ஒட்டன்சத்திரத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஒட்டன்சத்திரத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்

Added : மே 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஒட்டன்சத்திரத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பறிமுதல்

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே ரூபாய்10 லட்சம் மதிப்பிலான 8 ஆயிரம் லிட்டர் எரிசாரயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், சிக்கமநாயக்கன்பட்டியில் எரிசாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
டி.எஸ்.பி.,க்கள் ஜானகிராம், சுருளிராஜன் தலைமையிலான போலீசார், இங்குள்ள பொன்னுச்சாமியின் தோட்டத்து சாலையில் சோதனை நடத்தினர். எரிசாராயம் கேன்களிள் பதுக்கி வைவக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
190 கேன்கள்(தலா 35 லிட்டர்) மற்றும் 43 சாக்கு பைகளில்(தலா ஒரு லிட்டர் பாக்கெட்கள் 40) மறைந்து வைக்கப்பட்டிருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் என போலீசார் கணக்கிட்டுள்ளனர். தலைமறைவு: தலைமறைவான பொன்னுச்சாமியை கைது செய்ய, இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து எஸ்.பி., ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை