கேரளா- இந்த நான்கு மாநிலங்களிலும்/ ஒவ்வொரு கட்சியுமே மாறி மாறிதான் வருது /ராட்டினம் மாதி்ரி. ஆனா தமிழ் நாட்டுல மட்டும் காங்கிரசு நல்ல வேளை ஒழிஞ்சுது
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-மே-201322:01:51 IST Report Abuse
Pugazh V மோடி மாதிரியே அவரது தமிழக ரசிகர் கூட்டத்துக்கும் பல் வலி. பி ஜே பி மோசமான நிலையில் இருக்கிறது, ஒரு தேசிய பொதுத் தேர்தலை சந்திக்கும் அளவிற்கு கட்சியில் வளர்ச்சியும் இல்லை. ஒரு தேர்தலில் கட்சியை தலைமை வகித்து போட்டியிட வைக்கக்கூடிய தலைவரும் பி ஜே பி யில் இல்லை என்பது தெளிவு. 3, 4 நாட்கள் ஆட்டம் போட்டாலும் கடைசியில் காங். மேலிடத்திற்குக் கட்டுப்படும் எம் எல் ஏக்கள், கட்சியின் பலம் தான்.
Rate this:
19 members
0 members
19 members
Share this comment
Balachandran Subramaniyan - chennai,இந்தியா
11-மே-201305:52:02 IST Report Abuse
Balachandran Subramaniyanதிரு சித்தராமையா அவர்கள் பல கட்சிகளிலும் இருந்து பல தண்ணி குடித்த பெருமகன். காங்கிரசில் சேர்ந்து ஆறு வருடம் ஆகிறது. அவருக்கு முதல்வர் பதவி. எல்லாம் குரு பார்வை தான். காங்கிரஸ் கட்சியில் அம்பது வருடமாக இருப்பவன் எல்லாம் வாயில் விரலை வைத்து சப்புவது தவிர வேறு வழியில்லை. இன்னும் ஒரு வருடத்துக்குள் அதிருப்தி வெடிக்கும். பாவம் காங்கிரசும், கர்நாடக மக்களும். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய கர்நாடக பாஜக ஆட்சியை மக்கள் தூக்கி எறிந்தனர். அதே கதி தான் பெரிய ஊழல் கட்சியான காங்கிரசுக்கும் வரும் லோக்சபா தேர்தலில் ஏற்படும்....
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
11-மே-201313:16:43 IST Report Abuse
Nallavan Nallavanகாங்கிரசில் உள்ளது வளர்ச்சி அல்ல ..... வீக்கம் .... ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி (கர்நாடகாவில் வெற்றி) என்பதாலேயே மத்திய ஆட்சி கையில் மாங்கனி போல வந்து விழுந்து விடாது ......கோவைக்காரருக்கு இது புரியாமல் போனது ஏனோ...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Mahendran Puru - Madurai,இந்தியா
10-மே-201321:34:59 IST Report Abuse
Mahendran Puru சித்தராமையாவின் சித்தம் ஒரு வழியாக பூர்த்தியாகி விட்டது. மேலும் நல்ல தேர்வு.
Rate this:
1 members
0 members
6 members
Share this comment
Cancel
Senthilkumar K.p - gobi,இந்தியா
10-மே-201321:20:46 IST Report Abuse
Senthilkumar K.p காங்-இல் யாரும் முதல்வாராகலாம் என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.சித்து பேரை காப்பது ஐயா
Rate this:
0 members
0 members
7 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.