E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கர்நாடக எம்.எல்.ஏ.,க்களில் 200 பேர் கோடீஸ்வரர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

12 மே
2013
00:44
பதிவு செய்த நாள்
மே 10,2013 23:49

பெங்களூரு:கர்நாடக சட்டசபைக்கு, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள, 223 எம்.எல்.ஏ.,க்களில், 200க்கும் மேற்பட்டோர், கோடீஸ்வரர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

புள்ளிவிவரங்கள் :கர்நாடகாவில், சமீபத்தில் நடந்து முடிந்த, சட்டசபை தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் சொத்து விவரம் குறித்து, தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. அதில், கிடைத்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன.கடந்த, 2008ல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க்களுடன் ஒப்பிடும் போது, 2013ம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட, எம்.எல்.ஏ.,க் களின் சராசரி சொத்து மதிப்பு, 135 சதவீதம் உயர்ந்துள்ளது. 2008ல், எம்.எல்.ஏ.,க்களின் சராசரி சொத்து மதிப்பு, 10.02 கோடி ரூபாயாக இருந்த நிலையில், இப்போது, 23.54 கோடி ரூபாயாக உள்ளது.
ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 218 எம்.எல்.ஏ.,க்களில், 203 பேர், அதாவது, 93 சதவீத, எம்.எல்.ஏ.,க்கள், கோடீஸ்வரர்கள். 2008ல், 63 சதவீதம் பேர் மட்டுமே கோடீஸ்வரர்களாக இருந்தனர்.நடந்து முடிந்த தேர்தலில், 92 பேர் மீண்டும், எம்.எல்.ஏ.,க்களாகி உள்ளனர். அவர்களின் சராசரி சொத்து மதிப்பு, 72 சதவீதம் உயர்ந்து, 30.15 கோடி ரூபாயாக உள்ளது; இது, 2008ல், 17.53 கோடி ரூபாயாக இருந்தது.
பல மடங்கு சொத்து:கடந்த, 2008ல் இருந்து, 2013 வரை, எம்.எல்.ஏ.,க்களாக இருந்தவர்களில், பல மடங்கு சொத்து மதிப்பு உயர்ந்தவர்கள் பட்டியலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ., சிவகுமாரின் சொத்து, 75.5 கோடி ரூபாயிலிருந்து, 251 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மற்றொரு காங்கிரஸ் வேட்பாளர், பிரியகிருஷ்ணனின் சொத்து மதிப்பு, 767 கோடி ரூபாயிலிருந்து, 910 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
கர்நாடக, எம்.எல்.ஏ.,க்களில், இவர் தான், மிகப் பெரிய கோடீஸ்வரர் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தல், கொள்ளைகுற்றப் பின்னணி உடைய, எம்.எல்.ஏ.,க்களில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 218 பேரில், 74 பேர், கொலை, கடத்தல், கொள்ளை, பெண்கள் மீது தாக்குதல் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.மேலும், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், கொலை வழக்கிலும், 11 பேர், ஊழல் வழக்குகளிலும் சிக்கியிருப்பவர்கள். அது போல், கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட, 218 எம்.எல்.ஏ.,க்களில், ஐந்து பேர் தான், பெண்கள்; இது, 2 சதவீதம். 2008 சட்டசபையில் இது, 3 சதவீதமாக இருந்தது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (34)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chenduraan - kayalpattanam,இந்தியா
11-மே-201313:54:35 IST Report Abuse
Chenduraan MLA MP பதவிகள் எல்லாம் இப்போது பெரிய வியாபார நிறுவனத்தில் மூலதனம் போடுவது மாதிரி, போட்ட பணத்தை ஒருவருடத்தில் பலமடங்கு லாபம் பார்ப்பது இந்த தொழில்தான். நீதி நேர்மை எல்லாம் மலை ஏறிப்போச்சு, இதற்கு காரணம் நம்முடைய குறுகிய மனப்பான்மைதான். யாராவது நல்லவன் யார் என்று ஓட்டு போடுகிறோமா ? யார் நம்ம ஜாதிக்காரன், யார் நம்ம மதத்தை சேர்ந்தவன் என்ற எண்ணத்திலும் யார் அதிகம் பணம் கொடுக்கிறார்களோ (இலவசம்) அவர்களுக்கு ஓட்டு போட்டால், நம்முடைய வாழ்வாதார தரம் 145இல் இருந்து 165 ஆக போவது வெகு தூரத்தில் இல்லை. கர்நாடக mla க்களை சொல்லும் நாம் நம்முடைய சொம்புகளையும் அல்லக்கைகளையும் யோசித்து பாருங்கள்
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
Wilsonsam Sp - bobigny,பிரான்ஸ்
11-மே-201312:12:30 IST Report Abuse
Wilsonsam Sp இதில் என்ன ஆச்சர்யம் வேண்டும். எம் எல் ஏ ஒன்னும் காமராசர் இல்லை. மக்களும் காசுகாஹா ஒட்டு விற்கிறாங்க. பிறகு அவன் திருடாம என்ன செய்வான்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Sankara Narayanan - Bangalore,இந்தியா
11-மே-201311:34:47 IST Report Abuse
Sankara Narayanan தேர்தலுக்கு முன்பே லபக்கி விட்டர்களோ
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
11-மே-201311:22:33 IST Report Abuse
amukkusaamy "கடத்தல், கொள்ளைகுற்றப் பின்னணி உடைய, எம்.எல்.ஏ.,க்களில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட, 218 பேரில், 74 பேர், கொலை, கடத்தல், கொள்ளை, பெண்கள் மீது தாக்குதல் போன்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். மேலும், ஐந்து எம்.எல்.ஏ.,க்கள், கொலை வழக்கிலும், 11 பேர் ஊழல் வழக்குகளிலும் சிக்கியிருப்பவர்கள்". இத்தனை பேரையும் அனுமதித்த தேர்தல் ஆணையத்துக்கு என்ன அதிகாரம் உள்ளது? மக்களாகிய நாம் இவற்றை கணக்கில் எடுக்காது சாதியையும், பணமும் நம்மை ஏன் இப்படி அடக்கியாள அனுமதிக்கிறோம்?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Dhanabal - Thoothukudi,இந்தியா
11-மே-201311:12:10 IST Report Abuse
Dhanabal அந்த நாளில் முதலமைச்சர் ஆக சுமார் 10 ஆண்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்த காமராஜர் தனது வாழ்நாள் முழுமையும் வாடகை வீட்டில்தான் வாழ்ந்தார். அது போல சுமார் 15 ஆண்டுகள் காவல்துறைக்கு அமைச்சராக இருந்த கக்கன் தனது வாழ்நாளின் இறுதியில் நோய்வாய்பட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் வரண்டாவில் விரிக்கப்பட்ட பாயில் படுத்து சிகிச்சை பெற்றார். பத்திரிகைகள் அவரது பரிதாப நிலையை எழுதியதை அறிந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். இப்படி தன்னலமற்ற தலைவர்கள் வாழ்ந்த நாடு இது. ஆனால் இன்று கவுன்சிலர் பதவிக்கு வருவோரே ஒரு சில கோடிகளை சம்பாதிக்கும் போது எம்.எல்.ஏ.க்கள் பல கோடிகளுக்கும், அமைச்சர்கள் பலநூறு கோடிகளுக்கும் அதிபதிகளாக இருப்பதில் வியப்பில்லை. நமது நாடு வெள்ளையர்களால் சுரண்டப்பட்டதை விட நமது அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டதுதான் மிக மிக அதிகம்...
Rate this:
0 members
0 members
5 members
Share this comment
Cancel
amukkusaamy - chennai,இந்தியா
11-மே-201311:06:07 IST Report Abuse
amukkusaamy புத்தன் இயேசு காந்தி பிறந்தது பூமியில் எதற்க்காக? தோழா ஏழை நமக்காக. கோடியில் புரளும் MLA மந்திரி எல்லாம் இந்தியாவில் எதற்காக? தோழா நம்மை மொட்டை அடிப்பதற்காக.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
mirudan - kailaayam,இந்தியா
11-மே-201310:53:48 IST Report Abuse
mirudan நம்ம டி கடை மாஸ்டர் எத்தனை கோடிகளுக்கு சொந்தகாரர் ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Radheshyam - Chennai,இந்தியா
11-மே-201310:28:41 IST Report Abuse
Radheshyam ஆயியரம் ரூபாவிற்கும், ஐநூறு ரூபாவிற்கும் வோட்டை விற்கும் முட்டாள்கள் இருக்கும்வரை இப்படிக் கொடீச்வரர்கள்தான் MLA ஆக முடியும்.
Rate this:
0 members
0 members
3 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
11-மே-201310:20:07 IST Report Abuse
பி.டி.முருகன்    இன்னும் பல கோடிகள் சேர்த்து கோடீஸ்வரர் லிஸ்ட்டில் தங்களது பெயரை தக்க வைத்து கொள்ள போகிறார்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - தோஹா,கத்தார்
11-மே-201309:06:42 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சாத்தான்குளம் தொகுதி இடைதேர்தலில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவர் திடீரென வேட்பாளர் ஆக்கப்பட்டு mla வும் ஆனாரே..மிஸ் ஜெ கூட செல்லக்குட்டி தொகுதி என்று கூறிய அந்த தொகுதியின் முன்னாள் mla வின் இப்போதைய சொத்து மதிப்பு என்ன? தெரிந்தவர்கள் கூறுங்களேன்..
Rate this:
3 members
0 members
15 members
Share this comment
முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா
11-மே-201313:50:51 IST Report Abuse
முருகவேல் சண்முகம்..///சுலைமான் - தோஹா,கத்தார் - சாத்தான்குளம் தொகுதி இடைதேர்தலில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தவர் திடீரென வேட்பாளர் ஆக்கப்பட்டு mla வும் ஆனாரே./// அந்த தேர்தலில் தானே.. அண்ணன், அன்றைய ஆளுங்கட்சியிக் அமைச்சராக இருந்து.. லட்டுக்குள் மூக்குத்தி கொடுத்து புது கலாச்சாரத்தை ஏற்படுத்திய தேர்தல்.. இந்த சாத்தான்குள தேர்தல்......
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.