Advertisement
அமைச்சர் பதவியிலிருந்து பன்சால்-அஸ்வினி ராஜினாமா
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

10 மே
2013
21:43
பதிவு செய்த நாள்
மே 10,2013 18:34

புதுடில்லி: ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து, அமைச்சர் பதவியிலிருந்து பவன்குமார் பன்சால் ,அஸ்வினி குமார் ஆகியோர் ராஜினாமா செய்தனர். மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சாலின் உறவினரான விஜய்சிங்லா, ரயில்வே வாரிய உறுப்பினர், மகேஷ்குமாரிடம், முக்கிய பொறுப்பை பெற்றுத் தருவதாகக் கூறி, ரூ.90 லட்சம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. அதனால், பவன்குமார் பன்சாலை, பதவி நீக்கம் செய்ய வேண்டும் என, எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பவன்குமார் பன்சால் பங்கேற்காமல் புறக்கணித்தார். அவருக்கு, உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில், "மத்திய அமைச்சரவை, விரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும், ரயில்வே அமைச்சராக உள்ள பவன்குமார் பன்சால், மாற்றப்பட்டு, அவருக்கு வேறு துறை ஒதுக்கீடு செய்யப்படலாம்' என, டில்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதேபோல், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சி.பி.ஐ., அறிக்கையில் திருத்தம் செய்த, சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் விரைவில் மாற்றப்படுவார். இருவர் வகித்த முக்கிய பதவிகளுக்கும் யாரை நியமிக்கலாம் என, தற்போது காங்., மேலிடம் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் கூறப்பட்டது.


இதனிடையே, இவ்விவகாரம் இன்று சூடுபிடித்தது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங்கை இன்று மாலை சந்தித்து பேசினார். இதைத் தொடர்ந்து பவன்குமார் பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்தார்.



அஸ்வனி ராஜினாமா: பவன் குமார் பன்சாலின் ராஜினாமாவை அடுத்து, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில், சி.பி.ஐ.,யின் அறிக்கையை திருத்தியதாக, சுப்ரீம் கோர்ட்டிடம் குட்டு வாங்கியுள்ள மத்திய சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரும் பதவி விலகினார்.


கார்கேவுக்கு வாய்ப்பு? இதனிடையே, கர்நாடக மாநில முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டிருப்பதால், அதிருப்தியில் உள்ள அம்மாநிலத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, ரயில்வே அமைச்சர் பதவி வழங்கப்படாலம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.



4வது அமைச்சர்: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் இரண்டாவது பதவிக்காலத்தில், தனது பதவியை ராஜினாமா செய்யும் 4வது ரயில்வே அமைச்சர் பன்சால் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, ரயில்வே அமைச்சர் பதவியிலிருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர் ஆனவுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து, திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திவேதி, கடந்த 2012ல் ரயில்வே பட்ஜெட்டில் கட்டணங்களை உயர்த்தியதால், கட்சித்தலைமையின் கோபத்துக்கு ஆளாகி பதவியைத் துறந்தார். தொடர்ந்து, ரயில்வே அமைச்சராக பதவியேற்ற முகுல்ராய், திரிணமுல் காங்கிரஸ், மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றதால், தனது பதவியை ராஜினாமா செய்தார். தற்போது 4வதாக பன்சால் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரதமரிடம் ராஜினாமா கடிதம்: தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள பன்சால்-அஸ்வினி ஆகியோர் பிரதமர் இல்லத்திற்கு சென்று தங்களது ராஜினாமா கடிதங்களை நேரில் அளித்தனர்.






Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸநாதனன், குமரி மாவட்டம். - நாகர் கோவில்,இந்தியா
10-மே-201323:40:54 IST Report Abuse
ஸநாதனன், குமரி மாவட்டம். இதை முதலிலேயே செய்து பாராளுமன்றத்தின் முடக்கத்தை தடுக்க அரசு ஏன் முயல வில்லை, இது தான் காங்கிரஸ் ஸ்டைல்
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
10-மே-201323:00:12 IST Report Abuse
நீலகண்டன் இருக்கும் சொற்ப மாதத்தில் கூடியவரையில் எத்தனை பேர் வேண்டுமானாலும் ரயில்வே துறை அமைச்சர் ஆகலாம். ஆனால் ஊழல் என்ற ஓட்டையை அடைத்தால் ஒழிய ஒன்றும் நடவாது. எப்போதும் போல் அமைதி காத்து இப்போது நடவடிக்கை எடுத்தபின் நடந்த தவறுக்கு மத்திய அரசும் பொறுப்பு என்று ஊர்சிதம் ஆகிறது
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
10-மே-201322:48:38 IST Report Abuse
Mohan Ramachandran ரயில் அமைச்சர் தடம் புரண்டார், சட்ட அமைச்சர் கட்டம் கட்ட பட்டார். வாழ்க மக்கள் ஆட்சி
Rate this:
0 members
0 members
12 members
Share this comment
Cancel
Rajamani - Chennai,இந்தியா
10-மே-201322:23:34 IST Report Abuse
Rajamani இதை முன்பே செய்திருந்தால் பாராளுமன்றம் ஒழுங்காக நடந்திருக்கும். காங்கிரஸ்காரர்களுக்கு வெட்கம் மானம் கிடையாது.
Rate this:
0 members
0 members
20 members
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
10-மே-201321:50:24 IST Report Abuse
sundaram ஹலோ, பவன்குமார் பன்சால் மற்றும் அஸ்வினி குமார், நீங்க ரெண்டு பேரும் கொடுத்து வச்சவங்க. முடிஞ்சவரைக்கும் சுருட்டிக்கிறீங்க. ஏனுங்க இம்புட்டு சுருட்டலாமா, இது அநியாயம் இல்லையான்னு கேட்ட உடனே கால் கடுதாசி கிழிச்சு கொடுத்துட்டு நடையைக் கட்டிடுறீங்க. ஆனா என் நிலைமையை கொஞ்சம் நினைச்சு பாருங்க. சுருட்டினாலும் சுருட்டல் என்கிட்டே வராம மனமோகினிக்கு போயிடுது. சரி போ, நாமளும் கால் கடுதாசி கிழிச்சு கொடுத்துட்டு நடையை கட்டலாம்ன்னு நெனைச்சா, அந்த கால் கடுதாசி பேப்பருக்கும் நான் மனமோகினிக்கிட்ட போயி தலையை சொரிய வேண்டியிருக்கு. ச்சே என்ன பொழப்பு இது.
Rate this:
0 members
0 members
11 members
Share this comment
Cancel
007 - doha,கத்தார்
10-மே-201321:30:10 IST Report Abuse
007 ஒரு களை அவுட்..
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
GUNAVENDHAN - RAMAPURAM , CHENNAI,இந்தியா
10-மே-201321:03:54 IST Report Abuse
GUNAVENDHAN அப்பாடா , ஒருவழியாய் இடத்தை காலி செய்ய ஒப்புக்கொண்டாரே பெரிய மனிதர்கள் போர்வையில் உள்ள சின்ன மனிதர்கள் . ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிக்கொண்டதால் இவர் ராஜினமா செய்வதால் காங்கிரஸ் தூய்மையடைந்து விடாது . இன்னமும் எவ்வளவோ அக்கப்போர்கள் நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வர வேண்டியுள்ளது, வரிசையாக வரும் . ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பார்களே அதுபோன்று இப்போது கர்நாடகாவில் காங்கிரசுக்கு கொண்டாட்டமாக உள்ளது . வரிசையாக ஊழல் திமிங்கிலங்கள் மாட்டிக்கொண்டிருக்கும் நிலைமையிலும் காங்கிரசுக்கும் ஒட்டு போட மக்கள் இருக்கின்றார்களே என்பதை நினைத்தால் தான் வேதனையாக இருக்கின்றது .
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
Cancel
cku - tpr,இந்தியா
10-மே-201320:22:22 IST Report Abuse
cku காங் ஆட்சி இன்னும் ஒரு வருடம் அதற்கு பேரம் 2 கோடி . அப்போ இந்த ஒரு வருடத்தில் எவ்வளவு சம்பதிக்க / குறுக்கு வழியில் / கொள்ளை அடிக்க / திட்டமிட்டு இருப்பார்கள் என எண்ணி பாருங்கள் ...
Rate this:
0 members
0 members
10 members
Share this comment
Cancel
Ravi Ramanujam - thanjavur,இந்தியா
10-மே-201319:30:30 IST Report Abuse
Ravi Ramanujam அதிகாரத்தில் இருந்து பிடித்து தள்ளும் வரை பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தது வெட்கத்திலும் வெட்கம்.
Rate this:
0 members
0 members
8 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
10-மே-201318:56:28 IST Report Abuse
Srinivasan Kannaiya 1965 க்கு முன்பாக அரசியல்வாதிகள் மீது எதாவது புகார் வந்தால், உண்மையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை, அந்த அரசியல்வாதி தார்மீக பொறுப்பேற்று பதவியை விட்டு விலகிவிடுவார். காரணம் அவர்கள் பரம்பரை பணக்காரர்களாக இருப்பார்கள். ஆனால் தற்சமயம் ஊழலே செய்து நிரூபணமும் ஆகியிருந்தாலும் பதவி விட்டு விலக மறுக்கிறார்கள்..காரணம் என் ?
Rate this:
0 members
0 members
15 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.