After Railway Minister Pawan Kumar Bansal, Law Minister Ashwani Kumar resigns | அமைச்சர்கள் பன்சால், அஸ்வனி குமார் நீக்கம் பிரதமரிடம் ராஜினாமா கடிதம் | Dinamalar
Advertisement
அமைச்சர்கள் பன்சால், அஸ்வனி குமார் நீக்கம் பிரதமரிடம் ராஜினாமா கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி:உறவினர் லஞ்சம் வாங்கிய விவகாரத்தால் சர்ச்சைக்குள்ளான, ரயில்வே அமைச்சர், பவன்குமார் பன்சாலும், நிலக்கரி ஊழல் தொடர்பான,சி.பி.ஐ., விசாரணை அறிக்கையை திருத்தியதால், மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரும், நேற்று பதவி நீக்கம் செய்யப்பட்டனர். வலுக்கட்டாயத்தின் பேரில், இருவரும் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர்.

"பன்சாலையும், அஸ்வனி குமாரையும் நீக்கினால், பார்லிமென்ட் சுமூகமாக நடைபெற ஒத்துழைக்கிறோம்' என, பா.ஜ., உட்பட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியும், கடந்த இரண்டு நாட்களாக மத்திய அரசு பிடிவாதமாக இருந்தது. இறுதியில், ஒரு வழியாக மத்திய அரசு, இருவரையும் நீக்கும் முடிவுக்கு வந்தது. இதற்கு, சி.பி.ஐ., மற்றும் சோனியாவின் நடவடிக்கைகளே காரணம்.
ரயில்வே வாரிய உறுப்பினராக இருக்கும், மகேஷ் குமார்,ரயில்வே அமைச்சர், பன்சாலின் உறவினர், விஜய் சிங்லா என்பவருக்கு, 90 லட்சம் ரூபாய் கொடுத்த போது, சி.பி.ஐ.,யிடம் சிக்கிக் கொண்டார். லஞ்ச பேரம், பன்சால் வீட்டில் வைத்து தான் நடந்துள்ளது என்பது உறுதிபடுத்தப்பட்டதால், பன்சாலுக்கும் தொடர்பு இருக்கும் என்பது, சி.பி.ஐ.,யின் வாதம்.
அமைச்சர் பன்சாலின் தனிச் செயலராக இருக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராகுல் பண்டாரியிடம், சி.பி.ஐ., நடத்திய விசாரணைக்கு பின், பன்சாலின் பிற ஊழல் விவகாரங்களும் வெளி வந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்தே பிரதமரும், பன்சாலை நீக்கும் முடிவுக்கு வந்தார். இதை அறிந்து கொண்டதால், நேற்று முன்தினம் நடந்த, மத்திய அமைச்சரவை கூட்டத்தை, பன்சால் புறக்கணித்தார்.

கூட்டணி கட்சிகள் வசம் இருந்த, ரயில்வே துறையை, 16 ஆண்டுகளுக்குப் பிறகு போராடி பெற்ற, காங்கிரஸ், சில மாதங்களுக்கு முன் தான், பன்சாலிடம் ஒப்படைத்தது. அதற்குள், அவரும், அவரின் குடும்பத்தினரும், ஏராளமான முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
தொடர் நெருக்கடி:இதற்கு முன், நிதித் துறை இணையமைச்சராக, பன்சால் இருந்த போது, பொதுத்துறை வங்கி ஒன்றிலிருந்து, பல கோடி ரூபாயை, பன்சாலின் குடும்ப உறுப்பினர்களின் நிறுவனங்களுக்கு கடனாக வழங்க, பன்சால் உத்தரவிட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.விஜய் சிங்லா விவகாரம் மற்றும் பொதுத்துறை வங்கி கடன் விவகாரம் குறித்து, பன்சாலிடம், சி.பி.ஐ., எந்த நேரமும் விசாரணை மேற்கொள்ளலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பன்சால், அஸ்வனி விவகாரத்தை முடிவுக் கொண்டுவருவது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா நேற்று பிரதமரை சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்கு, இருவரையும் நீக்குவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்பட்டன. பன்சால் நேற்று ரயில்வே அமைச்சக அலுவலகத்துக்கு வந்து, சென்றதுமே, பதவி விலகப்போவது உறுதியாகிவிட்டது. இருவரையும் பதவியிலிருந்து விலகும்படி, மேலிடத்தில் இருந்து உத்தரவு சென்றது.

இதையடுத்து, நேற்று இரவு, முதலில் பவன் குமார் பன்சால், பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பான சி.பி.ஐ., அறிக்கையை திருத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட அஸ்வனி குமார் வேறு இலாகாவுக்கு மாற்றப்படுவார் என்று தான் பேசப்பட்டு வந்தது.ஆனால், நேற்று இரவு, அவரும் பிரதமரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்த பிறகுதான் அவரும் நீக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

கார்கேக்கு வாய்ப்பு: இதற்கிடையில், பன்சாலுக்கு பதில், அடுத்த ரயில்வே அமைச்சர் என்ற கேள்வி எழுந்தது. இது பற்றி, நாளை கூடும் காங்கிரஸ் உயர்மட்ட கமிட்டி கூட்டத்திற்கு பின் முடிவு செய்யப்படும் என, தெரிகிறது. கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு போட்டியிட்டு வாய்ப்பை இழந்த, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகா கார்ஜுன கார்கே, அடுத்த ரயில்வே அமைச்சர் என, பேச்சு அடிபடுகிறது.கார்கேயை சாந்தப்படுத்தும் வகையிலும், கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு பிரதிபலனாக இந்த மாற்றம் இருக்கும் என, கூறப்படுகிறது.

"காவு' வாங்கும் ரயில்வே துறை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2வது முறையாக, 2009 மே மாதம் ஆட்சிக்கு வந்தது. ரயில்வே துறையில் மட்டும், நான்கு ஆண்டுகளில், நான்கு அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

முதலாவதாக, 2009 மே, 26ல் ரயில்வே அமைச்சராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். 2011 மே மாதம், மேற்கு வங்கத்தில் மம்தாவின் திரிணமுல் காங்., ஆட்சியை பிடித்தது. இதையடுத்து, முதல்வராக பதவியேற்ற அவர், ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.மம்தாவுக்கு பதிலாக, அவரது திரிணமுல் காங்., கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி, ரயில்வே அமைச்சரானார். 2012ல் இவர் தாக்கல் செய்த ரயில்வே பட்ஜெட்டில், கட்டணம் உயர்த்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. கட்டணத்தை குறைக்குமாறு, தினேஷ் திரிவேதியை மம்தா வலியுறுத்தினார். அவர் மறுத்ததால், பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மூன்றாவதாக, மம்தா கட்சியை சேர்ந்த முகுல்ராய் புதிய ரயில்வே அமைச்சரானார். 2012 செப்., மத்திய அமைச்ச ரவையின் மானிய விலை சிலிண்டரின் எண்ணிக்கை குறைத்ததால் எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐ.மு.கூட்டணியில் இருந்தும் திரிணாமுல் காங்., வாபஸ் பெற்றது. இதனால், முகுல்ராய் ராஜினாமா செய்தார். இதன்பின் காங்., கட்சியைச் சேர்ந்த பவன்குமார் பன்சால், 2012 அக்., 28ல், ரயில்வே அமைச்சரானார். வந்த, 6 மாதத்திலேயே, இவரது மருமகன் ரயில்வே துறையில், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பன்சால் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
11-மே-201310:18:54 IST Report Abuse
R Bala Sundaram நம் நாட்டை வல்லரசாக மாற்றுவோம் என்று சொல்லிவிட்டு, மத்திய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் வீட்டை வல்லரசாக மாற்றி கொண்டதை இந்த சம்பவங்கள் காட்டிகொடுக்கின்றன .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
11-மே-201309:37:45 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சிதம்பரத்தை ரயில்வே அமைச்சர் ஆக்கலாம்...
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
11-மே-201308:59:44 IST Report Abuse
K.Balasubramanian கூட்டணி வசமிருந்து தன் கட்சிக்கு வந்த உடன் தொடங்கிய லஞ்சம் அகற்றப்பட்டு ரயில் நிர்வாகம் நல்லபடி பயணிகள் நலன் பேணி அமையட்டும் .மந்திரி பதவி வேண்டாத துறை இது .
Rate this:
0 members
0 members
2 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201308:17:41 IST Report Abuse
kumaresan.m " மன்மோகன் சிங்க் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி ஊழலின் காரணமாக இந்திய வரலாற்றில் மிகப்பெரிய கருப்புள்ளியை ஏற்படுத்திவிட்டது ....இதனை இருண்ட காலம் என்பதை விட இருண்ட வருடங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் "
Rate this:
1 members
0 members
7 members
Share this comment
Cancel
B.J.P. MADHAVAN - chennai ,இந்தியா
11-மே-201308:16:47 IST Report Abuse
B.J.P. MADHAVAN திருச்செந்தூர் முருகனை தரிசித்துவிட்டு கடந்த ஜனவரி 3 ஆம் தேதியன்று இரவு திருசெந்தூர் சென்னை விரைவு ரயிலில் சென்னைக்கு திரும்பினேன். அந்த ரயிலில் எங்களோடு 10 பேர்கள் கொண்ட குடும்பம் ஒன்றும் பயணம் செய்தது. அவர்கள் பயண முன் பதிவு செய்தது இரண்டு பாகமாக இருந்தது. அந்த இரண்டு பாகத்தில் உள்ள நபர்களில் ஒருவருக்கு மட்டும் தான் ஐ.டி. கார்டு இருந்தது. அது பெரிய குற்றம் என்று கூறிய டி.டி.ஆர். பெரிய வாக்குவாதத்திற்கு பிறகு ரூபாய் 2,000/- ஐ அபராதமாக வசூலித்தார். இப்படி இருக்க அந்த வாரியத்தில் இவ்வளவு பெரிய பதவியில் இருக்கும் இந்த பதவி இழந்த அமைச்சருக்கு நாடு என்ன அபராதம் விதிக்க போகிறது?
Rate this:
0 members
0 members
14 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
11-மே-201308:13:10 IST Report Abuse
kumaresan.m " அமைச்சர்களை மாற்றிவிட்டால் செய்த ஊழல்கள் மறைந்து விடுமா ? .....அமைச்சர்களை மாற்றுவதற்கு பதிலாக பிரதமரை மாற்றுங்கள் ....தலைமை கண்டிப்புடன் செயல்படாவிட்டால் சகாக்கள் ஏனோ தானோ என்றுதான் இருப்பார்கள் "
Rate this:
1 members
0 members
8 members
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
11-மே-201307:13:24 IST Report Abuse
Pannadai Pandian இவர்கள் எல்லாம் நம் தலைவர்கள். மக்கள் நம்பிக்கொண்டிருப்பது இவர்கள் மக்களுக்காக உழைக்கிறார்கள் என்று. செய்வதோ முழு மூச்சு தேச துரோக, சமூக விரோத திருட்டுச்செயல். வெக்கி தலை குனிய வேண்டும். இவர்கள் அரசியலில் இருப்பதால் தான் நல்லவர்கள் அரசியல் பக்கம் தலை வைத்து படுக்க மாட்டேன் என்கிறார்கள்.
Rate this:
0 members
0 members
6 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
11-மே-201306:32:04 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி அதிருப்தியில் இருக்கும் கர்நாடக கார்கே, தரம் சிங் இருவருக்கும் உடனடியாக ஏதாவது முக்கியத்துவம் தேவை - அதற்கான ஏற்பாடு இது..
Rate this:
1 members
0 members
4 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-மே-201304:56:16 IST Report Abuse
villupuram jeevithan பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது சரியாகிவிட்டதே? திருடி எப்போதோ?
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
11-மே-201304:55:43 IST Report Abuse
villupuram jeevithan நிதித் துறை இணையமைச்சராக பன்சால் இருந்த போது மாட்டிக் கொள்ளவில்லை, ரயில் வந்ததும் தடம் புரண்டுவிட்டதே?
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்