அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 3,000 பேருக்கு "ஸ்பெஷல்' மட்டன் பிரியாணி: கல்வித்துறை அசத்தல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சட்டசபையில், நேற்று, பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. இதையொட்டி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட, 3,000 பேருக்கு, "ஸ்பெஷல்' மட்டன் பிரியாணி விருந்து, பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டது.ஒரு மாதத்திற்கும் மேலாக, சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும், எந்த துறை மீது விவாதம் நடக்கிறதோ, அந்த துறை சார்பில், மட்டன் அல்லது சிக்கன் பிரியாணி, வழங்கப்படுகிறது. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், நிருபர்கள், சட்டசபை ஊழியர்கள் உட்பட 1,000 பேருக்கு, இந்த பிரியாணி விருந்து, தினமும் நடந்து வருகிறது. பிரியாணிக்கு பெயர் பெற்ற ஓட்டல்களில் இருந்து, தினமும், "ஆர்டர்' செய்து வர வழைக்கப்படுகின்றன.

கல்வித்துறை அசத்தல்; நேற்று, பள்ளி கல்வித்துறையின் சுற்று வந்தது. பள்ளி கல்வித்துறை, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை, தமிழ் வளர்ச்சித் துறை என, மூன்று துறைகள் மானியக் கோரிக்கை மீதான விவாதம், நேற்று நடந்தது. மூன்று துறைகளுக்கும், வைகைச்செல்வன் தான், அமைச்சர். மூன்று துறைகளை, கையில் வைத்துள்ள அமைச்சர் என்பதற்காவோ, என்னவோ, மற்ற அமைச்சர்களை எல்லாம் மிஞ்சி, 3,000 பேருக்கு, சுடச் சுட மட்டன் பிரியாணி விருந்து வழங்க, அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆம்பூரில் இருந்து, சிறப்பு குழுவை வரவைத்து, சென்னை, சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், நேற்று காலை, சுடச்சுட, 2,000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, மட்டன் பிரியாணி தயாரிக்கப்பட்டு, கோட்டையில் பரிமாறப்பட்டது.

பிரியாணியை, பாக்கெட்டில் அடைத்து, அட்டை பெட்டிகளில் அடைத்து, வேன்களில், ஏற்றிச் சென்றனர். பள்ளியில் தயாரிக்கப்பட்ட பிரியாணி, கல்வித்துறை அலுவலர்கள், ஊழியர்கள், கோட்டையில் பணியாற்றும் கல்வித்துறை பணியாளர்கள் உட்பட பல துறையினருக்கு வழங்கப்பட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்காக, தி.நகரில் உள்ள பிரபலமான ஒரு ஓட்டலில் இருந்து, தனியாக, 500 பிரியாணிக்கு, "ஆர்டர்' செய்து, பரிமாறப்பட்டதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பிரியாணி விருந்துக்காக, 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக செலவிட்டுருக்கலாம் என, கூறப்படுகிறது.-நமது நிருபர்-

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mirudan - kailaayam,இந்தியா
11-மே-201311:08:40 IST Report Abuse
mirudan இந்த செலவு யார் செய்வது ?
Rate this:
Share this comment
Cancel
p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா
11-மே-201311:03:28 IST Report Abuse
p.boopathy enkira Boopathiyar சட்ட சபை கூட்டம் மானிய கோரிக்கை விவாதம் அரசு துறைகள் உணவு விருந்து செலவை குறைக்க சென்னை மாநகராட்சி அம்மா உணவகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு தேவையற்று உணவு விருந்துகளை தவிர்க்க வேண்டும் -
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-மே-201309:31:17 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் பிரியாணி தயாரிக்கும் அண்டாக்களை கழுவி பலமாதங்கள் ஆகும்போல் தெரிகிறது..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
11-மே-201308:46:46 IST Report Abuse
Srinivasan Kannaiya இதுக்கெல்லாம் செலவு செய்ய காசு எப்பிடி வந்தது... ஆட்டையம் போட்டது... வேறு எங்கு இருந்து வந்தது..வீட்டில் இருந்த கொண்டு வந்தா கொட்ட போறாங்க ..அப்புறம் எப்படி ஒழுங்கா நடப்பாங்க..யார் கேட்கறது... உப்பிட்டவர்களை உயிர் உள்ள வரை நினைக்க வேண்டும் என்ற அடிப்படையில் யார் தப்பு செய்தாலும் யாரும் கேட்க போறதில்லை..
Rate this:
Share this comment
Cancel
Rajakhan Nk - Erode,இந்தியா
11-மே-201308:40:04 IST Report Abuse
Rajakhan Nk மக்கள் வரிப்பணம் படும் பாடு
Rate this:
Share this comment
Cancel
ulaganathan.maa - Thiruneelakudi ,இந்தியா
11-மே-201307:21:20 IST Report Abuse
ulaganathan.maa மக்களின் வரிப்பணம் இப்படி பிரியாணியாகிப் போகிறதே என்று அன்றாடம் அரை வயிறாக இருக்கிறானே,அவன் ஈனக்குரல் ஆள்வோரே உங்கள் காதுகளில் விழவில்லையா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-மே-201301:41:32 IST Report Abuse
தமிழ்வேல் சின்னவீடு, பெரிய வீட்டுக்கு மட்டும் வித்தியாசம் கிடையாது...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-மே-201301:40:47 IST Report Abuse
தமிழ்வேல் அது என்ன பாகுபாடு .... அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்காக, தி.நகரில் உள்ள பிரபலமான ஒரு ஓட்டலில் இருந்து, தனியாக, 500 பிரியாணிக்கு, "ஆர்டர்' செய்து, பரிமாறப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது ? இவர்களெல்லாம் உதாரண தாரர்கள் ஆயிற்றே ? பெரியவன் சிறியவன் , ஏற்றம் தாழ்வு, ஏழை பணக்காரன், கீழ் ஜாதி மேல் ஜாதி, மேல்மட்டம் கீழ் மட்டம், வெள்ளைக் காலர் கருப்புக் காலர், கருப்பு சிகப்பு எனும் வித்தியாசம் இன்னும் போகவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Kumar - Trichy,இந்தியா
11-மே-201301:34:32 IST Report Abuse
Kumar இன்னும் நெறைய பள்ளிகளில் ஆசிரியர்களே இல்ல. இதுல விருந்து வேற. இந்த 5 லட்சத்துல 2 ஆசிரியருக்கு ஒரு வருஷ சம்பளம் தரலாம்.பாவம் சாப்பாட்டுக்கே வழி இல்லாத இந்த சட்டசபை பிச்சைக்காரர்கள்
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-மே-201301:34:01 IST Report Abuse
தமிழ்வேல் நல்லா சாப்புடுங்க .. நம்ம காசா என்ன ? பிரியாணியோட, எதோ ஒன்னு குறையிற மாதிரி இருக்கு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்