E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
பதிவு செய்த நாள் : மே 10,2013,23:32 IST
கருத்துகள் (80)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

வட மாவட்டங்களில் நடந்து வரும் தொடர் வன்முறை சம்பவங்களை அடுத்து, வன்முறையை தூண்டும் வகையில் பேசிவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ., காடுவெட்டி குரு, தேசிய பாதுகாப்பு சட்டத்தில், அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமல்லபுரத்தில், கடந்த மாதம், 25ம் தேதி, பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், சித்திரை முழு நிலவு விழா நடந்தது.அப்போது, மரக்காணத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து, நீதி விசாரணைகேட்டு, விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, பா.ம.க., தலைவர் மணி மற்றும் வன்னியர் சங்க தலைவரும், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான காடுவெட்டி குரு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில், குரு, சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சித்திரை முழு நிலவு விழாவில், வன்முறையை தூண்டும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் பேசியதாக, காடுவெட்டி குரு மீது, வழக்கு பதியப்பட்டது. கடந்தாண்டும், இதே விழாவில், வன்முறையை தூண்டும் வகையில் அவர் பேசியிருந்ததால், அது தொடர்பான வழக்கும், குரு மீது போடப்பட்டது.மாமல்லபுரம் போலீசார், தனித்தனி வழக்குகளில், அவரை கைது செய்தனர்.

இந்த வழக்குகளில், ஜாமின் கேட்டு, அவர் தரப்பில் மனு அளிக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில், இம்மாதம், 6ம் தேதி, இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதற்கிடையே, இந்தாண்டு சித்திரை முழு நிலவு விழாவில், தங்கள் ஜாதிக்கு எதிராக, குரு பேசியதாக, விடுதலைச் சிறுத்தைகள், மாவட்ட துணைச்செயலர் கிட்டு, மாமல்லபுரம் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக, குரு மீது, ஜாதி மோதலை தூண்டும் விதமாக பேசியது, மற்றொரு ஜாதியினருக்கு மிரட்டல் விடுத்தது, ஒரு ஜாதியினரை, மற்றொரு ஜாதியினருக்கு எதிராக தூண்டியது, பெண்ணை கேவலப்படுத்தி பேசியது என, பல்வேறு பிரிவுகளின் கீழ், கடந்த, 6ம் தேதி, மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அன்றே கைது செய்தனர்.

அன்று மாலை, திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் அவரை, ஆஜர்படுத்தினர். இவ்வழக்கில், வரும், 17ம் தேதி வரை, அவரை சிறையில் அடைக்க,

மாஜிஸ்திரேட் சிவா உத்தரவிட்டார். தொடர்ந்து, கோர்ட் அனுமதி பெற்ற போலீசார், தங்கள் வசம் எடுத்து, அவரை விசாரித்து, மீண்டும் புழல் சிறையில்அடைத்தனர்.

இதையடுத்து, அவர் மீது, குண்டர் தடுப்பு அல்லது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயலாம் என, பேசப்பட்டது. அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, காஞ்சிபுரம் மாவட்ட, எஸ்.பி., சேவியர் தன்ராஜ், நேற்று, காஞ்சிபுரம் கலெக்டர் சித்ரசேனனிடம் பரிந்துரைத்தார். இதையேற்ற கலெக்டர், அவரை, தே.பா., சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, நேற்று மாலை, 3:30 மணிக்கு, உத்தரவிட்டார்.

கடந்த, தி.மு.க., ஆட்சி காலத்தில், வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக, தே.பா., சட்டத்தில் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார் குரு. மனுவை விசாரித்த ஐகோர்ட், "குரு மீதான தே.பா., சட்டம் செல்லும்' என்று உத்தரவிட்டது. அடுத்த சில மாதங்களிலேயே, அப்போதைய, தி.மு.க., அரசே, குரு மீதான தே.பா., சட்ட கைதை வாபஸ் பெற்றது. இந்நிலையில், தற்போது, மீண்டும் தே.பா., சட்டத்தில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 பேருக்கு குண்டாஸ்! பா.ம.க.,வினர் நடத்திய வன்முறை சம்பவங்களில், தர்மபுரி மாவட்டம், அரூரில் நடந்த, பாலம் தகர்ப்பு வழக்கில், தே.பா., சட்டத்தில், மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நான்காவதாக, வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவையும், தே.பா., சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

இது தவிர, சேலத்தில் மறியலில் ஈடுபட்ட,

Advertisement

பா.ம.க., மாநில இளைஞரணி செயலர் அருள், மாநகர் மாவட்ட செயலர் கதிர் ராஜரத்தினம்; ஊத்தங்கரையில் பஸ் எரிப்பில் சம்பந்தப்பட்ட, பழனி மற்றும் கண்ணன் ஆகியோர், நேற்று முன்தினம், குண்டர் சட்டத்தில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்டனர்.
தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், பருவாச்சி பஸ் உடைப்பு சம்பவத்தில், அந்தியூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட, ஒட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சண்முக குமார் மற்றும் தேவராஜ் ஆகிய இருவரும் நேற்று, குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

இது தவிர, நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், பா.ம.க.,வைச் சேர்ந்த அகோரம், மூர்த்தி ஆகியோரும், குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளனர். நேற்று இரவு வரை, பா.ம.க.,வைச் சேர்ந்த, எட்டு பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.தே.பா., சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

-நமது நிருபர்-




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (80)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumaresan P - Aranthangi,இந்தியா
12-மே-201301:02:29 IST Report Abuse
Kumaresan P சென்னை டூ கும்பகோணம் செல்லும் பேருந்துகள் (சேத்தியா தோப்பு, காடுவெட்டி, மீன்சுருட்டி ) ஆகிய இடங்களில் இரவுநேரங்களில் நிறுத்துவதற்கு மிகுந்த அச்சம் கொள்வார்கள்...காரணம் இந்த ஆளின் அட்டகாசம்... மேலும் இவரது பேரை சொல்லிக்கொண்டு இவரது உறவினர்கள் செய்யும் அட்டகாசங்கள் அதிகம்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
jayaraman - riyadh,சவுதி அரேபியா
11-மே-201315:02:05 IST Report Abuse
jayaraman தமிழக முதல்வர் தற்போது அடித்துள்ள இந்த சாதி வெறி விஷ பாம்புகளை விட்டுவிடாதீர்கள். இவனுங்க ஊருக்கு ஊர் செய்து வரும் கட்ட பஞ்சாயத்துக்கு அளவே இல்லை. திண்டிவனம் முதல் கும்பகோணம் வரை இவனுங்க அட்டகாசம் தாங்கமுடியவில்லை. இந்த பூனைகளுக்கு யார் மணி கட்டுவது என்று இருந்த நிலையில் துணிவாக தமிழக முதல்வர் எடுத்துள்ள எடுக்க போகும் நடவடிக்களைகளை மனதார பாராட்டுகிறோம். காடுவெட்டி குருவின் ஆட்களே கட்ட பஞ்சாயத்துக்களை தொடர்ந்து செய்து வருகிறார்கள் - இவர்களைப்போலவே விடுதலை சிறுத்தைகளும் இந்த பகுதிகளில் கட்ட பஞ்சாயத்து செய்துவருகிறார்கள் - ஓட்டுக்காக திமுக இவர்களை கண்டுகொள்வதில்லை - பாதிப்பு பொதுமக்களுக்கே. மீண்டும் முதல்வருக்கு நன்றி. ஜாமீனில் வெளிவரமுடியாத அளவில் தவறுகளை செய்துள்ளவர்கள் காடு வெட்டி குருவும் அவரது கும்பலும் இது உண்மை
Rate this:
11 members
2 members
125 members
Share this comment
Cancel
kannan kumar - chennai,இந்தியா
11-மே-201314:43:39 IST Report Abuse
kannan kumar முதுகெலும்பற்ற தமிழர்களே நடு நிலைமையோடு யோசியுங்கள். ஜால்ரா அடிக்காதீர்கள். மக்களுக்காக உழைக்கும் தலைவர்களை கொச்சைப்படுத்துவதை நிறுத்துங்கள். ஏன் தருமபுரி பஸ் எரிப்பு வழக்கு நாபகம் இல்லையோ இங்கு கருத்து கூறும் கருத்து கந்தசாமிகளே அப்படி தங்கள் கூறுவது சரி என்று கூறுபவர் சாதியினை வைத்து முன்னேற மாட்டேன் என்று கூற முடியுமா எப்படியோ கண்டிப்பாக தர்மம் வெல்லும்
Rate this:
75 members
0 members
23 members
Share this comment
Susil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-மே-201315:57:50 IST Report Abuse
Susilநான் சொல்கிறேன், இதுவரை சாதியை நம்பி ஒரு தேர்வு, வேலை என்று எதையுமே நான் தேடவில்லை. சாதியை நம்பி பிழைப்பு, வேலை தேடும் கோழைகளுக்கு தான் சாதி தேவைபடுகிறது. சாதி சனியனாக இருப்பதை விட கருத்து கந்தசாமியாக இருப்பது எவ்வளவோ மேல்....
Rate this:
4 members
0 members
54 members
Share this comment
Cancel
maheswarandarmalingam - KEELAIYUR,இந்தியா
11-மே-201313:12:09 IST Report Abuse
maheswarandarmalingam ஏன் கலவரத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் அப்பாவிகள். 1/4க்கு வேலை செய்பவர்கள். அவர்களுக்கு பினனால் இருக்கும் அனைவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்யவும்.
Rate this:
3 members
0 members
20 members
Share this comment
Cancel
sairam - muscat,ஓமன்
11-மே-201313:07:22 IST Report Abuse
sairam அந்தாளு பேரை பாரு... பாஸ் வெளிய வரும் போது பேர மாத்தி விடுங்க... புல்லுவெட்டி குரு....
Rate this:
4 members
0 members
57 members
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
11-மே-201313:04:56 IST Report Abuse
Divaharan கூண்டுக்குள் எதையோ பிடித்து அடைத்தது போல் இருக்கிறது
Rate this:
2 members
0 members
48 members
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
11-மே-201312:53:51 IST Report Abuse
Sham இவரைப்போன்ற நபர்கள் மீது, அவர்கள் எந்த கட்சி, எந்த ஜாதியாக இருந்தாலும் சரி .... சிறிதும் தயவு, தாட்சண்யம் பார்க்காமல் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்... சமூக நல்லிணக்கத்தை பேணிக்காப்பது அரசின் முதல் கடமையாக கருத வேண்டும்...
Rate this:
4 members
0 members
35 members
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
11-மே-201312:48:37 IST Report Abuse
Baskaran Kasimani இராமதாஸ் போன்ற "நல்ல" மனிதர்களை மட்டும் ஏன் ஒன்றும் செய்யாமல் வழக்கு மட்டும் போட்டு விட்டு விடுகிறார்கள்?
Rate this:
3 members
1 members
29 members
Share this comment
Cancel
Raja - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-மே-201312:46:25 IST Report Abuse
Raja இவர் காடுவெட்டியா இருந்தால் காட்டுககுள்ளேயே இருக்கட்டும்
Rate this:
4 members
0 members
44 members
Share this comment
Cancel
Mohamed Nawaz - Sakaka,சவுதி அரேபியா
11-மே-201312:40:51 IST Report Abuse
Mohamed Nawaz ஜாதி, மத வெறியர்கள் ஊழல் அரசியல்வாதிகளைவிட மோசமானவர்கள். ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காக அதன் முன்னேற்றத்திற்காக பாடுபடுவது தவறில்லை ஆனால் வேறொரு சமூகம், ஜாதி அல்லது மதம் இவற்றை பிரித்து அதில் அரசியல் லாபம் தேட முயற்சி செய்யும் மாநில கட்சி அல்லது தேசிய கட்சி எதுவானாலும் கொடிய விஷமே.இவற்றை துடைத்தெறிய வேண்டியது பொது மக்களின் பொறுப்பு.
Rate this:
4 members
0 members
38 members
Share this comment
Chandru K - Paris,பிரான்ஸ்
12-மே-201301:46:52 IST Report Abuse
Chandru K///சாதி மத வெறியர்கள்....... ஊழல் அரசியல்வாதிகளைவிட மோசமானவர்கள்/// நூற்றில் ஒரு வார்த்தை, இரு வரிகளே என்றாலும், குறள் மாதிரி சும்மா நச்சுன்னு சொன்னீங்க சகோதரரே....... கருணாநிதியை விட......... இந்த ராமதாஸ் அன்புமணி காடுவெட்டி குரு (இதில் பட்டம் வேற..... தாள முடியல....) திருமா போன்றவர்கள் மோசமானவர்கள் பயங்கரமானவர்கள்..... தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் ஜனநாயக முறைப்படி தங்கள் எதிர்ப்பை கோவத்தை வர தேர்தலில் இந்த சாதி வெறி பிடித்த கட்சிகள் இவர்களுடன் கூட்டணி அமைத்த கட்சிகள் இருக்கிற இடமே இல்லாமல் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்....... இவர்கள் ஆடிய வன்முறையால் அரஜாகத்தல் பட்டு போன மரங்கள், எரிக்க பட்ட பேருந்துகள், பாதிக்கப்பட்ட பொது மக்கள், செத்து போன ஆன்மாக்கள் இவைகளுக்கு உவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.... சாதி எனும் வெறியை வன்னிய இளைஞர்களுக்கு எற்றி அவர்களுடைய எதிர்காலத்தை பாழாக்கியதுக்கும் சேர்த்து பதில் சொல்லியே தீர வேண்டும் நன்றி முஹம்மத் நவாஸ்...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.