Advertisement
திருமணம் நின்றுவிடுமோ என்ற பயம் ; கேரள காதல் ஜோடி தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 மே
2013
22:00

கொடைக்கானல் : கேரள காதல் ஜோடி, கொடைக்கானலில் தற்கொலை செய்து கொண்டனர்.கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம், மணிவைக்கிரகத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராஜ் 28. பிளாங்காட்டைச் சேர்ந்தவர் நீத்தல் 20. இருவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயமானது. துபாயில் வேலை பார்த்த ஸ்ரீராஜ், அடிக்கடி போனில் பேசி நீத்தலுடன் காதலை வளர்த்து கொண்டார்.


பயம்: சமீபத்தில் திருமணத்திற்காக ஸ்ரீராஜ் சொந்த ஊர் திரும்பினார். நீத்தலின் குடும்பம் குறித்து, ஸ்ரீராஜ் வீட்டாரிடம் யாரோ தவறாக கூறியுள்ளனர். இதனால் திருமணம் நின்று போய்விடுமோ என ஸ்ரீராஜ், நீத்தல் பயந்தனர்.


தற்கொலை: யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு புறப்பட்ட இருவரும் பெங்களூரு, ஊட்டி சென்றுள்ளனர். மே 9 கொடைக்கானல் வந்தனர். கோடை ஸ்டார் லாட்ஜில் ரூம் எடுத்து தங்கினர்.


நேற்று காலை 10.30 மணிக்கு சந்தேகப்பட்டு, லாட்ஜ் ஊழியர்கள் கதவை உடைத்தனர். பாத்ரூமில் இருவரும் கட்டிப்பிடித்தவாறு தூக்கில் தொங்கியவாறு தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரிய வந்தது. நீத்தல் தனது தந்தைக்கு கடிதம் ஒன்று எழுதியிருந்தார். அதில் தனது தங்கை, தம்பியை நன்றாக படிக்க வைக்கவும் என குறிப்பிட்டிருந்தார்.


கொடைக்கானல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.